மட்டன் சாப்டுருபிங்க ! சிக்கன் சாப்டுருபிங்க ! மனுசன சாப்டுருகிங்களா?

ஞாயிற்று கிழமை ஆனா அண்ணாச்சி கடைலயிலையோ இல்ல பாய் கடையிலையோ மட்டன் வாங்கி சாப்பிட்டு தெம்பா ஊற சுத்துற நமக்கு இது ஆச்சரியமாதான் இருக்கும்.மனித பதர்கள் ஆதி வாசியா திரியும் போது மனுசன சாப்டாங்க ஒகே ! ஆனா இந்த  21 ஆம் நூற்றாண்டுலகூட சில கும்பல்ஸ் ஆட்டுகறிய விட மனுசங்கறிய தான் விரும்புறாங்க.நம்ம இந்தியாலிருந்து கூட ஒரு பக்கி லிஸ்ட்ல இருக்கு .வாங்க டைம் வேஸ்ட் பண்ணாம படிச்சி தொலையுவோம்.

10கேத்ரீன் மேரி நைட் - ஆஸ்திரேலியாவின் மிகவும் தீய பெண்

அக்டோபர் 2001 ஆம் ஆண்டு , ஆஸ்திரேலியால இந்த கேத்ரீன் மேரி நைட் தனது கணவரை கத்தியால் சாகும் வரை குத்தி பிறகு தோலை உரித்து தொங்கப்போட்டுள்ளார்.அப்புறம் , பிணத்தை துண்டு துண்டா வெட்டி வெஜ் சாலடுல வச்சு தானும் சாப்டுட்டு தன் பிள்ளைகளுக்கும் பறிமாறி இருக்கு.இதற்கு தண்டனையா அந்த பெண்ணுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது. என்ன தான் பிரச்சன இருந்தாலும் நீங்க அப்படி பண்ணி இருக்க கூடாது . என்னம்மா இப்படி பன்றிங்களேமா ?

9ஆர்மின்  மியுஸ்

நம்ம பொதுவா இண்டர்நெட்ல சோப்பு விளம்பரம் பாத்துருக்கோம் சீப்பு விளம்பரம் பாத்துருக்கோம் வெட்டி சாப்டுரதுக்கு மனுஷன் வேணும்னு விளம்பரம் குடுத்து பாத்திருகின்களா ? ஆமா . ஜெர்மனியிலுள்ள ஆர்மின்  மியுஸ் என்கிற பக்கி எனக்கு வெட்டி சாப்டுரதுக்கு ஆள் வேணும்னு விளம்பரம் போட அதுக்கு ஒரு அடிமை (ஜர்கன் பிரண்ட்ஸ்) அதுவா சிக்க ஒரே வெட்டு குத்து சாப்பாடுதான்.  ஜர்கன் பிரண்ட்ஸ் இன் இந்த முடிவுக்கு வந்ததுக்கு காரணம் அவர் பொண்டாட்டியா கூட இருக்கலாம் தான ?

8டென்னிஸ் ஸ்டார்ம் மற்றும் வலிரியோ ஜெனோ

இவுங்க ரெண்டு பேரும் டட்ச் தொலைகாட்சியை சேர்ந்த பிரபல தொகுப்பாளர்கள்.இவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியானது முட்டாள் தனமான கேள்விகளுக்கு விடையளிக்கும் ஒரு நிகழ்ச்சி.எங்கயோ போற மாரியாத்தா ஏன் மேல வந்து எராதாங்க்ரே கணக்கா மனுஷன் கறி டேஸ்ட் எப்படி இருக்கும் னு யாரோ ஒருத்தர் கேட்க தொகுப்பாளர்கள் இருவரும் தனது வயிறு மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் சிறிது துண்டுகளை வெட்டி எடுத்து அதை ஒருவருக்கொருவர் மற்றவருடைய கறி துண்டுகளை உப்பு போடாமல் சமைத்து  சாப்பிட்டுள்ளனர் அதுவும் இதை நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பில் செய்துள்ளனர்.

7ஜு யு

இவர் இந்த படத்தில் சாப்பிட்டுட்டு இருக்குறது சிக்கன் 65 இல்ல மனித சிசுவை .இந்த ஜு யு சீனாவில் பல வித்தைகளை செய்யும் தொழில் செய்வதாகவும் , புதிதாக இருக்குமே என்று சிசுவை சுவைத்தாகவும் கூறுகிறார்.   குழந்தையில்லாமல் தவம் கிடக்கும் அனைத்து தம்பதிகளும்  இவனை ஒரு சாத்தானாகவே பார்க்கின்றனர்.

6பீட்டர் பிரையன்

பிப்ரவரி 2004 ஆம் ஆண்டு லண்டனில் ,பீட்டர் பிரையன் என்ற இந்த நபர் கொலை குற்றத்திற்காக கைதானதாகவும் , பரோலில் வெளியே வந்த போது தனது நண்பனை கொலை செய்து அவரது  மூளையை தனியே எடுத்து வெண்ணை சேர்த்து சாப்பிட்டுள்ளார்.   ஏன்ப்பா வெளிய வந்தேனா புள்ள குட்டிய போய் பாக்காம இந்த வேலைய பாத்துருக்கியே பா

5யூ யங்- சல் 

மனித ஈரலை மட்டுமே விரும்பும் இந்த யூ யங்- சல் அவரது சொந்த நாடான சவுத் கொரியாவில் இதுவரை 21 பேரை கொன்று ஈரலை சுவைத்துள்ளார்.   பாக்குறதுக்கு பல்லி மாதுரி இருந்துகிட்டு இது பண்ணியிருக்க வேலைய பாருயா !

4அரிப் அலி மற்றும் ஃபார்மன் அலி

ஏப்ரல் 2011 ஆம் ஆண்டு , பாகிஸ்தானில் உள்ள ஒரு சுடுகாட்டில் இருந்து பிணத்தை திருடி வந்து சமைத்து சாப்பிட்டதற்காக  அரிப் அலி மற்றும் ஃபார்மன் அலி ஆகிய இருவரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர்.2014 ஆம் ஆண்டு தண்டனை முடிந்து சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த இவர்கள் திரும்பவும் இரண்டு அல்லது மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையின் பிணங்களை திருடி உண்டுள்ளனர்.   பணம் திருடும் திருடர்கள் மத்தியில் பிணம் திருடும் திருடர்கள் வியப்பின் குறியீடு.

3சுரேந்தர் கோலி

இந்தியாவின் நொய்டா வில் தான் இந்த சுரேந்தர் கோலி 2006-2007 ஆண்டுகளில் 19 கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளை கொலை செய்து பிறகு சாப்பிடவும் செய்துள்ளான்.இத்தகைய பெரும் குற்றத்தை செய்ததற்காக நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது .இதற்கிடையே அவர் தாக்கல் செய்த கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.

2ஜாங் யோங்க்மின் 

இவர் ஒரு சீரியல் கில்லர்.சீனாவை சேர்ந்த இவர் மார்ச் 2008 இல் இருந்து ஏப்ரல் 2012 வரை 11 கொலைகளை செய்துள்ளார் மற்றும் கொலையானவர்களை சாப்பிட்டும் உள்ளார்.அதோடு தனது வீட்டு நாய்களுக்கும் பிறகு அதனை சந்தையிலும் வான்கோழி கறி எனவும் சொல்லி சந்தையில் விற்றுள்ளார்.இவருக்கு மரண தண்டனை ஜனவரி 2010 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

1யோசுவா மில்டன் பிலாஹி 

இவர் கடவுளுக்கு பலிகொடுக்கும் வகையில் ஒன்றுமறியாத குழந்தைகளை பலியிடுவதாக கூறுகிறார்.இவர் பலியிடும் அனைத்து குழந்தைகளின் இதயத்தையும் துண்டுகளாக வெட்டி அந்த மூடநம்பிக்கையில் உறைந்து கிடக்கும் மக்களுக்கு தருகிறான்.இதுவரை 37 குழந்தைகளை கொன்றுள்ளதாக தானே ஒப்புக்கொண்டுள்ளான்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.