அதிகமாக இன்டர்நெட்டில் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் ,2015

கூகிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டின் இறுதியில் ,அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .அதை தற்போது காண்போம்.

10
ஜோகோவிக்

இவர் ஆடவர் ஒற்றை டென்னிஸ் பிரிவில் டென்னிஸ் தொழில்முறை சங்கத்தின் படி முதல் டென்னிஸ் வீரர் ஆவர் .எந்த ஆண்டின் பட்டியலை எடுத்து பார்த்தாலும் இவர் முதல் ஐந்து இடதுற்குள் இடம் பெறுவார் இந்த மிகத்திறமை வாய்ந்த டென்னிஸ் வீரர்.இவர் "கிராண்ட் ஸ்லம்" எனப்படும் மிக உயரிய டைட்டிலை தனக்கு 10 முறை சொந்தமாக்கிகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

9யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் (பிறந்தது 12 டிசம்பர் 1981) ஒரு இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இவர் 2007 ல் நடந்த 20 ஓவர் உலககோப்பை இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் ,ஸ்டூவர்ட் பந்துவீச்சில் ஒரே ஓவரில் ஆறு சிக்செர்கள் அடித்து மிகவும் திறமைசாலி என்பதை நிரூபித்தவர் .மற்றும் 12 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ,அதிவேக ஐம்பதுகளின் வரிசையில் முதல் இடத்தில உள்ளார்.IPL போட்டிகளில் அதிக விலைக்கு ஏலம் போகும் ஒரு ஆல்ரௌண்டெர் ஆவார்.சமீபத்தில் நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சைக்கு பின்பு இவருக்கு கிரிகெட் விளையாட உடல் ஒத்துழைகுமோ இல்லையோ என்ற எண்ணம் பலருக்கு எழுந்தது .
அனால் அதையும் தாண்டி ,என்னால் சாதிக்க முடியும் என்று நிரூபித்து காட்ட்யிருகிறார், யுவராஜ் .

8ரோஹித் சர்மா

இவர் வலது கையில் பேட்டிங்கும் ,இடது கையில் சுழற்பந்தும் வீசக்கூடிய இந்தியாவின் சிறந்த துடுப்பாட்டக்காரர்.சர்வதேச ஒரு நாள் கிரிகெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஆவர்.

7சானியா மிர்சா

சானியா மிர்சா இந்தியாவின் மிகசிறந்த பெண் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆவார் .அதோடு அதிக சம்பளம் பெரும் விழாது வீரரும் ஆவார்.இவர் 2013 ல் ஒற்றை ஆட்ட பிரிவில் இருந்து ஓய்வு பெரும் வரை ,ஒற்றை இரட்டை என அனைத்து பார்மேட்டுகளிலும் முதல் இடத்தில இருந்தவர்.

6ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர்,இவர் ச்விச்ஸ் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆவர் .உலக தலைசிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இவர் மூன்றாவது இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5
கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ,இவர் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர் என அனைவராலும் பாராட்டப்படும் ஒருவர் .மூன்று முறை பிபா(FIFA) உலககோப்பையை வென்ற போர்த்துகீசிய அணியிலும் மற்றும் ஐந்து முறை தங்க காலணிகளை வென்ற வீரரும் ஆவார்.

4எம் எஸ் தோனி

2004 ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒரு நாள் போட்டியிலேயே இவர் முதலில் விளையாட ஆரம்பித்தார் .பெஸ்ட் பிநிஷேர் மற்றும் கேப்டன் போன்ற பட்டங்களை எளிதில் தனக்குரித்தாகியவர்.அதிக வெற்றிகளை இந்தியாவிற்கு பெற்றுதந்த கேப்டன் என்று சொல்வதற்கு அவர் உழைப்பு மற்றும் சரியான திட்டமிடுதலே காரணம் என கிரிகெட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

3சச்சின் டெண்டுல்கர்

இந்தியாவில் கிரிகெட்டின் தந்தை மற்றும் லிட்டில் மாஸ்டர் என அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.இவரது கிரிகெட் சாதனைகளை பட்டியலிட ஒரு புத்தகமே பத்தாது.24 ஆண்டுகள் கிரிக்கட் விளையாடி இந்தியாவிற்கு பல விருதுகளை கொண்டு வந்தவர் .இவரைக் கண்டால் பயந்து நடுங்கம் பௌலேர்கள் இன்றளவும் உள்ளனர். 

2லியோனல் மெஸ்ஸி

இவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வைப் போலவே மிகசிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் .இவர் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியில் விளையாடி வருகிறார் .இவர் கால்பந்தாட்டத்தில் வாங்காத பட்டமே இல்லை என்றே  கூறலாம் .இவர் 2015 ல் அதிக மக்களால் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

1விராத் கோஹ்லி

இந்தியாவின் சச்சினுக்கு அடுத்தபடியாக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் இவரே 2015 ல் அதிக மக்களால் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதல்  இடத்தை பிடித்துள்ளார்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.