ஆரோக்கியமான வாழ்விற்கு பின்பற்ற வேண்டிய பத்து வழிமுறைகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றது போல் , யார் நோயில்லாமல் வாழ்கிறாரோ அவரே செல்வந்தர் ஆவார்.அதனால் ,நாங்கள் (மௌவல்) உடல் நலகுறைவில்லாமல் வாழ பத்து வழிகளை வரிசைபடுதியுள்ளோம்.

10சரியான நேரத்தில் தூங்க செல்லுங்கள் 

சரியான நேரத்தில் தூங்க செல்லுங்கள் ஏனென்றால் உலக சுகாதார அமைப்பின் படி சரியான தூக்கத்தின் போதுதான் உடலுக்கு தேவையான என்சைம் உற்பத்தியாகும் என்று தெரிவித்து உள்ளனர். 

9கொழுப்பு நிறைந்த அசைவத்தை தவிர்த்திடுங்கள்

நீங்கள் அசைவம் சாப்பிட ஆசைபட்டால் நாட்டுகோழி சிறந்தது .ஆனால் ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சியை போதுமான அளவு தவிர்த்திடுங்கள்.

8தானிய வகைகளை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்திடுங்கள் 

தானிய வகைகளை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்திடுங்கள் ஏனென்றால் இது உடலில் உள்ள கொழுப்பு பொருட்களை குறைக்க வல்லது.

7காய்கறிகள் மற்றும் கீரைகளை அன்றாட உணவில் சேர்த்திடுங்கள் 

நமது தமிழ் நாட்டில் மட்டுமே உடலுக்கு நன்மை தரும் பல கீரை வகைகள் உள்ளன .அநேக சத்துக்களும் கீரையில் உள்ளது என்பது குறிப்பிட தக்கது.

6பல்வகை பழங்களை  உண்ணுங்கள் 

விட்டமின்ஸ் அதிகம் நிறைந்த பழங்களை  தேர்தெடுத்து உண்ணுங்கள் அதனால் உங்கள் ரத்த ஓட்டம் மற்றும் உடல் நலம் சீராகும்.

5மனதை அமைதி படுத்த கற்றுக்கொள்ளுங்கள் 

மனதை அமைதி படுத்த யோகா ஒரு சிறந்த வழி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. 

4சூரிய ஒளி உடலுக்கு நல்லது 

மாலை வெயில் விட்டமின் டி எனப்படும் சதுப்போருளை வெளிபடுத்த வல்லது.ஆகவே சூரிய ஒளியில் நடைபயிற்சி நல்லது.

3தூய காற்றை சுவாசியுங்கள் 

நீங்கள் காலையில் தூய காற்றை சுவாசிக்கும் பொழுது உடல் புத்துணர்வு பெறும்.

2தினந்தோறும் உடற்பயிற்சி அவசியம்.

உடல் நலம் பெற குறைந்தபட்சம் பதினைந்து நிமிடமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.

1அதிக குடி நீர் எடுத்துகொண்டால் ,அதிக உடல் நலம் பெறலாம். 

நமது உடலில் 70 சதவீதம் தண்ணீரினால் மட்டுமே ஆனது என்பது நாம் அனைவரும் அறிந்ததே .இது ஜீரன சக்தியை அதிகரிப்பதோடு மற்றும் உடலுக்கு சுறுசுறுப்பையும் அதிகரிக்கிறது.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.