2018 டெல்லி வாகன கண்காட்சி: நான்கு சிறந்த கான்செப்ட் கார் மாடல்கள்

தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் கார்கள், பைக்குகள், டிரக்குகள், பஸ்கள், புதிய கான்செப்டுகள் என பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் தனது வாகனங்களை காட்சிப்படுத்தியது, சில நிறுவனங்கள் புதிய வாகனங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. அவ்வாறு  2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது சிறந்த மற்றும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த நான்கு கான்செப்ட் கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

4மாருதி சுசூகி பியூச்சர் S

மாருதி சுசூகி நிறுவனம் புத்தம் புதிய ஃபியூச்சர் S காம்பேக்ட் SUV கான்செப்ட் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் இக்னிஸ்  மாடலின் அளவில் தான் இருக்கும். எனினும் இந்த மாடல் இக்னிஸ் மாடல் போல் அல்லாமல் ஒரு SUV  மாடல் போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ௨௦௨௦ ஆம் ஆண்டு வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பலேனோ, புதிய ஸ்விப்ட், இக்னிஸ் மற்றும் டிசைர் மாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ள ஹார்ட்டெக் எனும் அதே பிளாட்பார்மில் தான் இந்த புதிய மாடலும் தயாரிக்கப்பட உள்ளது. இது ஒரு கான்செப்ட் மாடல் என்பதால் தயாரிப்பு நிலை மாடலுக்கு இதற்கும் சில வேறுபாடுகள் இருக்கும்.

எஞ்சின் தொடர்பாகவும் எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சினிலும் வெளியிடப்படும். மேலும் இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா மற்றும் இக்னிஸ் மாடல்களுக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3மஹிந்திரா TUV ஸ்டிங்கர்

மஹிந்திரா நிறுவனம் யாரும் எதிர்பாராத விதமாக TUV300 மாடலின் கன்வெர்ட்டிபிள் வெர்சனான TUV ஸ்டிங்கர் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் சில ஒப்பனை மாற்றங்களை செய்து ஒரு சிறப்பான கன்வெர்ட்டிபிள் SUV மாடலாக இந்த மாடலை வடிவமைத்துள்ளது. 

மஹிந்திரா நிறுவனம் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் நிறைய மாற்றங்களை கொடுத்து இந்த கன்வெர்ட்டிபிள் SUV மாடலை வடிவமைத்துள்ளது.  TUV ஸ்டிங்கர் மாடல் தயாரிப்பு நிலையை அடையுமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. மஹிந்திரா நிறுவனம் மக்களின் ஆவலை பொறுத்து இந்த மாடல் தயாரிப்பு நிலையை அடையுமா என்பது பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த மாடல் தயாரிப்பு நிலையை அடையாவிட்டாலும் மேம்படுத்தப்பட்ட TUV300  மாடலில் இதன் அம்சங்களை நிறைய எதிர்பார்க்கலாம்.

இந்த மாடலில் TUV300 மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 100Bhp திறனும் 240Nm இழுவைத்திறனும் கொண்டது. மஹிந்திரா நிறுவனம் TUV ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் SUV மாடலையும் நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட மாடலாக வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2டாடா H5X கான்செப்ட்

டாடா நிறுவனம் புத்தம் புதிய H5X கான்செப்ட் மாடலை முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா வின் இந்த புதிய SUV கான்செப்ட் மாடல் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்று ஆகும். இதன் தயாரிப்பு நிலை மாடல் அடுத்த வருடத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனத்தின் புதிய H5X கான்செப்ட் மாடல் டாடா வின் புதிய OMEGA (Optimal Modular Efficient Global Advanced) எனும் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்ம் லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் மற்ற டாடா மாடல்களில் உள்ள க்ரில் அமைப்பு தான் கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் முழுமையாக கம்பீரமான SUV தோற்றத்தை தருகிறது.

டாடா நிறுவனம் உட்புறம் மற்றும் எஞ்சின் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. இதன் தயாரிப்பு நிலை மாடல் ஐந்து இருக்கை கொண்டதாக இருக்கும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஏழு இருக்கை கொண்ட மாடல் தொடர்பான விவரங்களையும் வெளியிடவில்லை. இந்த டாடா H5X கான்செப்ட் இந்த வருட வாகன கண்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் என்பது எந்த மாற்றமும் இல்லை. 

1டாடா 45X பிரீமியம் ஹேட்ச் கான்செப்ட்

டாடா நிறுவனம் புத்தம் புதிய 45X பிரீமியம் ஹேட்ச் கான்செப்ட் மாடலை முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனம்  H5X எனும் SUV கான்செப்ட் மாடலையும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனம் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. எனினும், இந்த மாடல் அடுத்த வருட இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே இம்பேக்ட் 2.0 டிசைன் தத்பரியத்தில் தான் H5X SUV கான்செப்ட் மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா 45X கான்செப்ட் மாடல் வெளிப்புறத்தில் ஒரு பிரீமியம் மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது. 

டாடா நிறுவனம் உட்புறம் மற்றும் எஞ்சின் தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை. இந்த மாடல் வெளியிடப்படும் போது பிரீமியம் ஹேட்ச் செக்மென்ட்டில் மாருதி சுசூகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.