அ.இ.அ.தி.மு.க வெளியிட்டுள்ள சிறந்த பத்து தேர்தல் வாக்குறுதிகள்

2016 இன் மே 16 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலை முன்னிட்டு திராவிட கட்சிகள் உட்பட பல கட்சிங்கள் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.குறிப்பாக ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க வெளியிட்டுள்ள மக்களுக்கு பயன்படக்கூடிய மற்றும் சிறந்த பத்து தேர்தல் அறிக்கைகளை தொகுத்து வழங்குவதற்கு மௌவல் கடமைப்பட்டுள்ளது.

10அனைத்து தமிழ் மக்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் , தமிழ் நாட்டில் முற்றிலும் மின்சார துண்டிப்பை நீக்கிய நான் , இந்த தேர்தலில் வெற்றி பெறச்செய்தால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை  அனைத்து தமிழ் மக்களுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என தெரிவித்துள்ளார்.

9வேலை வாய்ப்பு

குடும்பத்தில் யாரேனும் ஒரு படித்த இளைஞருக்கு கட்டாய வேலை வாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறார்.

8மடிக்கணினி மற்றும் இலவச இணையதள சேவை

அனைத்து பனிரெண்டு மற்றும் பதினோராம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி அளிப்பதோடு இலவச இணையதள வசதியை ஏற்படுத்தி தருவதாக தெரிவித்துள்ளார்.

7வேலைக்கு  செல்லும் பெண்களுக்கு ஒரு ஆப்பர்

அனைத்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் ஸ்கூடர் வாங்கினால் 50 சதவீத தள்ளுபடியை பெறலாம்.இது வேலை செல்லும் பெண்களுக்காகவே பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கை.

6கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை

ஏழை எளிய தாய்மார்களுக்கு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவி செய்யும் விதமாக அம்மா திட்டத்தின் கீழ் உதவித்தொகை 18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் .அதோடு கர்ப்பிணி கால வேலை விடுப்பை ஒன்பது மாதங்களாக உயர்த்த சட்டம் கொண்டுவரப்படும் .

5அரசு அலுவலர்களுக்கு வீட்டுக்கடன்

அரசு அலுவலர்களுக்கு முன்னால் இருந்ததை விட அதிகமாக இனிவரும் காலங்களில் வீட்டுக்கடன் நாற்பது லட்சமாக உயர்த்தப்படும் அதோடு பழைய பென்சன் முறை திரும்ப கொண்டுவரப்படும்

4திருமணத்திற்கு தங்க நகை

ஏழை மற்றும் எளிய மக்கள் திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.

3பால் விலை குறைக்கப்படும்

மக்கள் தினந்தோறும் உபயோகப்படுத்தும் ஆவின் பால் ஒரு லிட்டரின் விலை ரூபாய் 25 ஆக குறைக்கப்படும்.

2கல்விகடன் தள்ளுபடி செய்யப்படும்

வேலையில்லா பட்டதாரிகளின் கல்விக்கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்.

1இலவச செல்போன் மற்றும் கோஆப்டெக்ஸ் கூப்பன்

அனைத்து ரேஷன் கார்டு உரிமையாளர்களுக்கும் செல்போன் இலவசம் அதோடு ஒவ்வொரு பொங்கலுக்கும் 500 ரூபாய் மதிப்புள்ள கோஆப்டெக்ஸ் கூப்பன் இலவசம்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.