உலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்: 9.5 மில்லியன் டாலர் இருந்தால் நீங்களும் செல்லலாம்

 நான் ஸ்விஸ் சுற்றுலா போனேன், நான் எகிப்த் சுற்றுலா போனேன் என சிலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் கூடிய விரைவில் நான் நான் மார்ஸுக்கு சுற்றுலா போனேன் என சொல்லும் காலமும் வெகு தொலைவில் இல்லை.. ஏனென்பது முழுவதும் படித்தால் உங்களுக்கே புரியும்.

ஓரியன் ஸ்பேன் எனும் நிறுவனம் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலகின் முதல் சொகுசு  ஸ்பேஸ் ஹோட்டலை அறிமுகப்படுத்தியது. இந்த சொகுசு விடுதிக்கு அரோரா நிலையம் என பெயரிடப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஹோட்டல் 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் எனவும், முதல் விருந்தினர் குழு 2022 ஆம் ஆண்டு அனுப்பப்படுவார்கள் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த சொகுசு ஆகாய விடுதியில் ஒரே நேரத்தில் ஆறு பேர் மட்டுமே தங்க முடியும். 12 நாட்கள் இந்த விடுதியில் தங்குவதற்கு ஒருவருக்கு 9.5 மில்லியன் டாலர் முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 80,000 டாலர் பணத்தை முன்பணமாக செலுத்தி இப்போதே கூட நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். முன்பதிவு செய்ய விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும். இந்த அறிவிப்பு வெளியான 72 மணி நேரத்தில் முதல் நான்கு மாதங்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆகாய விடுதிக்கு செல்பவர்களுக்கு 24 மாதங்கள் முறையான பயிற்சியையும் ஓரியன் ஸ்பேன் நிறுவனம் வழங்குகிறது. மேலும் ஓரியன் ஸ்பேன் ஆஸ்ட்ரோனட் செர்டிபிகேஷன் எனும் சான்றிதழையும் அந்நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.