நீங்கள் கனவிலும் செல்லக்கூடாத ஆபத்தான 10 நாடுகள்

ஆபத்தான மற்றும் அமைதியான   நாடுகளின் பட்டியலை அந்த நாட்டில் நடக்கும் குற்றங்கள், வெடிகுண்டு சம்பவங்கள், கற்பழிப்பு  மற்றும் தீவிரவாதம் போன்ற 23 வகையான காரணிகளை  பொறுத்து  வரிசைப்படுத்தி ஆண்டுதோறும் இன்ஸ்டிடியூட் ஆப் எக்கனாமிக்ஸ் அண்ட் பீஸ் (IEP ) க்ளோபல் பீஸ் இண்டெக்ஸ்  வெளியிடுகிறது. அதில் இடம்பெற்றுள்ள நாடுகளின் பட்டியலை பார்க்கலாம் வாருங்கள். 

10நார்த் கொரியா ( GPI - 2977)

ஜப்பானிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு கொரியா நார்த் கொரியா மற்றும் சௌத் கொரியா என இரு நாடுகளாக பிரிந்தது. கம்யூனிஸ்ட் நாடான நார்த் கொரியா "கிம் ஜங் உன்" தலைமையில் இயங்கி வருகிறது.சௌத் கொரியாவுடன் அடிக்கடி போர் புரிந்து வருவதன் காரணமாக நார்த் கொரியா அதிக பணத்தை மிலிட்டரி மற்றும் ஆயுதங்கள் வாங்குவதில் இழந்து பெரும் பொருளாதார வீழ்ச்சியடைந்து வருகிறது.   இந்த நாட்டில் வாழும் மக்கள்  வீடு போன்ற எந்த சொத்துக்களையும் வைத்துக்கொள்ளக்கூடாது.  அனைத்தும் அரசுக்கு சொந்தமானது. மக்களுக்கு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதோடு , அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு கொடூர தண்டனைகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

9பாகிஸ்தான் ( GPI - 3049)

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு பாகிஸ்தான் இதுவரை மூன்று முறை போர் செய்ததன் காரணமாக பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு 1500 க்கும் மேற்பட்ட தீவிரவாத சம்பவங்கள் நடைபெறுகிறது. முக்கியமாக இளைஞர்களை தீவிரவாத பயிற்சியளித்து இந்தியா, ஆப்கனிஸ்தான் மற்றும் ஈராக்குக்கு எதிராக குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாத செயல்களுக்காக உபயோகப்படுத்துகின்றனர்.

8டெமாக்ரேடிக் ரிபப்லிக் ஆப் த காங்கோ (GPI - 3085)

டெமாக்ரேடிக் ரிபப்லிக் ஆப் த காங்கோ ஆபத்தான நாடுகளில் ஒன்றாகவும் , பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாகவும் விளங்குகிறது. ஏனென்றால் , அனைத்து நாடுகளிலும் ராணுவ வீரர்கள் தனது நாட்டை பாதுகாக்க போராடுகின்றனர் ஆனால் காங்கோவில் ராணுவ வீரர்களே கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். யாரேனும் அவர்களுக்கு எதிராக புகார் கொடுத்தால் அவ்வளவு தான் அவர்கள் வாழ்க்கை இல்லாமலே போய்விடும்.   பெண்களுக்கு சம உரிமை இல்லாமை, சரியில்லாத மருத்துவ துறை, வறுமை , பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் காங்கோவை 8 வது ஆபத்தான நாடாக மாற்றியுள்ளது.

7சூடான் (GPI  – 3295)

சவுத் சூடானைப் போலவே சூடானிலும் இனக் கலவரம் மற்றும் உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் வாழ்வதற்க்கு தகுதி இல்லாததாக மாறி வருகிறது.

6சோமாலியா (GPI – 3307)

சோமாலியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரே உலகின் அதிக நாட்களாக நடைபெற்று வரும் போராகும்.தொடர்ந்து நடைபெறும் போரின் காரணமாக பெரும் வறுமை ஏற்பட்டுள்ளது. அல் ஷபாப் போன்ற பல தீவிரவாத குழுக்களுக்கு இடையே ஆன சண்டையே நாட்டை சீரழித்து வருகிறது.   உங்களுக்கு தெரியுமா, நீங்கள் சோமாலியாவில் உள்ள ஏர்போட்டில் இறங்கியவுடன் பூர்த்தி செய்யும் சில படிவங்களில் நீங்கள் எந்த விதமான துப்பாக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதை குறிக்க இடம் உள்ளது.

5சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்லிக் (GPI – 3332)

தொடர்ந்து நடைபெற்று வரும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு இடையே ஆன சண்டையே சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்லிக் நாட்டை ஆபத்தான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

4சவுத் சூடான் (GPI – 3332)

10 லட்சத்திற்கும் மேலான மக்கள் உளநாட்டுப்போரினால் இறந்துள்ளனர். பல மலை வாழ் மக்கள் கூட்டம் ஆட்சியை பிடிக்க நினைப்பதே இந்த உள்நாட்டுப்போருக்கான காரணம்.

3ஆப்கனிஸ்தான் (GPI – 3427)

பின் லேடன்  இறந்த பிறகும் கூட ஆப்கனிஸ்தானில் அமைதியான நிலவரம் நீடிக்கவில்லை. வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் அங்குள்ள மக்களுக்கு சர்வ சாதாரண நிகழ்வாகும். மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் பல ராணுவ தலையீடுகள் ஆப்கனிஸ்தானை மிகவும் ஆபத்தான நாடாக மாற்றியுள்ளது.

2ஈராக் (GPI – 3444)

ஈராக் மட்டுமே எல்லா நாடுகளுக்கு எதிராகவும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அனைத்து நாடுகளை சேர்ந்த ராணுவங்களும் அவ்வப்போது குண்டு மழை பொழிந்து அந்த நாட்டையே ரத்தக்காடாக மாற்றி வருகிறது. சதாம் உசைன் இறந்துவிட்டாலும் இன்னும் தீவிரவாதத்தின் கை ஓங்கியே உள்ளது.

1சிரியா  (GPI – 3444)

சிரியாவே ஆபத்தான நாடுகளின் பட்டியலில் முதன்மையான நாடாக விளங்குகிறது. 2008 ஆம் ஆண்டு 88 வது அமைதியான நாடாக விளங்கிய சிரியா தற்போது முதன்மையான நாடாக விளங்குகிறது இதற்கு மிக முக்கிய காரணம் ஐ எஸ் ஐ எஸ்  தீவிர வாத இயக்கமே என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே!

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.