நரேந்திர மோடி கொண்டு வந்த உன்னதமான பத்து சிறந்த திட்டங்கள்

இந்தியாவின் பிரதம மந்திரி நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் இந்திய விவசாய துறை முதல் தொழிநுட்ப துறைகள் வரை பல துறைகள் பல்வேறு வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.அதில் சில சிறந்த திட்டங்களை மௌவல் உங்களக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.

10விவசாயத்திற்கு உதவும் திட்டங்கள்

கிஷான் டிவி   விவசாயத்தை முன்னேற்றும் வகையில் கிஷான் தொலைகாட்சி எனப்படும் சேனலை துவக்கி உழவர்களுக்கு உதவும் பல குறிப்புகள் உட்பட பல நிகழ்சிகளை தொகுத்து வழங்குகிறது.   மண் தரத்தை சரிபார்க்க "சாயில் ஹெல்த் கார்ட்"   2015 ல் இந்திய அரசாங்கத்தால் விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்த கார்டையும் ,தங்களது வயலின் மண்ணையும் மண் பரிசோதனை ஆய்வகங்களுக்கு கொண்டு சென்றால் ,அப்பொழுதே மண்ணை பரிசோதனை செய்து இந்த மண்ணில் என்ன பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம் மற்றும் எந்த பூச்சுகொல்லி மருந்து உபயோகிக்கலாம் என அனைத்தையும் விவசாயிக்கு பரிந்துரை செய்கின்றனர்.   பாரம்பரிய விவசாய மேம்படுத்தல் திட்டம்   பூச்சிகொல்லிகளை அதிகம் உபயோகிப்பதனால் உணவே விசாமாவதை தடுக்க ஆர்கானிக் முறையில் விளைச்சலை பெருக்க பல நல்ல வழிகளை பரிந்துரைக்கும் நல்ல திட்டம் இது .

9பிரதம மந்திரி ஜன தான் யோஜனா

அனைவரும் வங்கி கணக்கு துவங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தினால் எளிய மக்களும் பணம் சேமித்தல் ,பணம் அனுப்புதல் , ஓய்வூதியம் பெறுதல் போன்ற அனைத்து சேவைகளையும் பெற முடியும் .முக்கியமாக கருப்பு பணத்தை கண்டுபுடிக்க மற்றும் ஏதேனும் நிவாரணம் அல்லது இழப்பீடு அரசு வழங்குவதாக  இருந்தால் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த இயலும். இத்திட்டத்தை துவங்கிய ஒரு வாரத்திலேயே 1.5 கோடி மக்கள் தங்கள் சேமிப்பு கணக்கை துவக்கி கின்னஸ் ரெகார்ட் இந்திய படைத்துள்ளது.

8பெண் குழந்தைக்கான அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டம் 

சுகன்யா சம்ரிட்தி யோஜனா என்கிற இத்திட்டத்தில் தன் பெண் குழந்தையின் பெயரை 1000 ரூபாய் கட்டி இந்தியாவிலுள்ள எந்த அஞ்சல் அலுவலகத்திலும் சேர்க்க முடியும்.ஆண்டு வீதம் 1000 முதல் 1,50000 வரை செலுத்த இயலும். நீங்கள் செலுத்தும் தொகைக்கு அதிக வட்டி விகிதமான 8.6% வட்டி கிடைக்கும்.ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே துவக்க இயலும் மற்றும் உங்கள் குழந்தையின் வயது பத்து வயதிற்குள்ளதாக இருக்க வேண்டும்.

7பஹல் 

ஆதார் கார்டை சேமிப்பு வங்கி கணக்கில் இணைப்பதன் மூலம் ,இத்திட்டத்தின் கீழ் அனைத்து இந்திய மக்களும் தனது LPG மானியதொகையை நேரடியாக தனது வங்கி கணக்கில் பெற இயலும் .
அதோடு , அதிக விலைகொடுத்து கேஸ் வாங்கும் நிலைமை தவிர்க்கப்படும்.
இந்தியாவில் 65 லட்சம் மக்கள் தனது மானியத்தை விட்டு கொடுத்ததன் விளைவாக வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அதாவது வருடம் 27,000 குறைவாக ஊதியம் பெரும் மக்களுக்கு இதுவரை 50,000 பேர்  LPG இணைப்பை பெற்றுள்ளனர். 

6மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சாரம் 

என்ன தான் கணினி , இணையத்தளம் , தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் இந்தியாவின் பல நகரங்கள் வளர்ச்சியடைந்தாலும் இன்னும் சில கிராமங்கள் அடிப்படை தேவையான மின்சாரமே இல்லாமல் இருக்கிறது.இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக "தீன் தயால் உபத்யாய கிராம் ஜோதி யோஜனா" எனும் திட்டத்தை துவக்கி இதுவரை 7008 கிராமங்களுக்கு மின்வசதியை கொடுத்துள்ளனர்.

5இந்தியா முழுவதும் தரமான நெடுஞ்சாலை

மோடி பிரதமர் பொறுப்பேற்ற பின் ,2015 - 2016 ல் , இதுவரை 6,029 கிலோ மீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலைகள் இந்திய முழுவதும் போடப்பட்டுள்ளது.

4வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI ) - இந்தியா முதலிடம் 

வெளிநாட்டில் உள்ள அனைத்து கம்பனிகளையும் " மேக் இன் இந்தியா" என்னும் நிகழ்ச்சியை மோடி நடத்தி இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று அழைத்தான் மூலம் 63 பில்லியன் தொகையை இந்தியா முதலீடாக பெற்றுள்ளது . இதன் மூலம் வேலை வைப்பு அதிகரிப்பதோடு இந்தியாவும் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது.அதோடு இந்த மிகப்பெரிய தொகையை முதலீடாக பெற்றதன் மூலம் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3இந்தியாவிற்கென சொந்த குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்

வளர்ந்து வரும் தொழில் நுட்பம் காரணமாக , இந்தியாவிலுள்ள அனைவரும் GPS தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் செல்லும் இடத்தை தேர்வு செய்து , அதில் தோன்றும் வரைபடம் மற்றும் பாதையை பின்பற்றி செல்கின்றனர்.இந்த தொழில்நுட்பமானது அமெரிக்காவில் 24 செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஒரு தொழில்நுட்பம்.இதை போலவே , "இந்தியன் ரீஜனல் நேவிகேசன் சிஸ்டம் " எனும் சேவையை இந்தியா துவக்கியுள்ளது.இதன் மூலம் அனைத்து இந்தியரும் மற்றும் சில இந்தியாவின் நட்புறவு நாடுகளும் விதமாக ஏப்ரல் மாதம் 2016 அன்று PSLV ராக்கட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சாதனை மூலம் GPS யை சொந்தமாக கொண்டுள்ள நான்கு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2காதிமண் எக்ஸ்பிரஸ் 

இந்தியாவிலேயே அதிக வேகம் செல்லும் ரயில் ஏப்ரல் 2015 அன்று துவக்கப்பட்டது .இது மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம் செல்லும் மற்றும் அனைத்து நவீன வசதிகளையும் இந்த ரயிலில் உள்ளது . இந்த ரயில் டெல்லியில் இருந்து ஆக்ரா வரை செல்கிறது .வெறும் ஒரு மணி நேரம் , நாற்பது வினாடிகளில் 180 கிலோமீட்டரை கடக்கிறது .

1பழைய தெரு விளக்குகள் , LED விளக்குகளாக மாற்றம் 

இது என்ன அவ்ளோ பெரிய சாதனையா என்று நீங்க நினைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் வருடத்திற்கு 2000 மெகா வாட் மின்சாரத்திற்கு மேல் மிச்சப்படுத்தலாம்.இதன் மூலம் இந்தியாவிற்கு 850 மில்லியன் லாபம் கிடைக்கும்.இதுவரை 3.5 கோடி தெரு விளக்குகளில் ஆறு லட்சத்திற்கு மேலானா LED விளக்குகள் மாற்றப்பட்டுள்ளது.2019 குள்ளாக அனைத்து தெருவிளக்குகளும் மாற்றப்படும்.அதோடு புளோரசென்ட் விளக்குகள் மூலம் வெளிப்படும் 8.5 டன் / ஆண்டு கார்பன்டை ஆக்சைட் தடுத்து நிறுத்தப்படும்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.