தாய்ப்பாலை அதிகரிக்கும் மிகச்சிறந்த 10 உணவுகள்

புதிய தாய்மார்களுக்கு எப்பொழுதுமே எதை சாப்பிட வேண்டும் , எதை சாப்பிட கூடாது , மற்றும் எதை சாப்பிட்டால் அதிக அளவு தாய்ப்பால் உற்பத்தியாகும் என பல சந்தேகங்கள் இருக்கும் . குழந்தை சரியான ஊட்டச்சத்து பெற வேண்டுமென்றால் நீங்கள் காய்கறிகள் பழங்கள் என பலவிதமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பொதுவாக நீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் சிகரெட் , மது போன்ற எதையும் உபயோகப்படுத்தக் கூடாது ஏனென்றால் நீங்கள் சிகரெட் பிடித்தால் உங்கள் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு தாய்ப்பாலின் சுவையும் குறையும் . இதனால் உங்கள் குழந்தை பால் குடிப்பதை நிறுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இயற்கையில் கிடைக்கும் அனைத்து உணவுப் பொருட்களும் சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் சில மிகச்சிறந்த தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை தற்போது பார்க்கலாம் .

10ஓட்ஸ்

ஒரு ஆய்வில் இரும்புச் சத்து குறைவாக உள்ள தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறைவாகவே உற்பத்தி ஆகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . நீங்கள் அனைவரும் அறிந்தார் போல் ஓட்ஸில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது . ஆகவே ஓட்ஸ் நீங்கள் சாப்பிடும் போது உங்கள் ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து அதன் மூலம் தாய்ப்பால் அதிகமாக உற்பத்தியாவதற்குண்டான வாய்ப்பும் அதிகரிக்கிறது.

9பூண்டு

சித்தமருத்துவம் பொருத்தவரையில் அதிக அளவு மருத்துவ பயன்பாடுகள் கொண்ட உணவுப் பொருட்களில் முதலிடத்தில் இருப்பது பூண்டு . நமக்கு எளிதாக கிடைக்கப்பெறும் உணவுப் பொருட்களில் பூண்டு மட்டுமே தாய்ப்பாலை அதிகரிக்கும் மிகச்சிறந்த உணவுப் பொருளாகும் . பூண்டு உங்கள் தாய்ப்பாலை அதிகரிப்பதோடு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று சம்பந்தமான உபாதைகளையும் தடுக்கிறது.
சிலருக்கு பூண்டு நேரடியாக சாப்பிட பிடிக்காது அப்படிப்பட்டவர்கள் பூண்டு மாத்திரை வாங்கி சாப்பிடலாம்.

8பச்சை பப்பாளி

பச்சை பப்பாளி நீங்கள் சாப்பிடும் போது உங்கள் உடலில் "ஆக்ஸிடோசின்" என்ற வேதிப்பொருள் அதிகமாக உற்பத்தியாகி உங்கள் தாய்ப்பால் அதிகரிக்கும். நீங்கள் பச்சை பப்பாளியை வேக வைத்தோ அல்லது அப்படியே கூட சாப்பிடலாம் .

7கேரட்

கேரட்டில் "வைட்டமின் ஏ " அதிக அளவு இருப்பதால் உங்களுடைய தாய்ப்பால் அதிகரிப்பதோடு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும் உதவி செய்கிறது.

6கீரை

கீரைகளில் இல்லாத வைட்டமின் சத்துக்கள் இல்லை என்று சொல்வார்கள். அதிலும் முருங்கைக்கீரையில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. ஆக எந்த கீரை வேண்டுமானாலும் நீங்கள் வேகவைத்து சாப்பிடலாம். இதன் மூலம் தாய்ப்பால் அதிகமாக உற்பத்தி ஆகும் .

5பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் பொதுவாக அஜீரண கோளாறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் இருக்க சாப்பிடுவார்கள். ஆனால் பெருஞ்சீரகத்தில் "ஈஸ்ட்ரோஜன்" என்ற வேதிப்பொருள் போன்ற சத்துக்கள் இருப்பதால் நீங்கள் அதனை சாப்பிடும் போது தாய்ப்பால் அதிகரிக்கிறது.

4வெந்தயம்

வெந்தயம் உங்கள் உடம்பில் உள்ள சூட்டை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதயத்திற்கு இன்னொரு மருத்துவ குணமும் உள்ளது . இதனை நீங்கள் தேயிலை நீருடன் கொதிக்க வைத்து அருந்தினால் உங்களுடைய தாய்பால் அதிகரிக்கும் .

3கொட்டை வகைகள்

பாதாம் முந்திரி மற்றும் பல கொட்டை வகைகள் புரதச்சத்து நிறைந்து இருப்பதால் இதனை நீங்கள் உட்கொள்ளும் போது தாய்ப்பால் அதிக அளவில் அதிகரிக்கிறது . இது போன்ற கொட்டை வகைகளில் "செரடோனின் " என்ற வேதிப் பொருள் அதிகம் உள்ளதால் தாய்ப்பால் அதிகரிக்க மிகவும் உதவி செய்கிறது.

2சுரைக்காய்

பொதுவாகவே நீங்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் காலகட்டங்களில் உங்கள் உடம்பில் உள்ள தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து விடும். ஆகவே அனைத்து மருத்துவர்களும் குறைந்தது தினமும் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க அறிவுறுத்துகின்றனர் . இதன் மூலம் உங்களுக்கு பாலின் அளவு அதிகரிக்கும் . இது மட்டுமல்லாமல் நீர்சத்து நிறைந்த சுரைக்காய் உட்கொள்ளும் போது நீர் சத்து குறைபாடு குறைகிறது.

1கிழங்கான் மீன்

ஆங்கிலத்தில் "சால்மன்" என்று அழைக்கப்படும் இந்த கிழங்கான் மீனில் அதிக அளவு DHA மற்றும் ஒமேகா 3 இருப்பதால் தாய்ப்பால் அதிகரிப்பதோடு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற் கும் வழிவகுக்கிறது .

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தயவுசெய்து ஷேர் செய்யவும்

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.