10 தலைசிறந்த தமிழ் குறும்படங்களின் பட்டியல் - 2017

'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சி வந்தததிலிருந்து தமிழ் நாட்டுல எல்லா பயலும் கேமராவையும் ஒரு பேப்பர் பென்ணையும் தூக்கிட்டு கிளம்பிட்டாய்ங்க ஷார்ட் பிலிம் எடுக்க !  எங்க பார்த்தாலும் ஷார்ட் பிலிம் தான் !  யூடுபிலேயே குடும்பம் நடத்தும் என்னைப்போன்ற பல IT மக்கள் பலர் இந்த ஷார்ட் பில்ம்களுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர் .

மௌவல் குழுமம் 2017 ஆம் ஆண்டு வெளியான அனைத்து தமிழ் குறும்படங்களையும் கண்டு அதில் மிகச்சிறந்த பத்து படங்களை மட்டுமே தேர்வு செய்து வழங்கியுள்ளோம். 

10இவள் அழகு 

மெசேஜ் சொன்னா உங்களுக்கு புடிக்குமா ! அப்ப இந்த குறும்படம் உங்களுக்கு தான் . ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியானல் என்னென்ன பிரச்னை அந்த பெண் சந்திக்க வேண்டியிருக்கும், விபரீத முடிவெடுக்காமல் அந்த பெண் எப்படி அதிலிருந்து மீளவேண்டும் என்பது தான் படத்தின் கதை.'மூவிபப்' என்ற யூடுயூப் சேனல் தான் இந்த குறும்படத்தை பிப்ரவரி மாதம் 2017 ல் வெளியிட்டது. தற்போது வரை இக்குறும்படத்தை 20 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

9தி அப்பயர்(The Affair)

2017 மார்ச்சில் யூடுயூப்பில் வெளியான இக்குறும்படம் இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமான மனங்களை உருக்கியுள்ளது . வாழ்விற்கு முக்கியமான கணவன் மற்றும் மனைவியின் புரிதல் மற்றும் அன்பு தான் இக்குறும்படம்.

8ஹேப்பி நியூ இயர் 

குறும்பான மற்றும் விறுவிறுப்பான காதல் மழையில் நினைய தயாரா ? அப்போ இது உங்களுக்கான படம் . 'சாஸ் சாஸ் எல்லாமே டொமேடோ சாஸ் !' என்னடா கொளப்புறானு பார்க்குறீங்களா ? படம் பாருங்க நான் என்ன சொல்றான்னு புரியும் ! இதுவரை இக்குறுபடத்தை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

7ஏனோ வானிலை மாறுதே !

அடடே! பேரே கவிதை மாதிரி இருக்கேனு பார்க்குறீங்களா ! படமும் கவிதை மாறிதான் இருக்கு . இப்பல்லாம் பத்தாவது படிக்குற பைய்யனே பத்து லவ் பண்றான். ஆனா இந்த பட ஹீரோ ஒரே பொண்ண சிறப்பா லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்காப்ல ! 2017 பிப்ரவரி மாதம் யூடுயூப் சேனல் 'புனித்' வெளியிட்ட இந்த குறும்படத்தை 63 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

6நீ ஒருத்தன் போதும்டா 

'கெக்க பொக்கை கெக்க பொக்கை ' அப்புறம் ஒரு நல்ல காமெடி ஷார்ட் பிலிம் பார்க்கணும்னா 'நீ ஒருத்தன் போதும்டா' தான் ஒரு பெஸ்டு சாய்ஸ் ! குண்டா ஒரு ப்ரோ இந்த படத்துல வராப்ல! அவரு ஒருத்தரு போதும் உங்கள எல்லாம் சிரிக்க வைக்க !

5பால்வாடி காதல்

எல்லாருக்குமே சின்ன வயசுல டீச்சர் மேல காதல் , ரப்பர் குடுத்த ரக்ஷிதா மேல காதல் , பென்சில் குடுத்த ப்ரியங்கா மேல காதல்னு பல பால்வாடி காதல் இருக்கும். சின்ன வயசுல வர காதல் பத்திதான் தான் இக்குறும்படம் சொல்ல ட்ரை பண்ணிருக்கு. 2017 ஏப்ரல் மாதம் வெளியான இந்த குறும்படத்தை இதுவரை 66 லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்த்து ரசிச்சுருக்காங்க !

4மறுமுகன்

2017  செப்டம்பர் 15 ஆம் தேதி 'தமிழ் ஷார்ட் கட்ஸ்' என்ற யூடுயூப் சேனல் தான் 'மறுமுகன்' என்ற குறும்படத்தை வெளியிட்டது. சுவாரஸ்யமான கதை மற்றும் எதிர் பாராத திருப்பங்களுடன் இந்த திரில்லர் குறும்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நாயகனாக தோன்றும் நபர் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். மூன்று மாதங்களில் இப்படத்தை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இத்திரைப்படம் 2018 ல் பல மில்லியன் பார்வையாளர்களை எட்டும் என்பதில் எங்களுக்கு துளியளவும் ஐயமில்லை. இந்த படத்தை பார்த்த பின்பு இது குறும்படம் அல்லது பீச்சர்(feature) பிலிம் என சந்தேகம் உங்களுக்கு எழும் .

3கெக்க பொக்கை கெக்க பொக்கை 

ஒரு அரைமணி நேரம் கெக்க பொக்கை கெக்க பொக்கைனு சிரிக்கணுமா ! அப்ப நீங்க இந்த படத்தை பார்த்தே ஆகணும் ! நானும் ஒரு 20 இந்த வருடம் வெளியான பல காமெடி ஷார்ட் பிலிம் பார்த்தோம் ஆனா அத பார்த்த எங்களுக்கு சிரிப்பே வரல. போடா ! இந்த காமெடி ஜெர்னெர்ல படமே இல்லனு பீல் பண்ணிட்டு கடைசியா பார்க்கலாமா இல்ல இதுவும் மொக்க படமா இருக்குமான்னு நினச்சேன் . ஆனா பார்த்துட்டு குலுங்கி குலுங்கி சிரிச்சுப்புட்டேன்! இந்த வருசத்துல கொஞ்சமாவது சிரிக்கிற மாதிரி இவங்க மட்டும் தான் காமெடி ஷார்ட் பிலிம் பண்ணீருக்காங்க !

2லட்சுமி

2017  டிசம்பர் மாதம் இணையத்தையே ஒரு கலக்கு கலக்கிய 'லட்சுமி' ஷார்ட் பிலிம் தான் நமது பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. பலரது பாராட்டுக்களையும் சிலரது எரிச்சல்களையும் இக்குறும்படம் பெற்றுள்ளது. 'லட்சுமி' பேரு பார்த்த உடனே , நல்ல தலை சீவி , போட்டு வச்சு காலைல குளித்த ஈரத்தலையுடன் பொங்கல் போடுவாலே அந்த லட்சுமி னு நினைச்சீங்களா லக்ஸ்மி டாங்குற மாதிரி இருக்கும் இக்குறும்படத்தின் திரைக்கதை. இத்திரைப்படத்தை யூடியூபில் இதுவரை மட்டும் 58 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

நவம்பர் 1 ஆம் தேதி சார்ஜுன் இயக்கி யூடியூபில் வெளியான திரைப்படம் வெகுவாக பிரபலமடைய ஆரம்பித்தது. நெட்டிசன்கள் இத்திரைப்படத்தை புகழ்ந்து தள்ளியும் சிலர் கழுவி ஊத்தியும் வைரல் ஷார்ட் பிலிம் ஆகா மாற்றினர் .
அப்படி என்னதான் இத்திரைப்படத்தில் உள்ளது நீங்களே மேலே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

1ரேண்டம் நம்பர்

இந்த மாதிரி ஒரு திரில்லர் ஷார்ட் பிலிம் வந்ததும் இல்லை வரப்போவதும் இல்லை.கெட்டவர்களுக்கு கெட்டது செய்றது எவ்ளோ சுவாரசியமா இருக்கும் ?   ஆம் ! அரைமணி நேரத்த்தில் உங்களை கதைக்குள்ளேயே கொண்டு சேர்த்துவிடும் ஒரு அற்புதமான படைப்பு.அரை மணிநேரம் நீங்க பிரியா இருந்தா இந்த படத்தை பாருங்க சும்மா அள்ளும் .18 வயதுக்கு மேலுள்ளவர்கள் மட்டுமே இத்திரைப்படத்தை பார்க்குமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம். 2017 ஏப்ரல் மாதம் யூடுயூப்பில் வெளியான இக்குறும்படம் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.