மனித உயிர்களை பறிக்கும் பேய்களின் ஆதிக்கம் நிறைந்த பொருட்கள்

இறந்தவர்களின் உடலில் இருந்து வெளியேறும் ஆன்மா இறைவனிடம் சென்று சேராமல் தன நிறைவேறாத ஆசையை தீர்ப்பதற்காகவோ அல்லது யாரையேனும் பழி வாங்குவதற்காகவோ தான் தனக்கு பிடித்தவரின் உடம்பிலோ அல்லது ஒரு பொருளின் மீதோ ஊடுருவி தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறது.   இவ்வாறு பேயின் ஊடுருவிய பொருட்களின் பட்டியலை பார்க்க போகிறோம்.   தயவு செய்து கீழ்கண்ட படங்களை யாரும் அதிக நேரம் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். 

நானும் உங்களைப்போலவே என்ன தான் செய்துவிடும் பார்த்துவிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் ஓரிரு நாட்களாக இரவில்  என்னால்  தூங்க கூட முடியவில்லை, எதோ ஒரு உருவம் கண் முன்னே நிற்பது போல் தோன்றுகிறது. கவனத்துடன் செயல்படுங்கள் நண்பர்களே !   

இந்த பட்டியலில் உள்ள அனைத்து சம்பவங்களும் 100/100 உண்மை. நீங்கள் இதனை பற்றி மேலும் படிக்க கூகிளில் தேடிப்பாருங்கள்.

10பேய் டான்ஸ்-வெட்டிங் டிரஸ்(Haunted Wedding Dress)


1849 களில் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்ணான அண்ணா பேக்கர் ஒரு சலவை செய்யும் நபரை காதல் செய்தார். எல்லா அப்பாக்களை போலவே அவரது அப்பாவும் காதலுக்கு எதிராக நின்றார். அதோடு அந்த காதலனை ஊருக்குள் வரக்கூடாது என்று விரட்டிவிட்டார். காதல் தோல்வியால் வாடிப்போன அந்த பெண் அதற்கு பின் யாரையும் காதலிக்கவும் இல்லை , திருமணமும் செய்து கொள்ளவில்லை. சிறிது நாட்களில் ஏக்கத்திலேயே கன்னியாகவே இறந்துவிட்டார் அந்த இளவரசி.
 

காதல் அப்பாவிற்கு தெரிவதற்கு முன் தனது திருமணத்திற்காக அண்ணா பேக்கர் ஒரு மிக அழாகான திருமண ஆடையை வாங்கி வைத்திருந்தார். திருமணம் தடைபட்டு போனதால் அவர் அந்த ஆடையை போடவே இல்லை. பிறகு அரசியாரின் இல்லம் ஒரு ம்யூசியமாக மாற்றப்பட்டது. அதே ஊரை சேர்ந்த இன்னொரு பணக்கார பெண் அந்த ஆடையை அதிக ஏலத்திற்கு வாங்கிச்சென்றுவிட்டார்.
 

ஒரு முழு பவுர்ணமியன்று அந்த ஆடை தானகவே நடமாடுவதை கண்ட அந்த பெண் , அதனை அரசியாரின் ம்யூஸியத்திற்கே கொடுத்திவிட்டார். இன்றளவும் அந்த ஆடை நடனமாடுவதை மக்கள் பார்த்து பயதோடு பார்த்துவருகின்றனர். யார் நடமாடுறது நம்ம ஆனா பேக்கர் தான்.

9மனவேதனை மனிதன்(The Anguished man)


இந்த ஓவியத்தை யார் வரைந்தார் என்பதெற்கெல்லாம் ஒரு குறிப்பும் நமக்கு கிடைக்கவில்லை.பல ஆண்டுகளுக்கு முன்பு ராபின்சன் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இந்த ஓவியம் பரிசாக வந்தது.ஓவியம் வீட்டிற்கு வந்ததிலிருந்தே ஒரே பிரச்னை மற்றும் இரவில் ஒரே மர்ம சத்தங்கள் ஒலிக்கத்தொடங்கின. இதற்கெல்லாம் இந்த ஓவியம் தான் காரணம் என நினைத்த அந்த பெண்மணி தனது வீட்டின் கீழ்ப்பகுதியில் கிடப்பில் போட்டுவிட்டார்.
 

அந்த பெண்மணியின் பேராறான ராபின்சன் எதோ ஒரு 
வித்யாசமான ஓவியம் தனது வீட்டின் கீழ்ப்பகுதியில்  இருப்பதை  கண்டு அதனை மேல் எடுத்துவந்து ஹாலில் தொங்கவிட்டார். தொடர்ந்து வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான அமானுஷ்ய கனவுகள் வர துவங்கின. அதோடு ராபின்சனின் மனைவி அவரது படுக்கையறையின் ஒரு மூலையில் கருப்பான ஒரு பெரிய உருவம் நிற்பதை கண்டு கதறினார்.  

இந்த ஓவியத்தை பற்றி ஆராய்ந்த போது, இந்த ஓவியம் ஒருவர் தான் சாகும் தருவாயில் வரைந்ததாகவும் , அந்த ஓவியத்தில் தனது ரத்தத்தையும் கலந்து வரைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
  அந்த ஓவியத்தின்  மர்மத்தை கண்டுபிடிக்க ராபின்சன் காமெராவை செட் செய்தார். என்ன நடந்தது தெரியுமா?  

அவர் யூடியூபில் அப்லோட் செய்த வீடியோவை காண கிளிக் செய்யுங்கள்
  https://www.youtube.com/watch?v=CRQSWgYNqvI

8சேர் ஆப் டெத்(Chair of Death)


1702 ஆண்டுகளில் தன்னோட மாமனார் மாமியாரையே கொலை செய்தவர் தான் இந்த தாம்சன் புப்சி. சொத்து பிரச்சனையெல்லாம் இல்ல தனக்கு பிடித்தமான இருக்கையில் இவர்கள் அமர்ந்ததால் காரணமாக கொலைசெய்துவிட்டார்.இதை பார்க்கும் போது "புறாவுக்கெள்ளாம் போரா" என்கிற வடிவேலுவின் டயலொக் தான் நியாபகம் வருகிறது.கொலை செய்ததற்கு தண்டனையாக தூக்கு தண்டனைக்கு செல்லும் வழியில் தனது கடைசி ஆசை என்னவென்று கேட்க நான் எனக்கு பிடித்தமான மதுபான கடையில், பிடித்தமான மதுபானத்தை, எனக்கு பிடித்த இருக்கையில் அமர்ந்து குடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 

அவரது ஆசையும் நிறைவேறியது ஆனால் கிளம்பும் போது " எனது இருக்கையில் யாரெல்லாம் அமர்கிறார்களோ அவர்களை மரணம் தேடி வரும்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.தூக்கு தண்டனையும் நிறைவேறியது அவரும் இறந்துவிட்டார்.
 

அந்த இருக்கையில் அமர யாருக்கும் தைரியம் வரவில்லை. ஆனால் இரண்டாம் உலகப்போரின் பொது இரண்டு ராணுவ வீரர்கள் அந்த இருக்கையில் வேண்டுமென்றே அமர்ந்து மதுபானத்தை அருந்தினர். போருக்கு சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. இவர்களை போல நிறைய பேர் தனது உயிரை இந்த சேருக்கு காணிக்கையாகியுள்ளனர்.இதை தடுக்க எண்ணிய மதுக்கடை முதலாளி யாரும் தெரியாமல் கூட அமர்ந்துவிடக்கூடாது என எண்ணி வீட்டின் கீழ்மட்டத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
 

ஆனால் கொரியர் கொண்டு வந்த அந்த பையன் அசதியாக அந்த சேரின் மீது அமர்ந்தான். விதி யாரை விட்டது வீடு செல்லும் வழியில் விபத்து நேர்ந்து இறந்து போனார். நிலைமை உச்சகட்டத்தை நெருங்கியதடுத்து இவர் இந்த சேரை தர்கீஸிலுள்ள ஒரு மியூசியத்திற்கு கொடுத்துவிட்டார்.
  மியூசியத்தில் கூட யாரும் அமர கூடாத வண்ணம் இந்த சேர் தரைமட்டத்திலிருந்து 5 அடி உயரத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.

7டிபாக் பாக்ஸ்(Dybbuk box)


103 வயசான பாட்டி தந்து பேர குழந்தைக்கு வெளிநாட்டிலிருந்து ஏலத்துல ஒரு ஒயின் வைக்குற பெட்டியை அன்பளிப்பை வாங்கி கொடுத்துச்சு. இந்த பெட்டியை தொட்டான் கெட்டான். இது தெரியாத அந்த பேத்தி இதை ஓபன் பண்ணிருக்கு. திறந்த நாளில் இருந்தே இரவான யாரோ தன் கழுத்து பகுதியில் நின்னிட்டு பெரு மூச்சு விடுற மாதிரியும், முடிய பிடிச்சு இழுக்குற மாதிரியும் இருந்துருக்கு.
 

பயந்து போன பேத்தி, திரும்ப இத ஏலம் எடுத்த கடையிலேயே குடுத்தலாம் னு போனா அவுங்க வாங்க மறுத்துட்டாங்க. என்ன செய்ய திரும்ப வீட்டுக்கு கொண்டு வந்து அம்மாகிட்ட அந்த பாக்ஸை கொடுத்துட்டாங்க.
  கொடுத்த கொஞ்ச நாளுலேயே அவுங்க அம்மா ஹார்ட் அட்டக்கள இறந்து போய்ட்டாங்க! அவுங்க ஹாஸ்பிடல்ல சொன்ன கடைசி வார்த்தை "ஹே கிப்ட் " னு தான்.

6தி ஹேண்ட்ஸ் ரெஸிஸ்ட் ஹிம்(The Hands Resist Him)


1972 ல் பில் ஸ்டோன்ஹம் என்பவரால் வரையப்பட்ட ஓவியம் இது. முதன் முதலில் கலிபோர்னியாவில் பெண்கர்டென் எனும் கேலரியில் வைத்துள்ளார். பிறகு இதனை ஒரு ஜஹான் மார்லே எனும் பிரபல நடிகர் வாங்கினார். இவர்கள் இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து போனார்கள். அதற்கு பிறகு இந்த ஓவியம் யாரிடம் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.
 

ஒரு நாள் யாரோ ஒருவர் தன் பாதையில் இருந்தது என ஏல நிறுவனத்திடம் கொடுக்க , அந்த ஏல நிறுவனம் அதனை ஈபே வில் ஒரு தம்பதியருக்கு விற்றது. பிறகு என்ன அந்த தம்பதிகள் தனது குழந்தையின் படுக்கையறையில் இதனை தொங்க விட்டனர். அன்றிலிருந்தே அந்த குழந்தைக்கு பேய்கள் நடமாட்டம் தெரிந்தது அதோடு குழந்தையின் உடல் நலமும் கவலைக்குள்ளானது.
 

பிறகு அந்த தம்பதியினர் அதே ஈபேயில் தாங்கள் பட்ட அனைத்து கஷ்டங்களையும் கூறி அதனை விற்றனர். இப்போ வாங்குனவன் என்ன கதின்னு யாருக்கும் தெரியாது.

5டால்மென் படுக்கை(The Tallman Bunk Beds)


1987 ஆம் ஆண்டு ஆலன் மற்றும் அவரது கணவர் டெப்பி டால்மனும் சேர்ந்து ஒரு பழைய கட்டிலை தனது குழந்தைகளுக்கு வாங்கி வந்தனர்.வாங்கி வந்த சில நாட்களிலேயே அந்த குழந்தைகளை பயமுறுத்த துவங்கியது அந்த ஆவி. குழந்தைகள் ஆலனிடம் கூறிய போது அவர் அதை நம்பவில்லை. ஆனால் ஒருமுறை இரவு வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய ஆலன் ஒரு வினோதமான குரல் தன்னை கீழே அழைப்பதை உணர்ந்தார்.
 

கீழே சென்று பார்க்கும் போது அவர்களின் படுக்கையறை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைக்க அவர் தீயணைப்பானை எடுத்து வருவதற்குள் அந்த இடம் தீப்பிடித்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் இருந்தது.
 

விஷயத்தை உணர்ந்த ஆலன் குடும்பத்தினர் அந்த படுக்கையை தீயிட்டு எரித்தனர். அதன் பிறகு அவர்கள் வாழ்வில் எந்த தீய சக்தியும் இடம்பெறவில்லை.

4தி காஞ்சூர் செஸ்ட்(The conjure chest)


ஜேக்கப் கூலி எனபவரிடம் மிகச்சிறந்த பெட்டிகள் மற்றும் மரசாதன பொருட்கள் செய்யும் ஹோசே எனும் அடிமை வேலை பார்த்துவந்தார். ஜேக்கப் ஒரு முரடன் மற்றும் மனிதநேயமே இல்லாத ஒரு ஆள் என்றே கூறலாம்.
 

தனக்கு பிறக்க போகும் குழந்தைக்காக ஒரு பெட்டியினை வடிவமைக்க ஹோசியாவிடம் கூறினார். மிகவும் அழகான ஒரு பெட்டியை செய்த போதிலும் அது எனக்கு பிடிக்கவில்லை என கூறி ஹோசியாவை வெளுத்து வாங்கினார். வலி தாங்கமுடியால் அவர் இறுதியில் இறந்தே போனார். இதற்கு பழிவாங்க நினைத்த ஹோஷியோவின் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த பெட்டியினை தங்கள் ரத்தத்தால் சபித்தனர்.
 

பிறகு அந்த குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்து போனது. ஜேக்கப் மற்றும் அவரது முதல் மகன் மற்றும் மகளும் துரு மரணம் அடைந்தனர்.இந்த குறிப்புகள் அனைத்தும் அவர்களது குடும்பத்தில் 17 பேர் இறந்த பிறகு தான் கண்டுபிடித்தனர்.
 

இது பழைய பேய்பட கதைகளை போல இருந்தாலும் , இது உண்மையில் நடந்த சம்பவம்.

3ஐஸ்மென்(ICEMAN- The Mummy)


1991,ஜெர்மன் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆஸ்திரியாவில் உள்ள ஒரு "ஒஸ்ட்டல் அல்ப்ங்கிற பனி மலைக்கு செல்லும் போது ஒரு வினோதமான மனிதனை போல் உள்ள ஒரு இறந்த உடலை பார்த்தனர். இவர் 3300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவராக இருக்கலாம் என அனைவரும் கருதினர். ஆனால் இதை பார்த்த தம்பதியரும், இதை ஆராச்சி செய்ய நினைத்தவரும் ஒன்றன் பின் ஒன்றாக துருமரணத்தை அடைந்தனர்.
 

அதோடு இந்த வினோத மனித உடலைப் பற்றி மேடையில் பேச சென்ற ஒருவர் வழியில் ஒரு விபத்தில் அகால மரணமடைந்தார்.
 

இத ஆராய்ச்சி பண்ண நம்ம நினைச்சாலும் நமக்கும் இதே நிலைமைதான்!  

2ராபர்ட் தி ஹாண்டேட் டால்(Haunted Doll, The Robert)


1906 ஆம் ஆண்டு ஏஜெனே ஓட் எனும் சிறுவனுக்கு தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணியிடமிருந்து வந்த அன்பளிப்பு ராபர்ட் என்ற பெயர்கொண்ட இந்த அமானுஷ்ய பொம்மை. ஏஜெனேவின் தந்தை மற்றும் தாயார் இருவரும் மிகவும் கண்டிப்பானவர்கள் மற்றும் தனது வீட்டில் வேலை பார்க்கும் அனைவரிடமும் மிகவும் கடுமையான முறையில் நடத்தி வந்துள்ளனர்.
 

ஏஜெனேவின் பெற்றோர்களின் கண்டிப்ப்பிற்கு ஆளான ஒரு பெண் அவர்களை பழி வாங்க நினைத்த அந்த பெண் பில்லி சூனியம் செய்த பொம்மையினை பரிசாக ஏஜீனோவிற்கு கொடுத்தாள். பிறகு தான் ஆரம்பித்தது அமானுஷ்ய சக்திகளின் ஆட்டம். ஏஜீனோவின் படுக்கையறைக்கு செல்லும் போதெல்லாம் யாரோ ஒருவருடன் எஜெனே பேசிக்கொண்டிருப்பது போல் தோன்ற அவனின் பெற்றோர்கள் உள்ளே சென்று பார்த்த பொது அங்கு யாரும் இல்லை அந்த பொம்மையை தவிர!
 

அங்கங்கே வீடு பொருட்கள் சிதறிக்கிடந்தன. யார் பார்த்த வேலைடா இதுனு கேட்டப்போ மாமி இத நான் பண்ணுலா ராபர்ட் தான் பண்ணுனானு சொன்னான். ஷாக் தாங்க முடியாத அவுங்க கொஞ்ச நாளைக்கு பிறகு இறந்து போறாங்க.பெற்றோர்கள் இறந்து போன பிறகு யாரும் அந்த வீட்டிற்கு வேலை செய்வதற்கு பயந்தார்கள்.
 

நாட்கள் நகர எஜெனே திருமணம் செய்து கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு கூட்டி வந்தார். எஜெனே இல்லாத நேரத்துல அந்த பொம்மை என்ன பயமுறுத்த பொண்ணு கதிகலக்கிருச்சு.இத கேட்ட எஜெனே இதுக்கு மேல இந்த பொம்மையை பூட்டி வைக்கணும் சொல்லி மாடத்துல போட்டுட்டார்.போட்டதிலிருந்தே அவர் உடல் நலம் சரில்லாம போச்சு , இதுக்கு மேல இத வீட்ல வச்சிருந்த நம்மள மேல அனுப்பிரும்னு அவர் அந்த பொம்மையை ஈஸ்ட் மார்ட்டெல்லோ மியூசியத்திற்கு அனுப்பிட்டார்.அப்புறம் என்ன மியூசியம் காவலாளிக்கு டண்டணக்கா டனக்கணக்கா தான்.
 

யார் இந்த பொம்மையை மியூசியத்துல போட்டோ எடுத்தாலும் அவங்களுக்கு துர் மரணம் வந்துருக்கு! அதான் நானே இந்த போட்டோவை சேவ் பண்ணல . நீங்களும் சேவ் பண்ணிராதீங்கோ !

1அனபெல்லே(Real Anabelle)


நீங்கள் இந்த படத்தில் காணும் பொம்மையே  உண்மையான அனபெல்லே பேய் ஆக்கிரமித்த பொம்மை.டோனா எனும் பெண் தனது 28 வது பிறந்தநாள் பரிசாக தனது தாயிடமிருந்து பெற்ற பொம்மையாகும். தனது தாயிடமிருந்து பெற்ற பரிசு என்பதால் அந்த பொம்மையை மிகவும் கவனத்துடன் கையாண்டு வந்தார்.
 

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தனது தோழியான ஏஞ்சியுடன் வசித்து வந்தார். ஒரு நாள் இரவு அந்த பொம்மை அங்கும் இங்கும் அலைவதை இருவரும் பார்த்துள்ளனர். பயந்து போன அவர்கள் அந்த பொம்மையை நன்கு கண்காணித்து வந்தனர். ஒரு நாள் வீட்டில் பொம்மையை ஹாலில் வைத்துவிட்டு ஷாப்பிங் சென்றுள்ளனர். வந்து பார்த்தால் பொம்மை வைத்த இடத்தில இல்லாமல் வேறொரு இடத்திற்கு இடம் மாறியிருந்ததை கண்ட இருவரின் இதயமும் உறையத்தொடங்கியது.
 

இந்த பொம்மைக்குள் பேய் இருப்பதை உணர்ந்த அவர்கள் இருவரும் அதற்கான காரணத்தை ஆராய்ச்சி செய்துபார்க்கும் போது இப்போது அபார்ட்மெண்ட் இருக்கும் இடத்தில் முன்பு "அனபெல்லே" எனும் குழந்தை கொடூரமான முறையில் இறந்ததாக தகவல் கிடைத்தது.


  இருந்தும் அம்மா குடுத்த பிறந்தநாள் பரிசை தூக்கி போடா மனமில்லாமல் , தன்னுடனே வைத்திருந்தார். ஆனால்  தோழியின் காதலன் "லு" இதனை கண்டு பயமாக இருப்பதாகவும், தன்னை இரவில் மிரட்டுவதாகவும் கூறி கதிரினார். கண்டுகொள்ளாமல் விட்டதால் இந்த பொம்மையின் தீய சக்திக்கு இறையானார்.  

இதற்கு மேல் வைத்திருந்தால் தனக்கும் ஆப்பு வைத்து விடும் என கருதி "வாறன் அக்கல்ட் மியூசியம்" கு கொடுத்துவிட்டார். இன்றளவும் தீய சக்தி நிறைத்த பொம்மை சுத்தம் செய்வதற்கு கூட யாரும்  அதனை வெளியில் எடுக்கவில்லை.
  அதனை தொடுவதற்கும் யாருக்கும் அனுமதியில்லை. ஆனால் ஒரு ரேஸ் ஓட்டுநர் தொட்டு பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் விபத்து நேர்ந்து இறந்து போனார்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.