ராயல் என்பீல்டுக்கு பொருத்தமான மற்றும் சிறப்பான  3  சைலென்சர்கள் எது தெரியுமா ? ராயல் என்பீல்டு பைக்கிற்கு சைலென்சர்கள் மாற்றுவது நல்லதா கெட்டதா?

இளைஞனர்களின் முதல் காதலாக இருப்பது பெண்களை விட பைக்குகள் தான் . தற்போது தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் பைக்குகளில் முதலிடத்தில் இருப்பது "ராயல் என்பீல்டு" பைக்குகள் தான். ஒரு மாதத்திற்கு இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 70 ,431 பைக்குகள் விற்ப்பனையாகின்றன.  கம்பீரமான தோற்றம் ,பைபர்கள் இல்லாமல்  முழுக்க முழுக்க ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டதால் நீண்ட காலம் நீடித்து உழைக்கும் தன்மை , தனக்கேற்றபடி வண்டியின் பாகங்களை மாற்றியமைக்க ஏராளமான உதிரி பாகங்கள் , திரும்ப அதிக விலைக்கு செய்யும் அளவுக்கு மக்கள் இதன் மீது கொண்ட நம்பிக்கை என பல நல்ல விஷயங்கள் இந்த பைக்கை நம்பர் ஒன் இளைஞர்கள் விரும்பும் பைக்காக உள்ளது.

சரி , பைக் பாகத்தை மாற்றுவது என்று முடிவு செய்துவிட்டால் முதலில் சைலென்சரை தான் மாற்ற நினைப்பார்கள் .

சைலென்சர்களை மாற்றுவது நல்லதா கெட்டதா?

ஒரு வருடத்திற்கு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக மட்டும் ராயல் என்பீல்ட் நிறுவனம் கிட்டத்தட்ட 800 கோடி செலவு செய்கிறது. உலகின் தலைசிறந்த என்ஜினீயர்கள் இந்த ராயல் என்பீல்ட் வாகனத்தை வடிவமைத்துள்ளதுள்ளனர். இவர்களால்  செய்ய முடியாததையா லோக்கல் ஆட்டோமொபைல் ஷாப்புகள் செய்யப்போகிறது? வண்டியின் எந்த ஒரு பாகத்தை மாற்றினாலும் வண்டியின் பெர்பார்மென்ஸ் மற்றும் மைலேஜ்

கண்டிப்பாக பாதிக்கும். சைலென்சர்களை மாற்றினாலும் வண்டியின் பெர்பார்மென்ஸ் மற்றும் மைலேஜெய் நேரடியாக பாதிக்கும். ராயல் என்பீல்டு தயாரிக்கும் சைலென்சர்களில் கிறிஸ்டலைட் கன்வெர்ட்டர் என்ற பாகம் இருக்கும் . இது என்ஜினில் இருந்து வெளியாகும் காற்றை மாசுபடுத்தும் வேதிப்பொருளை தடுக்கும். அதோடு என்ஜினிலிருந்து வெளியாகும் அதிகப்படியான சத்தத்தை குறைக்கும் பாகங்கள் இருக்கும் .

மேலும் என்ஜின் திறனை அதிகப்படுத்தும் அளவிற்கு நுட்பமாக வடிவமைத்திருக்கும் ஆனால் லோக்கல் நிறுவனங்கள் தயாரிக்கும் சைலென்சர்களில் இத்தனை அம்சங்கள் இருக்குமா என்பது சந்தேகம். அப்படியே நீங்கள் மாற்ற நினைத்தாலும் , நீங்கள் 20 ,000 கிலோ மீட்டருக்கு மேல் ஒட்டிய பிறகு மாற்றுவது தான் நல்லது . ஏனெனில் , ராயல் என்பீல்டு நிறுவனம் 20 ,000 கிலோ மீட்டர்கள் வரை எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும் அந்த பாகங்களை இலவசமாக மாற்றித்தரும். என்ஜினில் கோளாறுகள் ஏற்பட்டால் கூட முழு வண்டியையே மாற்றித்தரும். அதற்கு நீங்கள் வண்டியின் எந்த ஒரு பாகத்தையும் மாற்றியமைக்காமல் இருக்கவேண்டும் , இல்லையென்றால் உங்கள் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் கவர் ஆகாது. இந்திய மோட்டார் வாகன சட்டப்படி என்ஜின் திறன் 175 சி சி க்கு மேல் உள்ள பைக்குகள் 75 டெசிபல் சத்தம் மட்டுமே இருக்கவேண்டும் இல்லையென்றால் வழக்கு பதிவு செய்ய போக்குவரத்து காவல்துறைக்கு அனுமதி உண்டு. சமீபமாக, பெங்களூரில் 200 க்கும் மேற்பட்ட சைலென்சர்களை போக்குவரத்து காவல் துறையினர் ரோடு ரோலர் வைத்து நசுக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. ஆகையால் , சைலென்சர் வாங்குவதற்கு முன்பு அது எவ்வளவு சத்தம் கொடுக்கும் என்று விசாரித்து வாங்குங்கள். நாங்கள் இங்கு பதிவிட்டிருக்கும் எந்த ஒரு சைலென்சரையும் நீங்கள் தாராளமாக வாங்கலாம் ஏனெனில் இதனுடைய சத்தம் 75 டெசிபலுக்கு கீழ் தான்.

சரி, அப்படியே சைலென்சர் மாற்ற வேண்டும் என்றால், எது சிறந்த சைலென்சர்கள் ?

அதிக விற்ப்பனையாகும் மற்றும் சிறந்த சைலென்சர்களின் பட்டியல் .

6500 ரூபாய் விலை கொண்ட இந்த கிரீன்ஹவுஸ் தம்பர் தான் நமது பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் எடையும் மிக குறைவு அதோடு துரு பிடிக்காமலும் இருக்கும். அதிக சத்தம் காதுகளின் நரம்புகளை பாதிக்கும் என கருதி ஒரு சராசரியான சத்தத்துடன் உருவாக்கப்பட்ட சைலென்சர்.இது ப்ளேக் மற்றும் பாலிஷ்டு க்ரோம் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.இந்த சைலென்சரையும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எந்த ஒரு பைக் மாடலுக்கும் பொறுத்த முடியும்

இரண்டாவதாக அதிகமாக விற்பனையாகும் சைலென்சர் பேரல் எக்ஸ்சாஸ்ட் CCB02 கெனான் கார்பன் எக்ஸ்சாஸ்ட் 2 .0 தான். இதன் விலை ரெட் ரூஸ்டர் பெர்பார்மென்ஸை விட கொஞ்சம் குறைவு. இதன் விலை 6750 ரூபாய் ஆகும்.பார்ப்பவர்கள் கண் கவரும் வண்ணம் இதன் தோற்றம் இருக்கும். இந்த சைலென்சரையும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எந்த ஒரு பைக் மாடலுக்கும் பொறுத்த முடியும். இது மேட் பிளேக் வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது.

அதிகாமாக விற்பனையாகும் சைலென்சர்களில் முதலிடத்தை பிடித்திருப்பது "ரெட் ரூஸ்டர்" சைலென்சர் தான். இந்த விலை 8000 முதல் 10000 வரை உள்ளது.

சிறப்பான சத்தம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 304  என்ற  நல்ல மெடீரியலில் தயாரிக்கப்பட்டுள்ளதால் நீடித்து உழைக்கும் மற்றும் துருப்புடிக்காது. சைலென்சரில் உட்புறம் செராமிக் உல் கோட்டிங் பூசப்பட்டுள்ளதால் 1200 செல்ஸியஸ் வரை சூட்டை தாங்கும் சக்தியை கொண்டுள்ளது அதனால் ஸ்டீல் உருகுவதற்கு வாய்ப்பில்லை.பைக்குகள் மாடலுக்கு தகுந்த கிலேம்புகளுடம் வருவதால் இந்தனை எந்த மாடல் வண்டிக்கும் எளிதாக பொறுத்த முடியும்.

இதனை கிளாசிக் 350 சி சி , கிளாசிக் 500  சி சி, தண்டெர் பேர்ட்  என அனைத்து ராயல் என்பீல்டு வாகனங்களிலும் பொறுத்த முடியும் . இது பாலிஷ்டு சில்வர் , மேட் ப்ளேக் , மேட் சில்வர் போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.