இந்தியாவின் தலைசிறந்த 10 திரைப்படங்கள் 2017

2017 ஆம் ஆண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட  400 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் இந்த சிறந்த பத்து படங்களே மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் , உள்ளதை உள்ளபடி கூறும் உலகப்புகழ்பெற்ற திரைப்பட விமர்ச்சக இணையமான IMDB தான் இந்த சிறந்த பத்து படங்களை தேர்ந்தெடுத்துள்ளது. திரைப்படம் பார்த்தவர்கள் நேரடியாக IMDB இணையத்திற்கு சென்று விமர்ச்சனத்தை பதிவிடுவதால் நேர்மையான இணையமாக கருதப்படுகிறது.இந்த பட்டியல் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 2017 ஆண்டு வெளியான படங்களினுள் மிகச்சிறந்த படங்களின் தொகுப்பு ஆகும்.

குறிப்பு:

21 டிசம்பர் 2017 , IMDB -திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்ட போது இருந்த தர மதிப்பீடு தற்போது மாறியுள்ளது. இதனால் , 9 ஆம் இடத்தில் இருந்த மெர்சல் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இதுபோல் சில படங்களின் தர வரிசை மாறியுள்ளது. இது தான் லேட்டஸ்ட் டாப் 10 பட்டியல்.

10ஜாலி எல் எல் பீ டூ(JOLLY LLB 2)

ஹிந்தி பிரபல நடிகர் அக்சய் குமார் நடித்து சுபாஷ் கபூர் இயக்கி  பிப்ரவரி 10 தேதி வெளியான திரைப்படமான ‘ஜாலி எல் எல் பீ டூ’  தர மதிப்பீடு 7 .3 / 10 பெற்று நமது பட்டியலில் 10  ஆவது இடத்தை பெற்றுள்ளது. எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் சுபாவம்கொண்ட ஒரு வக்கீல் தனது வாழ்நாளின் முக்கியமான வழக்கை எப்படி கையாள்கிறார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.

9டாய்லெட் (Toilet – Ek Prem Katha)

ஹிந்தி பிரபல நடிகர் அக்சய் குமார் நடித்து ஸ்ரீ நாராயண் சிங் இயக்கி  ஆகஸ்ட் மாதம் வெளியான திரைப்படமான ‘டாய்லெட்’  தர மதிப்பீடு 7 .5 / 10 பெற்று நமது பட்டியலில் 9 ஆவது இடத்தை பெற்றுள்ளது.இந்த படம் இந்த பட்டியலில் அக்சய் குமாரின் இரண்டாவது திரைப்படமாகும். பின்தங்கிய குடும்பத்தினை சேர்ந்த கதாநாயகனின் மனைவி தனக்கு டாய்லெட் வசதி வீட்டில் இருந்தால் மட்டுமே கதாநாயகனுடன் வாழ்வேன் என கூறுகிறார். இல்லையென்றால் விவாகரத்து செய்துவிடுவேன் என்ற மிரட்டுகிறார். இதற்கு பயந்து தனது மனைவிக்கு டாய்லெட் கட்டித்தர போராடும் கணவனை கதை தான் இத்திரைப்படம்.

8தி கிரேட் பாதர்(The Great Father)

2017 மார்ச் 30 ஆம் தேதி வெளியான மலையாள திரைப்படமான 'தி கிரேட் பாதர்' தர மதிப்பீடு  7 .6 / 10  பெற்று நமது பட்டியலில் 8 ஆவது இடத்தை பெற்றுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி இந்த திரைப்படத்தில் ஒரு குழந்தைக்கு சிறப்பான அப்பாவாகவும்  மற்றும் குழந்தைக்கு ஏற்பட்ட அநீதியை தட்டிக்கேட்க ஒரு சூப்பர் அப்பாவாக மாறுவதும் தான் இத்திரைப்படத்தின் கதை.  

7தி கலி அட்டாக்(The ghazi attack)

பாஹுபலி புகழ் ராணா தகுபதி நடித்து சங்கல்ப் ரெட்டி இயக்கி பிப்ரவரி மாதம் வெளியான தெலுங்கு திரைப்படமான தி கலி அட்டாக்’  7 .7 / 10 தர மதிப்பீடு பெற்று 7 ஆவது இடத்தை பெற்றுள்ளது. சாதுர்யமாக இந்தியாவின் விசாகப்பட்டினத்தின் துறைமுகத்தை தகர்க்க திட்டம் போடும் பாகிஸ்தானியரிடம் இருந்து எப்படி இந்திய வீரர்கள் துறைமுகத்தை  காப்பாற்றுகிறார்கள் என்பது தான் இத்திரைப்படத்தின் கதை.

6ஹிந்தி மீடியம் (Hindi medium)

பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் நடித்து சாகெத் சவுத்திரி இயக்கத்தில் வெளியான 'ஹிந்தி மீடியம்' திரைப்படம் 7 .9 /10   தர மதிப்பீட்டை 6 ஆவது இடத்தை பெற்றுள்ளது. ஒரு சிறிய கிராமத்திலிருந்து நல்ல கல்வியை தனது குழந்தைக்கு கொடுக்க டெல்லி பயணிக்கும் பெற்றோர்கள் படும் அவஸ்தை தான் இத்திரைப்படத்தின் கதை.

5சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (secret super start)

'தங்கள்' திரைப்படத்தின் மூலம் மிகப்பிரபலமடைந்த ஜைரா வாசிம் நடித்து வெளியான  ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் 8 .4  / 10 தர மதிப்பீடு பெற்று 5 ஆவது இடத்தை பெற்றுள்ளது. பிரபல பாடகியாக வேண்டும் என்று நினைக்கும் சராசரி பெண்ணின் கதை பல திருப்பங்களுடன்.

4அர்ஜுன் ரெட்டி (Arjun Reddy) 

தெலுங்கு திரைப்படமான அர்ஜுன் ரெட்டி’ 8 .4  / 10 தர மதிப்பீடு பெற்று 4 ஆவது இடத்தை பெற்றுள்ளது.இந்த படத்தை நீங்களே பலமுறை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். பார்க்கவில்லையென்றால் முதல் வேலையாக போய் இத்திரைப்படத்தை காணுங்கள். மகிழ்ந்திடுங்கள்!

3மெர்சல் (Mersal)

புதுமுக இயக்குனராக இருந்தாலும் விரைவில் சாதனை படைத்த அட்லீ இயக்கி தளபதி விஜய் நடித்து நவம்பர் 10 தேதி வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. 8 .5 / 10  தர மதிப்பீடு பெற்று நமது பட்டியலில் 3 ஆவது இடத்தை பெற்றுள்ளது.எல்லோருக்கும் இலவச மருத்துவமும் கல்வியும் கிடைக்க வேண்டும் என்று போராடும் மருத்துவருக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் இத்திரைப்படத்’தின் கதை. 

2பாஹுபலி  2(Bahubali 2 : The Conclusion )

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கி பிரபாஸ் நடித்து உலக அளவில் பெரும் சாதனை படைத்த பாஹுபலி’ 2-  8 .5  / 10 தர மதிப்பீடு பெற்று 2 ஆவது இடத்தை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்க்காதவர்கள் இருக்க வாய்ப்பில்லை எனவே கதை பற்றி சொல்ல தேவையில்லை.

1விக்ரம் வேதா(Vikram Vedha) 

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமுக்கும் (மாதவன்) தாதாவான வேதாவுக்கும் (விஜய் சேதுபதி) இடையில் நடக்கும் ‘விக்கிரமாதித்தன் - வேதாளம்’ துரத்தலே ‘விக்ரம் வேதா’.16 கொலைகள் செய்த வேதாவை சுட்டுக் கொல்ல வலைவீசித் தேடுகிறான் 18 என்கவுன்ட்டர்கள் செய்த விக்ரம். முதல் காட்சியிலேயே வேதாவின் கூட்டாளிகளைக் கொன்று குவிக்கிறது விக்ரம் குழு. தலைமறைவாக இருக்கும் வேதாவைக் கண்டுபிடித்துக் கொல்ல போலீஸ் படையை அனுப்பும்போது, வேதாவே சரணடைகிறான். அந்தக் கணத்தில் படம் களைகட்டுகிறது. தன் நண்பனும் சக போலீஸ் அதிகாரியுமான சைமனை (பிரேம்) கொன்றது யார் என்பதை தேடும் விக்ரமாக நாமும் மாறிப்போகிறோம். இறுதியில் நல்லவன் யார், கெட்டவன் யார்? இருவரும் என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது படம்.

8.9/10 தர மதிப்பீட்டுடன் முதலாம் இடத்தை பெற்றுள்ளது. வாழ்த்துக்கள் விக்ரம் வேதா !

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.