உலகின் மிக விலை உயர்ந்த பைக்குகளின் பட்டியல் 2016

பொண்ணுங்களுக்கு எப்படியோ , ஆனா ஆண்களுக்கு தனது பைக்குகளின் மீது அதிக காதல் கொண்டிருகிறார்கள் அதை ஒரு மெசினாக கருதாமல் . விலை உயர்ந்த பைக்குகளின் மீது காதல் கொண்டுள்ள ஆண்களுக்கு தான் தெரியும் ஆசைப்படுவது பேராசையை சேர்ந்ததல்ல என்பது.நம்ம ஊர்ல ராயல் என்பீல்ட் இல்ல யமஹா ஆர் .எக்ஸ் வசுருந்தாலே கெத்துதான் ! ஆனா இதுக்கும் மேல கெத்தா ,  மிரசலா, ராயலா , காஸ்ட்லியா இருக்குற பைக்குள் வேண்டுமா ?   வாருங்கள் ,உலகின் அதிக விலைக்கொண்டுள்ள பைக்குகளின் பட்டியலை பார்க்கலாம்.

10ஐகான் சீன்

இந்த பைக் சுசுகியின் சார்பாக ரேசில் கலந்து கொண்டு இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற பேரி சீன் ஆலோசனை பெற்று இந்த மாடல் உருவாக்கப்படுள்ளது.இந்த பைக் பார்ப்போறின்  கண்னை கவரும் அளவுக்கு மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.இந்த பைக்கின் பல பாகங்கள் விலை உயர்ந்த உலோகங்கள் கொண்டு கையினாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.இது 1400 CC கொண்ட சிறந்த எஞ்சினை கொண்டுள்ளது.இதன் உரிமையாளராக  நீங்கள் மாற $172,000 (ஒரு கோடியே பதினைந்து லட்சம் ) டாலர்கள் தேவை.    

9MMT டர்பைன் ஸ்ட்ரீட் பைட்டர்

இந்த MMT டர்பைன் ஸ்ட்ரீட் பைட்டர் Y2K சூபெர்பைக் எனவும் அறியப்படுகிறது.இந்த பைக் ரோல்ல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்  ஹெலிகாப்டேரில்  பயன்படுத்தப்படும் அதே பவர் ட்ரைன் கொண்டு உருவக்கப்படுள்ளதால் 320 குதிரை திறன்களை 240 மில்லி மீட்டர் விட்டம் கொண்டுள்ள பின் டயருக்கு வழங்குகிறது.இந்த பைக் முழுவதும் அலுமினியதினால் செய்யப்பட்டுள்ளது.
இதனை சொந்தமாக்க $175,000 (ஒரு கோடியே 17 லட்சம் ) தேவை .

8சுசுகி AEM கார்பன் பைபர் ஹயபுஷா

இந்த பைக் 2008 ஆம் ஆண்டு சுசுகி வெளியிட்ட சிறந்த பைக் ஆகும்.இது மணிக்கு 300 மைல் வரை அதி வேகம் செல்லக்கூடிய பைக் ஆகும். இதனை சொந்தமாக்க $200,000 (ஒரு கோடியே 34 லட்சம் ) தேவை .

7டுகாட்டி என்.சி.ஆர்

இது டுகாடி நிறுவனத்தினால் 2012 ஆண்டு வெளியான சுபெர்பைக் ஆகும் .இந்த பட்டியலிலேயே அதிக வேகம் செல்லும் பைக் இது தான்.இது 185 குதிரை திறன்களையும் , ஒரு சிலிண்டரில் நான்கு வால்வுகளையும் பெற்றுள்ளது.இதை நீங்கள் ஓட்டும் போது கோஸ்ட் ரைடர் பீலிங் கிடைக்கும்.இந்த பைக் அதிகம் யாரும் வாங்குவதில்லை என்றாலும்  வெளிநாடுகளில் ஆங்காங்கே ஷோ ரூம்கள் உள்ளன இதனை சொந்தமாக்க $225,000 (ஒரு கோடியே 50 லட்சம் ) தேவை .

6டுகாட்டி டெஸ்மோஸ்டிசியைப்  D16RR  

இது மோடோ ஜீ பி நிகழ்ச்சி ஒன்றில் 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு 2008 ஆண்டு வெளியானது.இது 5.53 நொடிகளில் 100 மைல்கள் செல்லும் அதிகத்திறன் வாய்ந்த எஞ்சினைக் கொண்டுள்ளது.இது முற்றிலும் கார்பன் பைபெரினால் உருவாக்கப்பட்டுள்ளது.இதனை சொந்தமாக்க $232,000 (ஒரு கோடியே 55 லட்சம் ) தேவை .

5எக்கொசே டைட்டேனியம் சீரியஸ்

எக்கொசே, விலை உயந்த பைகுகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனம் ஆகும். இது அதிக தரத்தில் வாகங்களை உற்பத்தி செய்கிறது.இதுவரை எக்கொசெவால் உருவாக்கப்பட்ட முதல் சிறந்த பைக் எக்கொசே டைட்டேனியம் சீரியஸ் தான்.இந்த பைக் பல முன்னணி ஸ்போர்ட்ஸ் மேகசின்களிடம் இருந்து பல விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதன் எஞ்சின் 225 குதிரை திறன் கொண்டுள்ளது.இதனை சொந்தமாக்க $300,000 (2 கோடி ) தேவை .

4தாஜ் டோமஹக் V10 சூப்பர்பைக்

இது நகரங்களில் இயக்க அனுமதி கிடையாது , ரேசில் மட்டுமே பயன்படுத்த கூடியது.இது அதிகமாக 300 மைல் வேகம் செல்லக் கூடியது .2.5 நொடிகளில் 60 மைல்கள் வேகம் செல்லக் கூடியது.இதன் எடை 680 கிலோ ஆகும். இதனை சொந்தமாக்க $550,000 (3 கோடி 64 லட்சம் ) தேவை .

3எக்கொசே ஸ்பிரிட்

உங்கள் பணம் வீணாக லாக்கரில் தூசியடைந்து வீணாக உள்ளதா , ஏதாவது உருப்படியாக வாங்க வேண்டுமா ? இந்த பைக் வாங்கிகோங்க.இது தலைசிறந்த எஞ்சினியர்கள்  அமெரிக்காவில் மற்றும் பிரிட்டனில் இருந்து வரவழைக்கப்பட்டு வுருவக்கபட்ட சிறந்த எஞ்சினாகும்.அதிகபட்சமாக மணிக்கு 230 மைல்கள் செல்லக் கூடியது.பார்முலா 1 வகை கார்களில் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த பைக் வாங்கிய பிறகு நீங்கள் கட்டாயம் இரு வார வாகனம் ஓட்டும் முறைப்பற்றி எக்கொசே தலைமை இடத்தில் ட்ரைனிங் அளிக்கப்படும்.இதன் மூலம் நீங்களோ அல்லது மற்றவரோ காயமடையாமல் இருக்க இதை அந்த நிறுவனம் செய்கிறது.    

21949 E90 AJS போற்குபைன்

இது 1949 களில் வெளியான பழைய பைக்  ஆகும்.இந்த பைக் இதுவரை நான்கு வெர்சன்களில் மட்டுமே வெளியாகியுள்ளது.இது 500 சி சி  போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரண்டு வால்வுகள் மட்டுமே கொண்ட பைக் ஆகும்.   இதனை சொந்தமாக்க $3.6 மில்லியன் தேவை .

1நேமன் மார்க்ஸ் ஃபைட்டர்

இது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பை கொண்டுள்ளது .பார்பதற்கு ஏதோ பெரிய மெசின் மாதிரி தான் தெரிகிறது பைக் மாதிரி அல்ல.இதுவரை 45 பைக்குள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.இது மணிக்கு 190 மைல்கள் வரை செல்லும். இதன் விலை $11 மில்லயன் மட்டுமே ஆகும்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.