விசித்திர சக்திகள் கொண்ட அதிசய மனிதர்கள்

பார்லேஜி சக்திமானில் தொடங்கி ஸ்பைடர் மேன் வரை அனைத்து சூப்பர் ஹீரோக்களும் நம் மனதுக்கு மிகவும் பிடித்தவர்களே! ஏன்னா, அவுங்களாலதான் நினைத்த நிமிடம் பறக்க முடியும் யாராக இருந்தாலும் தூக்கி போட்டு மிதிக்க முடியும். இதெல்லாம், இயல்பு வாழ்க்கைல யாராலும் பண்ண முடியாதுனு தெரிஞ்சும் , முதல் ஆளா குயுல நின்னு டிக்கெட் வாங்குறோம்!   ஒரு வேலை நம்ம சூப்பர் ஹீரோக்களை போலவே , நிஜ வாழ்க்கையில் அதீத சக்திகள் கொண்ட மனிதர்கள் இந்த பூமியில் வாழ்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?   விஜயகாந்த் படத்தில் வரும் டயலாக்  "இந்த நரசிம்மாவை தொட்டா கரண்டுக்கே ஷாக் அடிக்கும்" போல ஒருத்தர் தான் உடம்புல மின்சாரத்தை தேக்கி வைக்குறவர் முதல் கண்ணுலயே X-ராய் பண்ணி நோய் என்னனு கண்டுபிடிக்குற பொண்ணு வரை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

10மனித புகைப்பட கருவி

பிரிட்டிஷ் காரரான ஸ்டீபன் வில்ட்ஷைர் க்கு பிறவி முதலே தான் கண்ணில் பார்க்கும் எதையும் ஒரு சிறு பிழையின்றி அப்படியே வரைந்து விடும் அதீத திறமையை கொண்டுள்ளார். இவரின் இந்த திறமையானது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இவர் கண்களால் கண்டு வரையும் ஓவியமும், நவீன கேமராவில் அதே கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒரு பிழை கூட இருக்காதாம். இவர் அவ்வப்போது ஹெலிகாப்டரில் பறந்து அவர் கண்ணில் படும் காட்சிகளை ஓவியமாக  வரைந்துள்ளார்.   மதுரைக்காரனுக்கு கையே கத்தி , விரலே வீச்சு மாதிரி இவருக்கு கண்ணே கேமரா போல !

9பனி மனிதன்

விம் ஹால்ப் எனும் இவர்   உறையவைக்கும் பனியிலும் சர்வ சாதாரணமாக பல மணிநேரம் இருக்கும் வல்லமையை கொண்டுள்ளார்.இவர் இதுவரை 20 கின்னஸ் ரெகார்ட் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதில் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களுக்குள் கிளிமாஞ்சாரோ எனும் பனி மலையை கடந்த சாதனையும் அடங்கும்.   ஒரு சின்ன ஐஸ் கட்டி மேல விழுந்தாவே துள்ளி குதிக்கும் நமக்கு இவர் சூப்பர் ஹீரோ தான்.

8பார்வையில்லை ஆனால் பார்க்க முடியும்

டேனியல் கிஸ் எனும் இவர் விழித்திரையில் உருவான கேன்சரின் காரணமாக தனது இரண்டு கண்களின் பார்வையையும்  இழந்தவர்.மற்ற பார்வை இழந்தாரைப்போல் அல்லாமல்  வௌவால் மற்றும் திமிங்கலம் (எக்கோ லொகேஷன்) தனது நாக்கின் மூலம் ஒரு வித ஒலி எழுப்பி பிறகு அது பாதையில் இருக்கும் ஏதாவது பொருளின் மீது பட்டு எதிரொலிக்கும் ஒலியைக்கொண்டு தனது பாதையை தேர்ந்தெடுப்பது போல் இவரும் செய்கிறார்.   இவரைப்போன்ற அனைவருக்கும் இவர் எக்கோ லொகேஷன் முறையை சொல்லிக்கொடுத்து , எப்படி பார்வையுள்ளவர்கள் போல் நாமும் வாழ்வது என பயிற்சியளித்து வருகிறார்.

7வலியில்லா வாழ்க்கை

ஆம்,டிம் கிரிட்லண்ட் எனும் இவருக்கு பிறப்பு முதலே வலியை உணரும் தன்மை இல்லை. பொதுவாக , ஏதேனும் நமது உடலில் காயம் ஏற்பட்டால் நரம்புகளிலிருந்து மூளைக்கு சிக்னல் செல்வதன் மூலம் நாம் வலியை உணர்கிறோம். ஆனால், இவருக்கு உடலில் வலி ஏற்படும் போது எந்த சிக்கினலும் மூளைக்கு செல்வதில்லை ஆகவே இவருக்கு வலி என்றால் என்னவென்றே தெரியவில்லை.   இதனை காசாக மாற்ற நினைத்த அவர் " சமோரா த டார்ச்சர் கிங்" எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் , கம்பியை கொண்டு உடலில் பல பகுதிகளில் ஓட்டை போடுவது, நெருப்பு கட்டியை முழுங்குவது போன்ற பல அறிய செயல்களை செய்து பிழைத்து வருகிறார்.

6நீர் மனிதன்

நம்ம கொஞ்ச நேரம் மூச்சு பிடித்து தண்ணீரில் இருப்பதே பெரிய விஷயம் ஆனால் நியூசிலாந்தை சேர்ந்த டேவ் முள்ளின்ஸ் எனும் இவர் நான்கு நிமிடத்திற்கு மேலாக  மூச்சு பிடித்து கடலின் அதிக ஆழம் (266 meter )சென்றதற்காக பல கின்னஸ் ரெகார்ட் வைத்துள்ளார். இவர் நீர் மனிதன் (AQUA MAN ) எனவே அறியப்படுகிறார்.

5எதையும் சாப்பிடும் அதிசய மனிதர்

மைக்கல் லோடிடோ எனும் இவர் இரும்பு, கண்ணாடி, ரப்பர் போன்ற அனைத்தையும் சர்வ சாதாரணமாக உண்ணும் திறமை கொண்டவர்.இவர் இதுவரை ஒரு விமானம், 21 தொலைக்காட்சிகள் , 1 காட்டில் , 2 பீரோ போன்றவற்றை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இதுவே நம்மில் எவரேனும் ஒரு இரும்பு துணுக்கு சாப்பிட்டிருந்தாலே உயிர் போயிருக்கும் ஆனால் இவர் இதை விரும்பி சாப்பிட்டு ஜீரணம் செய்து வருகிறார்.   இவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் இவரது ஜீரண சக்தியை பார்த்து மிரண்டு போகின்றனர்.

4ரப்பர் பாய்

உடலை எப்படி வேண்டுமானாலும் சுருக்கி விரிக்கும் டேனியல் பிரௌனிங் ஸ்மித்தே அந்த ரப்பர் பாய். டென்னிஸ் பேட்டில் தனது உடலை உள்ளே கொண்டு செல்வது தான் இவரின் தனி சிறப்பு.

3கூகிள் அங்கிள்

சமீபத்தில் "த ரைன் மேன்" எனும் ஹாலிவுட் படம் வெளியாகி ஆஸ்கார் வென்றுள்ளது. அக்கதை கிம் பீக்ஸ் என்பவரின் உண்மை கதையே.இவரால் மிகப்பெரிய புத்தகத்தினை கூட 1 மணி நேரத்தில் படித்து முடிக்க முடியும். ஆம் , இவரால் இடது கண்ணில் ஒரு பக்கத்தையும் , வலது கண்ணில் இன்னொரு பக்கத்தையும் ஒரே சமயத்தில் படிக்க முடியும் அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 98 சதவீதம் சரியாக பதிலளிக்கவும் செய்கிறார்.எனவே , இவர் மனித என்சைக்ளோ பீடியா எனவும் அறியப்படுகிறார்   இவருக்கு எப்படி இவ்வளவு நியாபக சக்தி மற்றும் படிக்கும் திறன் என்பதை அறிய நரம்பியல் மற்றும் அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். சிறு வயதில் இவரை மன நிலை பாதிக்கப்பட்டோர் இல்லத்தில் சேர்க்க பரிந்துரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2மின்சார மனிதன்

செரிபியாவில் பிறந்த ஸ்லாவிசா பல்ஜிக் எனும் இவர் , தனது உடம்பிலிருந்து மின்சாரத்தை வெளியிடுகிறார். இவர் தனது கைகளாலேயே தண்ணீரை 97 டிகிரி வரை சூடு செய்ய முடிகிறது. ஒரு முறை இவர் மின்சார வேலியை தொட்டதாகவும் அப்போது ஷாக் அடிக்கவில்லை எனவும், அப்போதிலிருந்துதான் இந்த சக்தி தனக்கு கிடைத்ததாகவும் கூறுகிறார்.   உடம்பிலிருந்து கரெண்ட் வந்துச்சுனா இவர் தொட்டா ஷாக் அடிச்சு இறந்துடுவாங்களா ? இவர் எப்போ மின்சாரம் வெளியாகணும்னு நினைக்கிறாரோ அப்போதான் வெளியாகும் மத்த சமயங்களில் மின்சாரம் வெளிப்படாது.   இதுவரை 2 கின்னஸ் ரெகார்ட் படைத்த இவர் மேலும் ஒரு கின்னஸ் ரெகார்ட் பண்ண இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

1X-RAY பார்வை

ரஷ்யாவை சேர்ந்த நட்டாஷாங்கிற இந்த பொண்ணுக்கு தான் X-RAY பார்வை இருக்கு. இந்த பொண்ணுக்கு யாரையாவது பார்க்கும் போது உள்ள இருக்கும் எல்லா ஸ்பார் பார்ட்ஸும் கண்ணுக்கு தெரியுமாம். இந்த பொண்ணு பொய்  சொல்லுதுனு நினைச்ச டாக்டர்ஸ் , டெஸ்ட் பண்ண 7 பேஷண்டை கொண்டு வந்தாங்க. இங்க இருப்பர்வகள் ல யாருக்கு தலையில மெட்டல் வச்சுருக்கு , கிட்னி ஆபரேஷன்  யாருக்கு பண்ணிருக்குனு அந்த பொண்ண கண்டுபிடிக்க சொன்னாங்க .7 பேத்துல 5 பேருக்கு கரெக்ட் டா இந்த ஆபரேஷன் தான் பண்ணிருக்குனு கரெக்ட் டா கண்டுபுடிச்சுருச்சு.   டாக்டர்ஸ் மிரண்டு போய்ட்டாங்க ! இந்த பொண்ணுக்கு நிறைய மனித உறுப்புகளை பற்றி சொல்லிக்கொடுத்து X-RAY இல்லாம எப்படி நோயை கண்டுபிடிக்கலாம்னு ஆராய்ச்சி பண்ணிட்டு வராங்க!

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.