உலகின் மிக உயர்ந்த மலைச் சிகரங்களின் பட்டியல்

உலகின் உயர்ந்த மலைகளை பற்றி தெரிந்துகொள்ள முயன்ற பொது நான் அதிர்ச்சி அடைந்ததும் பெருமிதம் கொண்டதும் பற்றி உங்களுடன் பகிரவுள்ளேன். அது உலகின் முதல் பத்து உயர்ந்த மலைகளும் இமயமலை தொடர்களில் தான் உள்ளது. அதனால் தானோ என்னவோ அண்டை நாடுகள் நம்மிடம் சண்டை இடுகின்றனவோ சரி பட்டியலை பார்ப்போம்


10அன்னபூர்ணா (Annapurna )


இமயமலை தொடரின் நேபாள எல்லையில் அன்னபூர்ணா மலை அமைந்துள்ளது. இது சோ ஓயு மலையை பிரதானமாக கொண்டது. இதன் உயரம்  கடல் மட்டத்திலிருந்து 8091 மீட்டர்கள். இதனை பிரான்ஸ் நாட்டைச்சார்ந்த மௌரிஸ் ஹெர்ஸ்வ்க் மற்றும் லூயிஸ் லாச்சேனல் 1950ஆம் ஆண்டு ஜூன் 3 முதன் முதலாக உச்சியை அடைந்தனர்.

9நங்க பர்வதம் (Nanga Parbat)


நங்க பர்பத் இமயமலைத் தொடரின் மகாலங்கூர் இமால் என்னும் துணைத் தொடரில் உள்ள ஒரு மலை ஆகும். இது பாகிசுத்தானால் நிர்வகிக்கப்படும் காசுமீரின் அசுத்தோரே மாவட்டத்தில் சிந்து நதிக்குச் சற்றுத் தெற்கில் அமைந்துள்ளது.  8,126 மீட்டர்கள் உயரம் கொண்ட இது உலகின் ஒன்பதாவது உயரமான மலை என்ற சிறப்பை பெற்றுள்ளது. 1953 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி ஏர்மன் புல் என்பவர் முதன் முதலாக இதன் உச்சியை அடைந்தார்.


8மனஸ்லு  (Manaslu)

மனஸ்லு 8,126 மீட்டர்கள் உயரம் கொண்ட இது உலகின் எட்டாவது உயரமான மலை என்ற சிறப்பை பெற்றுள்ளது. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலய மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.


7தௌலாகிரி  (Dhaulagiri )


தௌலாகிரி  8,167 மீட்டர்கள் உயரம் கொண்ட இது உலகின் ஏழாவது உயரமான மலை. இமயமலையின் கிழக்கு பகுதியில் உள்ள தொடரில் உள்ளது. தௌலாகிரி என்பதற்கு வெண்மலை  என்பது பொருள்.


6சோ ஓயு(Cho Oyu)


சோ ஓயு 8,201 மீட்டர்கள் உயரம் கொண்ட இது உலகின் ஆறாவது உயரமான மலை.  எவரெஸ்ட் மலைக்கு 20 கி.மீ மேற்கிலும் நேபாளம் மற்றும் சீனாவிற்கும் இடையிலும் உள்ளது


5மக்காலு (Makalu)


மக்காலு  உலகிலேயே ஐந்தாவது உயரமான மலை. இது இமய மலைத் தொடரில் எவரெஸ்ட் மலைக்கு கிழக்கே 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மக்காலு தனி முகடாக நான்கு முகம் கொண்ட சதுரவடி கூம்புப் பட்டகம் போல் உள்ளது. மலையின் உச்சி கடல் மட்டத்தில் இருந்து 8,462 மீட்டர் உயரத்தில் உள்ளது. உயரமான பின்புல மலைப்பகுதியில் இருந்து இதன் தனி முகடு மட்டுமே 2,386 மீ நிற்கின்றது.


4இலோட்ஃசே மலை(Lhotse)


இலோட்ஃசே என்னும் மலை  உலகிலேயே 4 ஆவது மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,516 மீ ஆகும். இமய மலைத் தொடரில் எவரெசுட்டு மலையுடன் சவுத் கால் என்னும் இடத்துடன் தொடர்புடையது. இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது.


3கஞ்சஞ்சங்கா மலை(Kangchenjunga)


கஞ்சன்சங்கா உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் மலை ஆகும். இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ. இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.கஞ்சன் ஜங்கா என்பது பனியின் ஐந்து புதையல்கள் என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை. 1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.


2கே-2 கொடுமுடி


உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது இக் கே-2 என்னும் கொடுமுடிதான். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோர மலைத் தொடரில் உள்ள 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. சீனர்கள் இதனை கோகிர் (Qogir) என்று அழைக்கிறார்கள். இதன் மற்ற பெயர்களாவன, 'கோ'ட்வின் -ஆஸ்டின் மலை (Mount Godwin-Austen), லம்பா பஃஅர் (Lambha Pahar), சோகோரி, கெச்சு, தப்ஸங்கு.


1எவரெஸ்ட் (இமயமலை)


எவரெசுட்டு சிகரம் (அல்லது எவரெஸ்ட் சிகரம்), நேபாளத்தில் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) ஆகும். இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் எவரெஸ்ட் மலை அமைந்து உள்ளது. மேலும், பூமியின் மையத்தில் இருந்து அளக்கப்பட்டால், 5 வது உயரமான மலை ஆகும். இது இமயமலையின் பிரிவில் அமைந்துள்ளது. சீனா (திபெத் தன்னாட்சிப் பகுதி) மற்றும் நேபாளம் இடையேயான சர்வதேச எல்லையானது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ளது. அதன் மேல்பகுதியில் அண்டை சிகரங்கள் இலோட்ஃசே மலை, 8,516 மீ (27,940 அடி); நபுட்சே, 7,855 மீ (25,771 அடி), மற்றும் சாங்சே, 7,580 மீ (24,870 அடி) ஆகும்.   இந்திய பிரிட்டிஷ் சர்வேயர் ஜெனரல் ஆண்ட்ரூ வாவ் ஒரு பரிந்துரையின் பேரில். 1865 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் என்ற அதிகாரப்பூர்வ ஆங்கில பெயரை ராயல் புவியியல் சமூகம் வழங்கியது. பல்வேறு உள்ளூர் பெயர்கள் இருப்பதாகத் தோன்றியதாலும், ஜார்ஜ் எவரெஸ்டின் ஆட்சேபனைகள் இருந்த போதிலும்,[9] வு பதவிக்கு வந்த பிறகு, மலைக்கு தன் முன்னோடியின் பெயரை தேர்வு செய்தார்.   இது நேபாள-திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக எடுமண்டு இல்லரி என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து செர்ப்பாக்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.   மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெசுட்டு உச்சியை எட்ட முடியும் என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர்


மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.