கடித்த உடனே உயிர் பிரியும் அளவிற்கு விஷம் கொண்டுள்ள பாம்புகள்

கடித்த உடனே உயிர் பிரியும் அளவிற்கு விஷம் கொண்டுள்ள பாம்புகள் 
பாம்புனா படையே நடுங்கும்னு சும்மாவா சொல்றாங்க ! போன வாரம் எங்க ஊட்டுப்பக்கம் ஒரு பாம்பு வந்துச்சு ! யாரவது அடிக்க வாங்கனு சொன்னா எல்லா மக்களும் தெரிச்சுசுட்டாங்க!
நம்ம எல்லார்க்குமே பாம்புனா ஒரு பீதி இருக்க தான் செய்யுது !
இந்த லிஸ்ட்ல இருக்க எந்த பாம்பும் நம்மள கடிச்சற கூடாதுன்னு ஆண்டவன வேண்டிகிட்டு வாங்க பாக்கலாம்.

10ரெட்ட்ல் சினேக் 

உடம்போட வால் பகுதில மட்டும் வரியுள்ள இந்த பாம்பு ,யாரவது கிட்ட வந்தாலோ இல்ல அது இருக்க பக்கம் நடந்து போனாலோ ஒரு வகையான சத்தம் போடுமாம் .இந்த பாம்புக்கு சொந்த ஊரு அமெரிக்காவாம்.
இந்த பாம்பு கடிச்சு ஒரு வருசத்துல மட்டும் 5000 பேரு செத்துருக்காங்கலாம்.லிஸ்ட்ல பத்தாவது இடத்துல இருக்க இந்த பாம்பே 5000 பேத போட்டு தள்ளிருக்குனு சொன்ன மத்ததெல்லாம் ! அப்பா !

9டெத் எதர் 

பேர்லயே 'டெத்" னு வச்சு இருக்காங்கன காரணம் இல்லாமய இருக்கும். உலகத்துலேயே அதிக வேகத்துல கொத்தக்கூடிய முதல் பாம்பு நம்ம டெத் எதர் தான்.இது கொத்துன்னு சில நொடிகளிலேயே உடல் உருகுலஞ்சு போயுடுமாம்.
இந்த பாம்போட சொந்த ஊரு ஆஸ்திரேலியா.

8வைபர்டே

இந்த வைபர்டே பாக்குறதுக்கு  சின்ன தான் இருந்தாலும் அதிக விஷம் கொண்டது.அதிக ஆழமா தனது எதிரிய கொத்தி உயிரை எடுக்கக்கூடியது.

7பிலேபைன் கோபுரே 

இந்த நாக பாம்புக்கு சொந்த ஊரு பிலிப்பைன் .இதன் விஷம் உடம்பிற்குள் புகுந்தால் நரம்பு மண்டலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மூளை செயல்பாட்டை இழக்கும். அணைத்து பாம்பின் விஷத்திலும் ஓரளவாவது விசமில்லாத சில வேதிப்பொருட்கள் இருக்கும் ஆனால் இந்த பாம்பின் விஷத்தில் நூறு சதவீதம் விஷம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6டைகர் சினேக் 

பாக்குறதுக்கு ,உடம்பு முழுவதும் வரி வரியாக இருப்பதாலோ என்னவோ இந்த பாம்பிற்கு டைகர் சினேக் என்று பெயரிட்டுள்ளனர்.மற்ற பாம்புகளை காட்டிலும் இது வித்யாசமான நிறத்தை கொண்டுள்ளது.இந்த பாம்பு கடித்தால் கழுத்து வலி , சுவாச பாதிப்பு , மயக்கம் மற்றும் காலில் வலி இருக்கும் .
கணக்கெடுப்பின் படி இந்த பாம்பு கடிக்கு மருந்து வேலை செய்யாமல் 60 சதவீத மக்கள் இறந்துள்ளனர்.

5பிளேக் மாம்பா 

இந்த பாம்பு ஆப்ரிக்காவில் தான் அதிகம் வாழ்கிறது .இந்த பாம்பிற்கு மட்டும் தான் அதன் நாக்கு கருப்பாக இருக்கும் அதனாலேயே இந்த பாம்பிற்கு இந்த பெயர்.மிகவும் அதிக விஷம் கொண்ட இந்த பாம்பு கடித்தால் 45 நிமிடத்திற்குள் மருத்துவ உதவி அளிக்கப்படாவிட்டால் உடனடியாக இறந்துவிடுவர்.ஆப்ரிக்காவில் 7-15 மணி நேரத்திற்குள் ஒரு உயிரிழப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

3ப்ளூ கிரைட்

சமீபத்தில் இந்தியாவில் உள்ள அதிக விஷம் கொண்ட நான்கு பாம்புகளின் பட்டியலில் இந்த பாம்பும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.உடல் முழுவதும் வரிகளையும் மற்றும் மிகவும் கருப்பான நிறத்தில் தலையையும் கொண்டுள்ளது.
இது சாதாரண  நாகப்பாம்பின் விசத்தை காட்டிலும் பதினைந்து தடவை அதிக விஷம் கொண்டுள்ளது.

2ஈஸ்டர்ன் ப்ரௌன் சினேக் 

உலகத்திலேயே அதிக விஷம் கொண்ட இரண்டாம் பாம்பு இது .பாம்பின் விசத்தை அளவிடுவதற்கு உபயோகபடுத்தும் அளவீடு "லேதல் தோஸ்".இந்த அளவீட்டில் இந்த பாம்பிற்கு 50 லேதல்  தோஸ் விஷம் உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

1இன்லெண்ட் தைப்பான்

நாம் பட்டியல வெளியான அனைத்து பாம்புகளை காட்டிலும் இந்த பாம்பிற்கு அதீத விஷம் கொண்டது . இதன் லேதல் தோஸ் அளவீடு 60 கும் மேலாகும்.இது வச்ச குறி எப்போதுமே தப்பியதில்லை என்றே கூறலாம் .அதிக வேகம்,அதிக நீளம் ,குறி தவறாமை , அதிக விஷம் என எல்லா பாம்பின் குணாதிசயங்களிலும் முதல் இடம் வகிக்கிறது .
இந்த பாம்பு கடித்து 35 நிமிடத்திற்குள் இறந்துவிடுகின்றனர் சரியான நேரத்தில் மருத்துவ உதவி பெறாவிட்டால் !
இந்த பாம்பினால் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் ஒரு துளி விஷம் 100 மனிதர்களை கொள்ளும் அளவிற்கு விசத்தன்மை கொண்டுள்ளது.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.