வானுயர்ந்த வழித் தோன்றலின் வாழ்வாதார குவியல்கள் - கீழடி

இதுவரை கிடைத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் ஆனால் இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இந்தியாவின் கிடைச்சு இருக்கு. இதுல 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் மொழி சார்ந்தது.இதுவே தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப்பெரிய மகுடம்.

இதை தொடர்ந்து இந்தியாவை பற்றி ஒரு சிறு வரலாறு பார்ப்போமா?

நாம் அனைவரும் அறிந்த உண்மை பல வருடங்களுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனி  நம்மை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. இப்போது இருக்கும் ஆப்கானிஸ்தானிலிருந்து அன்றைய படைத்தளபதி பாகிஸ்தானை நோக்கி பயணிக்கிறார் அப்போது அவர் கண்ணுக்கு ஒரு தூண் தென்படுகிறது. அவர் அதை கண்டு என்னவாக இருக்கும் என ஒரு சிறு ஆராய்ச்சிக்கு பிறகு தனது பயணத்தை தொடர்கிறார் நீண்ட பயணத்திற்கு பிறகு அவர் பாகிஸ்தானை வந்தடைகிறார்.

அங்கும் பார்த்தால் அதேபோன்ற தூண் அதே போன்ற சிற்பங்கள் கல்வெட்டுகள் பார்த்தவருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி என்ன இது அங்கும் இருக்கிறது இவ்வளவு தூரம் பயணித்து  இங்கும் அதே இருக்கிறதே என்று. அதைத் தொடர்ந்து அவர் மேலும் பயணிக்கிறார் மேலும் பயணிக்கும் போது ஒரு 500-600 கிலோ மீட்டருக்கு பிறகு சிந்து சமவெளியை அடைகிறார் சிந்து சமவெளியிலும் அதே போன்ற ஒரு தூணை கண்களால் கண்ட பிறகு மேலும் ஒரு ஆச்சரியம் இது என்ன அனைத்து இடங்களிலும் இதே இருக்கிறதே என்று யோசித்து பிறகு அதனை ஆராய முற்படுகிறார்.

ஆராய்ந்த போது தான் தெரிகிறது அது அசோகர் காலத்து கல்வெட்டு அசோகரின் தூண்கள் என்று!. அதுவரை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல ஐரோப்பிய நாகரீகம் அனைத்தும் இந்தியாவை ஒரு 500-600 ஆண்டு கால பழமையான  நாகரிகம் கொண்டுள்ள நாடு என்ற ஒரு எண்ணம் அவர்களிடையே இருந்தது இதனை ஆராய்ந்த பிறகுதான் அவர்கள் இந்தியாவில் நாகரிகமானது அலெக்ஸாண்டரின் படை எடுப்புக்கு முன்பு ஏற்பட்டது சுமார் 2500 ஆண்டுகள் முற்பட்டது என்று.

வைகைக்கரை நாகரிகம் பற்றி அடுத்த தொடரில் காண்போம்.....

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.