கருந்துளை(Black Hole) என்பது என்ன அது பற்றி தெரிந்துகொள்வோமா?

கருந்துளை என்பது அண்டத்தில் உள்ள ஒரு பகுதி ஆகும். இது உருவானது எப்படி தெரியுமா நமது சூரியனை போன்று 20 மடங்கு நிறை கொண்ட ஒரு நட்சத்திரமானது அதன் ஆயுட்காலம் முடிந்ததும் super nova வாக வெடித்து சிதறும் போது உருவாவதே Black Hole எனப்படும் கருந்துளை.

இது எப்படி சாத்தியம் உதாரணமாக 20 மடங்கு நிறை கொண்ட சூரியனை எடுத்துக்கொள்வோம் அதில் உள்ள மையக்கருவானது தன்னை நோக்கி அணைத்து பொருட்களையும் இழுத்துக்கொண்டிருக்கும் காரணம் ஈர்ப்பு விசையே ஆனால் அவ்வாறு நடப்பதில்லை காரணம் சூரியனில் அணு பிளவானது தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பது தான். இந்த அணு பிளவுக்கு காரணமான எரிபொருள் முற்றிலும் தீர்ந்த பிறகே ஈர்ப்புவிசை பொருட்கள் மீது செயல்பட முடிகிறது ஏனென்றால் ஈர்ப்புவிசைக்கு எதிராக அணுப்பிளவு செயல்பாடுகள் உள்ளதே காரணம்.

ஈர்ப்புவிசை பொருட்கள் மீது செயல்பட தொடங்கியதும் பொருட்கள் அனைத்தும் மையக்கருவை நோக்கி ஈர்க்கப்பட்டு அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது இதனால் அழுத்தம் மிகுதியால் super nova வாக வெடிக்கிறது இறுதியில் கருந்துளை உருவாகிறது.

அந்த நட்சத்திரத்தின் மொத்த நிறையானது பூஜ்ஜியத்துக்குள் அடக்கப்படும் இதனால் ஈர்ப்புவிசை முடிவிலியை அடைகிறது எனவே இதன் அருகில் செல்லும் எந்த பொருளாக இருப்பினும் இது தன்னுள் இழுத்துக்கொள்ளும் திறன் கொண்டது. நாம் இதுவரை கண்டு பிடித்ததில் அதிக வேகத்தில் செல்வதை ஒளி மட்டுமே அந்த ஒளி கூட இதனுள் நுழைந்து வெளிவர முடியாது அந்த அளவிற்கு இதன் ஈர்ப்புவிசை இருக்கும்.

ஒரு ஆச்சர்யமான உண்மை என்னவென்றால் இது இருப்பது கண்களுக்கு தெரியாது ஆனால் இது தன் பாதையில் வரும் நட்சத்திரத்தை உள்ளிழுக்கும் போது அதன் சுற்று வளையத்தை சுற்றி பிரகாசிக்கும் இதனை வைத்தே கருந்துளை இருப்பதை தெரிந்துகொள்ள முடியும்.

நமது பூமிக்கு மிக அருகில் இருக்கும் கருந்துளை V616 Monocerotis அல்லது V616 Mon எனவும் அழைக்கப்படுகிறது.
 இது நமது பூமியிலிருந்து 3000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது மேலும் அதன் நிறையானது 9-13 மடங்கு சூரியனை விட பெரியதாகும்.
மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் நாசா வின் சந்திரா கருந்துளை ஒன்றை கண்டறிந்துள்ளது அதன் பெயரானது NGC2276-3c.

இது நமது பூமியில் இருந்து 100 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள spiral galaxy NGC 2276 யில் அமைத்துள்ளது

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.