கீழடி (வைகைக்கரை நாகரிகம்) பகுதி 2

வைகை கரை நாகரிகம் நாகரிகம்

வைகை கரை நாகரிகம் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று அதனை பற்றி ஆராய மத்திய அரசு தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொள்ள 2013-2014 இல் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆராய்ச்சி தொடங்குகிறது.

அதன் பின்னர் 260 கிலோ மீட்டர் மீட்டர் நீளமுள்ள இந்த வைகை ஆற்றின் இரு கரைகளிலும் திராவிடர்களின் நாகரிக தோன்றல்களின் ஆதாரங்கள் இருப்பதை கண்டு ஆய்வினை மேலும் விரிவுபடுத்த நினைக்கிறார்.

அதன் தொடக்கமாக வைகையின் மூல இடத்தை ஆய்வு செய்ய 35 கிலோமீட்டர் பயணம் செய்கிறார் . அதன் பின்பு ஆறு கிலோமீட்டர் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு ஒரு மலைக்கிராமம் அங்கு சென்று அங்குள்ள மக்களிடம் விசாரிக்கத் தொடங்கினார்.

அவர்களிடம் கேட்கும் போது இங்கு ஏதாவது பழைய பொருட்களை கண்டதுண்டா பூமிக்கு அடியில் உள்ள இடங்களில் ஏதாவது என்று வினவியதற்கு ஒரு முதியவர் நான் இந்த வீட்டை அமைக்கும்போது எனக்கு ஒரு பானை கிடைத்தது என்று அதனைக் கொண்டுவந்து கொடுத்தார்.

அதை பார்த்த அவருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் ஏனென்றால் அந்தப் பானை சுமார் 2000-2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது அதுமட்டுமில்லாமல் அதில் வர்ண பூச்சிகளும் தமிழ் எழுத்துக்களும் இருப்பது கண்டு மேலும் வியப்படைகிறார். இது அவருக்கு உற்சாகமூட்டவே தனது ஆய்வை துரிதப்படுத்துகிறார்.

ஆய்வில் கிடைத்தவை

ஆய்வில் இதுவரை 5200 பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றுள்பல பானைகளும் யானை தந்தங்களினால் ஆன சீப்புகள், தாயக் கட்டைகள் மற்றும் சதுரங்க காய்கள் மேலும் ஆபரணங்கள் கிடைத்துள்ளன.

அவற்றுள் மிக முக்கியமானது வைகறையின் இறுதியில் அமைந்துள்ள அழகர் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பானையில் கிரேக்கக் கப்பலின் மாதிரி வரைய பட்டிருப்பதே!.

உங்களுக்குத் தோன்றலாம் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஒரு கப்பலின் மாதிரியை வரைவதற்கு அவர்கள் அந்தக் கப்பலினை கண்டிப்பாக பார்த்து இருக்க வேண்டும். எனவே அங்கு ஒரு துறைமுகம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது இதற்கு சான்றாக ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளர் தாலமி தனது குறிப்பில் அருகுரு துறைமுகம் எனக் குறிப்பிட்டுள்ளார் அதுவே அருகர்குளம் எனப்பட்டது பின்னாளில் அதுவே திரிந்து அழகர் குளம் எனப் பெயர் பெற்றது. வைகைக்கரை நாகரிகமானது சிந்து சமவெளி நாகரிகத்தை விட தொன்மையானதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கீழடி அதன் சிறப்பு  பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.