மாதம் 1000 ரூபாய் சேமிக்க பயன்படும் 10 ரகசிய வழிமுறைகள்

பணத்தை செலவு பண்றதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு ? ஆனா பணம் சேமிக்க ? நீங்கள் மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாய் உங்கள் மாத சம்பளத்திலிருந்து சேமிக்க வேண்டுமா ? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே  இரண்டே வித்தியாசம் தான் .பணக்காரர்களுக்கு எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் மற்றும் எப்படி உபயோகமாக செலவு செய்ய வேண்டும் என்று தெரியும். உலக பணக்காரரான வாறன் புபட் என்ன சொல்கிறார் தெரியுமா ' நீங்கள் தேர்வு செய்யும் தொழில் நீங்கள் தூங்கும் போது கூட உங்களுக்கு வருமானத்தை ஈட்டி தர வேண்டும் இல்லையென்றால் நீங்கள் இறக்கும் வரை உழைத்துக்கொண்டே தான் இருக்க வேண்டும் என்றும், உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி குவித்தால் , உங்களுக்கு தேவையான பொருட்களை விரைவில் விற்க நேரிடும்'.அதோடு பணத்தை ஈட்டுவதில் உள்ள கவனத்தை விட பணம் சேமிப்பதில் அதிக கவனம் தேவை என கூறியுள்ளார்.

10வங்கியில் சேமிப்பு கணக்கு

தற்போது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொண்டுவந்துள்ள ஆணையின் படி , அனைத்து வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது கணக்கில்  உள்ள தொகைக்கு ஏற்ப தினந்தோறும் வட்டி கணக்கிட்டு காலாண்டின் முடிவில் வடிக்கையார்களுக்கு வழங்க வேண்டும்.குறிப்பாக HDFC வங்கி 4 சதவீத வட்டியும் , கொட்டெக் வங்கி 5 % சதவீத வட்டியும் வழங்கி வருகிறது. இப்போ நீங்க 3 லட்சம் உங்க ஒரு மாதத்திற்கு உங்கள் கணக்கில் வைத்துள்ளீர்கள் எனில் உங்களுக்கு மாதம் 986 ரூபாய் கிடைக்கும். எப்படினு யோசிக்கிறீங்களா? வாங்க ஒரு குட்டி கணக்கு போட்டு தெரிஞ்சுக்கலாம்.

மாத வட்டி = (கணக்கில் உள்ள தொகை)*(மொத்த நாட்களின் எண்ணிக்கை)*வட்டி / நாட்களின் எண்ணிக்கை (365 )

மாத வட்டி = (3  லட்சம் * 30 * 4 /100  )/365

மாத வட்டி = 986  Rs   /மாதம்

உங்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளதா ? இல்லையெனில், இன்றே சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி கொடுக்கும் ஒரு வங்கியில் கணக்கை துவங்குங்கள்.

9வருமான வரியில் இருந்து சேமிப்பு

நம்ம தான் எல்லாத்துக்குமே வரி கட்டி தான் பொருட்களை வாங்குறோம் அப்புறம் எதுக்கு வருமான வரி கட்டணும்ங்கிற கோபம் எல்லாருக்குமே இருக்கு. ஆனா அரசாங்கமே வருமான வரிய சேமிக்க எக்கச்சக்க திட்டம் அறிமுகப்படுத்தியிருக்கு ஆனால் அதைப்பற்றி தெரிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.

நீங்க பப்லிக் ப்ரொவிடண்ட் பண்ட்(PPF ) மூலம் ஆண்டுக்கு 150000 வரை சேமிக்கலாம். நீங்கள்எ இந்த தொகையை தவணை முறையாக கூட செலுத்தலாம் .எடுத்துக்காட்டாக , நீங்கள் ஆண்டுக்கு PPF ல் 150000 செலுத்தினால் ஆண்டின் இறுதியில் வட்டி 7 .8  % சேர்த்து 161700 ரூபாய் கிடைக்கும்.PPF ல் நீங்கள் ஆண்டிற்கு  500 முதல் 150000 PPF ல் செலுத்த முடியும். ஆனால் இந்த தொகையை 15 ஆண்டிற்கு பிறகே திரும்ப பெற முடியும் இடையில் பணத்தை எடுக்க முடியாது. 15 ஆண்டின் முடிவில் உங்களுக்கு 1331598 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். அதோடு ஆண்டிற்கு நீங்கள் 80 C  கீழ் 150000 வரை வரி விளக்கு பெற முடியும்.

NSC (நேஷனல் ஷேவிங் ஸ்கீம்) மூலமாக கூட நீங்கள் வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம். நீங்கள் சேமிக்கு தொகைக்கு 7 .8 % வட்டி பெறலாம். இது 5 வருட திட்டம். நீங்கள் இத்திட்டத்தில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம் வரைமுறை எதுவும் கிடையாது.

நீங்கள் 80 D யின் கீழ் , மருதத்துவ செலவிற்கு வருடத்திற்கு 25 000 வரை விலக்கு பெறலாம். நீங்கள் மூத்த குடிமகனாக இருந்தால் 30 000 வரை வரி விலக்கு பெறலாம். நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கு மருத்துவ காப்பீடு பெற்றுள்ளீர்களா ? அப்படியெனில் ,ஆண்டொன்றிற்கு  25000 வரை வரி விலக்கு பெறலாம்.

நீங்கள் உங்களின் கல்விக்கு , குழந்தையின் கல்விக்கு அல்லது மனைவியின் கல்விக்கு பெற்ற கல்வி கடனின் வட்டிக்கு  100 % 80 E யின் கீழ்  வரி விலக்கு பெற முடியும்.

8மருத்துவ காப்பீடு

இப்போதுள்ள சுற்று சூழல் மாசுபாடு மற்றும் உணவு முறை காரணமாக சாராரியாக வருடம் 30000 வரை செலவிடுகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. நீங்கள் மருத்துவ காப்பீடு வைத்திருந்தால் வரிவிலக்கு பெறுவதோடு எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வீர்கள். ஒரு சிறிய உடல் நாளை குறைபாடு வந்தால் கூட லட்சக்கணக்கான செலவிட நேர்கிறது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத இந்த உலகில் , மருத்துவ காப்பீடு ஒரு முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

இந்தியாவின் சிறந்த மருத்துவ காப்பீடுகள்

7கிரெடிட் கார்டு உபயோகியுங்கள்

கிரெடிட் கார்ட் உபயோகித்தால் கடனாளி ஆகிவிடுவோம் என்ற தவறான தங்கள் அனைவரிடமும் பரவிக்கிடக்கிறது. அது முற்றிலும் தவறு . நீங்கள் சரியான முறையில் உபயோகித்தால் நீங்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும். பல முன்னணி வங்கிகள் தற்போது அனைத்து கிரெடிட் கார்டுகளை ஆண்டு வாடகை இல்லாமல் வழங்குகிறது. நீங்கள் மாதம் எவ்வளவு கிரெடிட் கார்ட் உபயோகிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு போனஸ் பாயிண்ட்ஸ் கிடைக்கும். எடுத்துக்காட்டாக , மாதம் 50000 உபயோகித்தால் குறைந்தபட்சம் 1000 ரூபாய் மதிப்புள்ள போனஸ் பாயிண்ட்ஸ் கிடைக்கும் . தற்போது அனைத்து வங்கிகளும் ஒவ்வொரு ATM பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிப்பதால் பணம் கையில் எடுத்து செலவு செய்யாமல் , முடிந்த அளவிற்கு கார்டாயே உபயோகிங்கள்.

அதோடு கிரெடிட் கார்டின் அனைத்து பரிவர்தனைகளும் பதிவு செய்யப்படுவதால் நீங்கள் உங்கள் பணத்தை எங்கு ,எதற்காக செலவிட்டுள்ளீர்கள் என்று அறிய முடியும்.

கிரெடிட் கார்டின் நன்மைகள்

 • கடன் பெறுவது எளிது
 • EMI வசதி
 • சலுகைகள் மற்றும் ஊக்கங்கள்
 • நெகிழ்வான கடன்
 • செலவுகளின் பதிவுகள்
 • கொள்முதல் பாதுகாப்பு

6உணவகங்களை தவிருங்கள்

இந்தியாவில் GST அறிமுகப்படுத்திய பிறகு அனைத்து உணவகங்களும் உணவுப்பொருட்களின் விலைகளை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இதில் பெரும்பாலான பகுதி உணவு வரிக்கே போய் விடுகிறது.நீங்கள் சாப்பிடுவதோடு GST யும் சேர்ந்து சாப்பிடுகிறது என்று உணருங்கள். தரமான காய்கறிகளை வாங்கி வீட்டிலேயே சமைத்து உண்ணுங்கள்.

5உங்கள் தொலைபேசி , டிஷ் மற்றும் மின்சார கட்டணத்தை குறித்த தேதியில் கட்டுங்கள்

வாழ்க்கையில் அன்றாடும் நாம் சந்திக்கும் பிரச்னைகள் நமக்கு நியாபக மறதியை உருவாக்குகிறது. ஒரு ஆய்வில் 100 க்கு 20 பேர் தனது தொலைபேசிக்கட்டணத்தை தேதி முடிந்த பிறகே செலுத்துகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. நீங்கள் ஒரு முறை மறதியானால் செலுத்த தவறினால் கூட 50 முதல் 100 இழக்க நேரிடும். ஆகவே , உங்கள் அனைத்து பில் பேமண்டுகளையும் வங்கியில் உள்ள தானியங்கு பேமண்டுகளுக்கு (Auto Bill pay or Smartpay)பதிவு செய்யுங்கள் . இதன் மூலம் உங்கள் பில் தொகை குறித்த தேதியில் உங்கள் அக்கவுண்டில் இருந்து அதுவாகவே செலுத்திவிடும்.அதோடு உங்கள் பில் தொகைக்கு ஏற்ப 1 சதவீத கேஸ் பேக்கும் கிடைக்கும்.

4நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள் (ரெபரல் போனஸ்)

அனைத்து நிறுவங்களும் தற்போது விளம்பரங்களுக்கு செலவு செய்வதை விட தனது வாடிக்கையாளர்களையே விளம்பரதாரர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது. உதாரணமாக , உங்கள் நண்பர் வீட்டுக்கடன் எடுப்பதாக கூறுகிறார் , நீங்கள் உங்கள் நண்பரை சிட்டி வங்கியிற்கு உங்கள் நண்பனை பரிந்துரை செய்தால் கைமாறாக சிட்டி வங்கி 20000 வரை உங்களுக்கு கொடுக்கிறது. வீட்டுக்கடன் மட்டுமல்ல கிரெடிட் கார்டு , ஆண்டிராய்டு செயலிகள் என எதை பரிந்துரை செய்தாலும் அந்த நிறுவும் ஒரு ஊக்கத்தொகையை தர தயாராக உள்ளது.

தற்போது கூகிள் வெளியிட்டுள்ள TEZ எனும் செயலியை உங்கள் நண்பருக்கு பரிந்துரை செய்து உங்கள் நண்பர் அதனை பதிவிறக்கம் செய்தால் உங்களுக்கு 51 ரூபாய் கிடைக்கும் , அதோடு 1 லட்சம் ரூபாய்க்குண்டான குலுக்கல் முறை போட்டியில் பங்கேற்பதற்க்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.

3எப்போதும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்

தற்போதுள்ள சூழலில்  நீங்கள் எதை வாங்கவேண்டுமென்றாலும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய முடியும். ஆன்லைனில் வாங்கும் அனைத்து பொருட்களும் நேரில் சென்று டீலர்களிடம் வாங்குவதை காட்டிலும் விலை மிகக்குறைவாகவே இருக்கும். ஏனெனில், டீலர்கள் வாடகை , வேலை ஆட்களின் செலவு , மின்சார கட்டணம் என அனைத்தையும் நீங்கள் வாங்கும் பொருட்களின் மீதே திணிக்கின்றனர். ஆனால் , ஆன்லைன் பொருட்களுக்கு எந்த செலவும் திணிக்கப்படாது. ஆனால் நீங்கள் விநியோக கட்டணம் மட்டும் செலுத்த வேண்டியிருக்கும். அமேசான் , பிளிப்கார்ட் , ஸ்னேப்டீல் போன்ற நிறுவனங்கள் 500 க்கு மேல் பொருள் வாங்கினால் இலவசமாகவே உங்கள் பொருட்களை வீட்டிற்கு டெலிவரி செய்கிறது.

இதுமட்டுமல்லாமல் , உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் 30 நாட்களில் திரும்ப கொடுத்து விடலாம். 

ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

 • எந்த பொருளை வாங்குவதானாலும் 'மக்கி சூஸ்'(Makki Choose) போன்ற ஒப்பிட்டு சிறந்த விலையை கூறும் இணையத்தை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள்.மக்கி சூஸ் இணையதளம் எண்ணற்ற நிறுவனங்களின் விலைப்பட்டியலை ஆய்வு செய்து மிகவும் விலை குறைந்த விலை மற்றும் விற்பனை செய்யும் நிறுவனத்தை கொடுக்கிறது. நீங்கள் தேட வேண்டிய அவசியமே கிடையாது.
 • பேமெண்ட் வாலெட்டுகளை பயன்படுத்துங்கள். எனது நண்பர் ஒருவர் கடந்த வாரம் ஒரு பைக் வாங்கினார். அவர் நிறுவனத்திற்கு paytm மூலம் செலுத்தினார் . இதன் மூலம் அவர்க்கு 8000 ரூபாய் லாபம் கிடைத்தது.
 • வட்டி இல்லாத EMI உள்ள பொருட்கள் நிறைய உள்ளது. ஆகவே உங்கள் பொருட்களுக்கு  வட்டி இல்லாத EMI உள்ளதா என பார்த்து உங்கள் வட்டியை மிச்சப்படுத்துங்கள்.

2தேவையுள்ள பொருட்களை மட்டுமே வாங்குங்கள்

'வேலைக்காரன்' படத்தில் கூறியுள்ளது போல் உங்கள் ஆசையை தூண்டி உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்க வைத்து அதன் மூலம் பெரிய லாபம் ஈட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாராக உள்ளது. ஆகவே , மளிகை பொருட்கள் வாங்க போகும் போது இந்த பொருட்கள் மட்டும் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லுங்கள் .

'உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி குவித்தால் , உங்களுக்கு தேவையான பொருட்களை விரைவில் விற்க நேரிடும்' - வாறன் புபட்

1போஸ்ட்பைட்(postpaid  )   மொபைல் தவிருங்கள்

இப்பொழுது அனைத்து முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வரம்பற்ற கால்கள் , இன்டர்நெட் வெறும் 300 க்கு கொடுப்பதால் ப்ரீபெய்ட் மொபைல் மட்டுமே அதிக லாபம்.

 

போஸ்ட்பைட் உபயோகிப்பதால் ஏற்படும் வீண் செலவுகள்

 • நீங்கள் போஸ்ட்பைட் வைத்திருந்தால் உங்கள் பில் தொகையிலிருந்து 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதே ப்ரீபெய்டில் வரியில்லாமல்  புல் டாக்டைம் பெற முடியும் .
 • இணையத்தில் எதாவது தவறுதலாக கிளிக் செய்து விட்டால் போதும் , உங்களிடம் இருந்து 100 முதல் 500 வரை கட்டணம் வசூலிக்க நிறுவனங்கள் தயாராக உள்ளன . ஆனால் ப்ரீபைடில் அப்படி உங்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பே இல்லை.
 • எந்த ஒரு நெட்ஒர்க்கிற்கும் நீங்கள் எளிதாக மாற முடியாது. ஆனால் ப்ரீபைடில் நீங்கள் எந்த நெட்ஒர்க்கிற்கும் எளிதாக மாற முடியும்.
 • போஸ்ட் பெய்டில் உங்கள் பில் தொகையின் மீது கண்ட்ரோல் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் வரலாம். உதாரணமாக , கடந்த வாரம் நான் இணையத்தை சற்று அதிகமாக உபயோகப்படுத்திவிட்டேன், ஆனால் எனக்கு எந்த ஒரு நோட்டிபிகேஷனும் வரவில்லை . பில் தொகையில் 1000 ரூபாய் சேர்த்துள்ளனர் . என்ன கொடும சரவணன் இது ?

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.