உங்கள் ஸ்மார்ட் போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆண்டிராய்டு அப்ளிகேசன்கள்

எப்ப மொபைல் வாங்க நினச்சாலும் நம்ம நினைவுக்கு வருவது ஸ்மார்ட் போன்கள் தான் . என்ன தான் ஸ்மார்ட் போன் வாங்கினாலும் அதை சரியான முறையில் உபயோகபடுத்தாவிட்டால் அதிக விலைகொடுத்து வாங்கியது வீணாகத் தான் தெரியும் . ஸ்மார்ட் போனில் உள்ள அதி நவீன வசதிகளை முழுமையாக பயன்படுத்த நமக்கு ஆண்டிராய்டடு அப்ளிகேசன்கள் தேவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே .அதனால், எல்லாவகையிலும் நமக்கு அன்றாட வாழ்வில் பயன்படும் மற்றும் மிகவும் சிறந்த  ஆண்டிராய்டடு அப்ளிகேசங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த மௌவல் கடமைப்பட்டுள்ளது.   இதில் பேஸ்புக் , வாட்ஸ் அப் மற்றும் பல  தெரிந்த அப்ளிகேசங்களை மௌவல் இந்த பட்டியலில் இணைக்கவில்லை.   வாருங்கள் இனியும் தாமதிக்காமல் களத்தில் இறங்குவோம் !

10ஷேர் இட் 

நாம் தினந்தோறும் ஏதாவது ஒரு சமயம்  போட்டோ, வீடியோ ,ஆடியோ மற்றும் திரைப்படம் போன்றவற்றை நண்பர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ பெறுகிறோம்.அதி விரைவாக செல்லும் இந்த உலகில் ,முந்தய ப்ளூடூத் தொழில்நுட்பம் குறைந்த வேகத்தில் செயல்படுவதால்  மக்கள் தற்போது இதை பயன்படுத்துவதில்லை.இதற்கு மாறாக WI-FI மூலம் அதி வேகத்தில் பைல் டிரான்ஸ்பர்   செய்யும் "ஷேர் இட்" போன்ற அப்ளிகசன்கலையே பயன்படுத்துகின்றனர்.இதன் அதிகபட்ச பைல் டிரான்ஸ்பர் வேகம் 20M/S ஆகும்.   முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=com.lenovo.anyshare.gps&hl=en

9கிளீன் மாஸ்டர் 

சுமார்ட் போன் என்றாலே அதில் அவ்வப்போது பெர்பார்மன்ஸ் குறைபாடு ஏற்படுவது சகஜம்.அதாவது , வாங்கியபோது அதி விரைவாக செயல்பட்ட அதே போன் , சிறிது நாட்களில் மிகவும் மெதுவாகவும் , அவ்வப்போது சுவிட்ச் ஆப் ஆவதுமாக இருக்கும்.இதற்கு காரணம் நமக்கு தெரியாமல் பின்திரையில் ரன் ஆகி கொண்டிருக்கும் அப்ளிகேசன்களே காரணம்.அதோடு சில அப்ப்ளிகேசன்கள் போனை சூடாக்க ஆரம்பிக்கும்.எல்லா சமயமும் நாம் சும்யமாக பின்திரையில் ஓடிக்கொண்டிருக்கும் அப்ளிகேசங்களை தடுப்பது சாத்தியமற்றது.ஆகவே உங்கள் போனை பழைய நிலைமைக்கு கொண்டு வர இதோ "கிளீன் மாஸ்டர்". இந்த அப்ளிகேசன் உங்கள் சுத்தம் செய்வதோடு ,உங்கள் போனை பாதுகாக்கும் நம்பர் ஒன் ஆண்டிவைரசை இலவசமாக வழங்குகிறது.   முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=com.cleanmaster.mguard&hl=en

8பேரலேல் ஸ்பேஸ்:

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பேஸ்புக் அல்லது ஆன்லைன் கேம் கணக்குகளை கொண்டுள்ளவரா ? அப்பொழுது இந்த அப்ளிகேசன் உங்களுக்கு தான். இதற்கு முன்னால் நாம் ஒரே ஒரு பேஸ்புக் கணக்கை மட்டுமே உபயோகப்படுத்த இயலும்.இன்னொரு கணக்கை உபயோகபடுத்த வேண்டுமானால் நாம் இந்த கணக்கிலிருந்து வெளியேறி பிறகு மற்றொரு கணக்கின் மூலன் லாகின் செய்ய வேண்டும்.அனால் இந்த "பேரலேல் ஸ்பேஸ் " உதவியோடு நீங்கள் இன்ரண்டு பேஸ்புக் அக்கவுண்டுகளையும் ஒரே சமயத்தில் காண இயலும்.   முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=com.lbe.parallel.intl&hl=en

7கீப்பர் - பாஸ்வேர்ட் மேனேஜர்

அதி நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவரும் அதே வேளையில், சய்பர் குற்றங்களும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது.நமக்கு தெரியாமல் நம்ம அக்கௌண்ட்ல இருந்து சய்பர் திருடர்கள் பணம் எடுக்க இயலும் பாஸ்வேர்ட் உறுதியாக இல்லையெனில்.அதோடு ஒவ்வொரு இணையதளமும் ஒவ்வொரு மாதிரியான பாஸ்வேர்ட் கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது.ஆதலால், நாம் உபயோகப்படுத்தும் அனைத்து பாஸ்வேர்ட்களையும் நினைவில் வைப்பதென்பது இயலாத காரியம்.   இந்த கீப்பர் அப்ளிகேசனானது உங்களுக்கு உறுதியான பாஸ்வேர்ட் கிரியேட் செய்து கொடுப்பதோடு அதை நீங்கள் தேவையான எளிதாக COPY PASTE செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.அதோடு , உங்கள் அனைத்து பாஸ்வேர்ட்களையும் பத்திரமாக பாதுகாக்கிறது. முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=com.callpod.android_apps.keeper&hl=en

6டுடுஇஷ்ட்

அதிக நியாபக மறதி கொண்டவரா நீங்கள் , உங்களுக்கு உங்களின் அனைத்து சொந்த அல்லது ஆபிஸ் வேலைகளை நினைவுபடுத்த  ஆள் தேவையா? பிடியுங்கள் இந்த அப்ளிகேசன் உங்களுக்கு தான் .நீங்கள் உங்கள் வேலைகளை இந்த அப்ளிகேசனில் எப்போது செய்யவேண்டும் என்று உங்களுக்கு நியாபகம் இருக்கும் போதே பதிவிட்டால் போதும்.இது உங்களுக்கு நீங்கள் ஆப்ளைனில் இருந்தாலும் சுமார்ட் வாட்ச் , மொபைல் , கம்ப்யூட்டர் , தப்ளேட் என அனைத்து சாதனங்களிலும் உங்களுக்கு நினைவூட்டும். முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=com.todoist&hl=en

5ஹாப்டிக் - பெர்சனல் அசிஸ்டன்ட்

உங்கள் சொந்த வேலையே பகிர்ந்துகொள்ள ஆள் தேவையா ? பஸ் டிக்கெட் புக் செய்வது முதல் கரண்ட் பில் செலுத்துவது வரை அனைத்தையும் செய்ய வடிவமைத்துள்ள அற்புதமான அப்ளிகேசன் இது.உண்மையாக , உபயோகப்படுத்தி பாருங்கள் இந்த அப்ளிகேசன் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் இது உங்களுக்கு அதிபட்சமாக பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக உங்களது வேலையை முடிக்கிறது. முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=co.haptik&hl=en

4சீக்ரட் டைரி

பேப்பர் டைரிகளில் தனது இனிய நினைவுகளை பதிவு செய்வது இந்த கால டிஜிட்டல் மக்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. ஏனென்றால் , டிஜிட்டல் டைரிகளில் நீங்கள் உங்கள் போட்டோ அல்லது வீடியோவையும் இணைக்க இயலும் அதோடு அதை பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்தும் வைக்கவும்  முடியும் இதன் மூலன் நம்மை ஆராய்ச்சு செய்யும் கண்களிடமிருந்து தப்பிக்க இயலும். முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=com.Glitter.Private.Secret.Diary&hl=en

3ட்ரு காலெர்

நமக்கு அடிக்கடி கால் செய்து தொல்லை கொடுப்பது யார் என கண்டுபிடிப்பது முன்பு சாத்தியமற்றதாக இருந்தது.ஆனால் , தற்போது இந்த ட்ரு காலெர் மூலன் கால் செய்வது யார் என்று கண்டுபிடித்து தருவதோடு அவர்களை பிளாக் செய்யவும் உதவுகிறது. பெரும்பாலான மக்கள் இதை உபயோகப்படுத்துகின்றனர் என மௌவளுக்கு தெரியும் , இருந்தும் இந்த அப்ளிகேஷனை நாங்கள் தெரியாத மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை இணைத்துள்ளது. முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=com.truecaller&hl=en

2பிக்ஸ் ஆர்ட்

செல்பி மற்றும் புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவரா நீங்கள் இதோ உங்களுக்கு தான் இந்த ஆப்.என்னதான் சிறந்த புகைப்படங்களை எடுத்திருந்தாலும் , அதற்கு மேலும் அழகு சேர்க்க எடிட்டிங் அப்ளிகேசன் கண்டிப்பாக தேவை.இதுவே நம்பர் ஒன் எடிட்டிங் ஆப் என்பதை உங்களுக்கு தெரிவிக்க மௌவல் கடமைப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=com.picsart.studio&hl=en

1விக்கி ஹவ்

மிகவும் பிரபலமான விக்கி நிறுவனம் தற்போது எப்படி செய்வது என்ற அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க இந்த அப்ளிகேஷனை உருவாகியுள்ளது.எதையாவது உங்களுக்கு செய்ய தெரியாவிட்டால் சிறிதும் காலம் கடத்தாமல் பதிவிறக்கம் செய்யுங்கள்.   முற்றிலும் இலவசமான இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய கீழ்க்கண்ட லிங்குக்கு செல்லவும்:
https://play.google.com/store/apps/details?id=com.wikihow.wikihowapp&hl=en

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.