இந்திய முன்னணி நிறுவனங்களின் பட்டியல் 2017

இந்திய நிறுவனங்கள் அதன் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் பட்டியல் இட்டு உள்ளனர் அதில் சிறந்த பத்து நிறுவனங்களின் தொகுப்பை காணலாம்.

10லார்சென் & டௌப்ரோ(L&T)

லார்சென் & டூப்ரோ உலகின் பலநாடுகளில் கிளைகள் உள்ள ஒரு இந்திய நிறுவனம். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பைமற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
இந்த நிறுவனம் 1938 இல் ஹென்னிங் ஹோல்க்-லார்சென் மற்றும் சோரேன் கிறிஸ்டியன் டூப்ரோ என்னும் இருவரால் மும்பையில் தொடங்கப்பட்டது. பின்னர் 1946ம் ஆண்டு தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது. 1950ம் ஆண்டு பொது நிறுவனமாக (public limited company) மாறியது.

9ஆக்ஸிஸ் பாங்க்(Axis Bank)

ஆக்சிஸ் வங்கி முன்பு யுடிஐ வங்கி என அறியப்பட்டது, இந்தியாவில் தாராளமயக் கொள்கையின்படி 1994ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கி தனியார்துறையில் புதிய வங்கிகளை அனுமதித்தப் பிறகு நிறுவப்பட்ட முதல் வங்கியாகும். இந்த வங்கியை யுனிட் டிரஸ்ட்டின் சிறப்பு நிர்வாகி (UTI-I), இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) பொது காப்பீட்டுக் கழகம், தேசிய காப்பீட்டுக் கழகம், நவ இந்தியா காப்பீட்டுக் கழகம், ஓரியண்டல் காப்பீட்டுக் கழகம் மற்றும் யுனைடட் காப்பீட்டுக் கழகம் ஆகியன இணைந்து உருவாக்கின. இந்த வங்கியின் பெயர் ஏப்ரல் 2007ஆம் ஆண்டு யுடிஐ பெயருள்ள பிற அமைப்புக்களுடனான குழப்பத்தை நீக்க ஆக்சிஸ் வங்கி என மாற்றப்பட்டது. 20 ஏப்ரல் 2009 அன்று முன்னாள் ஐசிஐசிஐ வங்கியின்பெண் அதிகாரி சீக்கா சர்மா வங்கியின் முதன்மை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

8தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC)

தேசிய அனல் மின் நிறுவனம் இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் நவம்பர் 7, 1975 அன்று நிறுவப்பட்டது. தற்போது 34894 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட என்டிபிசி, 2017ம் ஆண்டு முதல் 75,000 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டம் இட்டுள்ளது.

7டாடா கன்சல்டண்சி சர்வீசஸ்(TCS)

டாட்டா கன்சல்டன்சி சர்வீசசு லிமிடெட் (Tata Consultancy Services) என்பது இந்தியாவில் மும்பையைதலைமையிடமாகக் கொண்டுள்ள மென்பொருள் சேவைகள் வழங்கும் அறிவுரைச் சேவை நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் வணிகச் செயலாக்க அயலாக்க சேவைகளையும் வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவின் தேசிய பங்கு மாற்றகத்திலும் மும்பை பங்கு மாற்றகத்திலும் பட்டியலில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும். டிசிஎசு நிறுவனமானது, ஆற்றல், தொலைத்தொடர்புகள், நிதிச் சேவைகள், உற்பத்தி, வேதிப் பொருட்கள், பொறியியல், மூலப்பொருட்கள், அரசுத்துறை, சுகாதாரத் துறை ஆகிய அனைத்து துறைகளிலும் ஆர்வம் காட்டிவரும் இந்தியாவின் மிகப்பெரியதும் பழமையானதுமான தொழில் குழுமங்களுள் ஒன்றான டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

6ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.

5டாடா மோட்டார்ஸ்

டாட்டா மோட்டார்ஸ் இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு வாகன நிறுவனம். இந்நிறுவனம் டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ளது. டாட்டா மோட்டார்ஸ் 2010-11 ல் இந்திய ரூபாய் 9,274 கோடி வருவாய் ஈட்டியதன் மூலம், இந்தியாவின் மிக பெரிய கார் நிறுவனமானது. டாட்டா மோட்டார்ஸ் சிறிய, நடுத்தர கார் மற்றும் பயன்பாட்டு வாகனம் பிரிவுகளில் தயாரிப்புகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் உலகின் நான்காவது பெரிய டிரக் உற்பத்தியாளராகவும், மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து உற்பத்தியாளயாளராகவும் உள்ளது. 50,000 தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். டாட்டா மோட்டார்ஸ் 1954 முதல் இந்தியாவில் 4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்துள்ளது.

4இந்தியன் ஆயில்

பொதுவாக இந்தியன் ஆயில் என்றழைக்கப்படும் ஒரு இந்திய அரசு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் தலைமையிடமாக உள்ளது. இது 2016-17 நிதியாண்டுக்கான 19,106 கோடி நிகர லாபம் (2,848 மில்லியன் டாலர்) நிகர இலாபமாக நாட்டின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாகும். [4] இது 2017 ஆம் ஆண்டு ஃபார்ச்சூன் இந்தியா 500 பட்டியலில் முதல் இடமாக 2017 ஆம் ஆண்டில் ஃபோர்டுனின் 'குளோபல் 500' பட்டியலில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பட்டியலில் உள்ளது. [6] மார்ச் 31 ஆம் தேதி வரை, இந்திய ஆய்வின் ஊழியர் எண்ணிக்கை 33,135 ஆகும், இதில் 16,545 அதிகாரி அலுவலர்கள்

3HDFC பாங்க்

இந்தியாவில்தாராளமயமாக்கல் கொள்கையின்படி பாரத ரிசர்வ் வங்கி தனியார்துறையில் வங்கிகள் திறக்க அனுமதித்தப்பிறகு 1994ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் நிறுவப்பட்ட ஓர் வணிக வங்கியாகும். இந்தியாவில் 1977ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதன்மையான வீட்டுக்கடன் நிறுவனமான வாழ்விட மேம்பாடு நிதி நிறுவனத்தால்(Housing Development Finance Corporation) முன்னெடுக்கப்பட்டது. 1995 சனவரி திங்கள் முதல் முறையான வணிக வங்கியாக செயல்பட துவங்கியது. இவ்வங்கிக்கு 1506 கிளைகளும், 3573 தானியங்கி பணவழங்கிகளும் 635 ஊர்களில் பரவியுள்ளது. இவையனைத்தும் நிகழ்நேர அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன

2ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா(SBI)

இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இதனைத் தமிழில் இந்திய இந்திய அரசு வங்கி] என அழைக்கலாம். இவ்வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன் படுத்தலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது.ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.

1ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமும், லாபகரணமானதுமாகும். ஃபார்ச்சூன் இதழ் வெளியிடும் உலகின் பெரும் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். 1966ஆம் ஆண்டு திருபாய் அம்பானி 15 இலட்சம் பண முதலீடு செய்து துவங்கிய இந்நிறுவனம் $28 பில்லியன்வருமானம் (2006) கொண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. 1977ஆம் ஆண்டு ரூ.10க்கு விற்ற அதன் முதல் பொதுப்பங்கு விற்பனையில் முதலீடு செய்த பங்குதாரர்கள் பெரும் இலாபம் ஈட்டியுள்ளனர். இன்று எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிகல்ஸ், துணி,சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் வணிகம் செய்கிறது.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.