தக்காலி! ஒரு பாட்டில் தண்ணி 65 லட்சமா?

இந்த தண்ணீர் பாட்டிலின் விலை 65  லட்சம் ரூபாய்($100,000). என்ன இருக்கிறது இந்த தண்ணீர் பாட்டிலில் வாருங்கள் பார்க்கலாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தி பெவர்லி ஹில்ஸ் என்ற நிறுவனம் தான் பெவர்லி ஹில்ஸ் 90H2O டயமண்ட் எடிசன் என்றழைக்கப்படும் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.இந்த தண்ணீர் உற்பத்தி செய்வதற்காக தெற்கு கலிபோர்னியா மலையின் 5000 அடி உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் உபயோகப்படுத்தப்படுகிறது.இந்த பகுதியில் கிடைக்கும் தண்ணீர் தான் உலகின் மிகவும் சுத்தமான தண்ணீர். தண்ணீரை சுத்தம் செய்யும் தொழிலில் முதன்மையிடத்திலிருக்கும் மார்ட்டின் ரைஸ் என்பவர் தான் இந்த தண்ணீரை சுத்தம் செய்துள்ளார் .

இந்த நிறுவனத்தின் தலைவர் திரு ஜான் கேப் கூறுகையில் பெவர்லி ஹில்ஸ் 90H2O தண்ணீர் அருமையான சுவையை கொண்டுள்ளதாக கூறுகிறார் . இந்த தண்ணீரில் அதிகளவு அல்கலைன் மற்றும் கால்சியம் மெக்னீசியம் போன்ற உடலுக்கு நன்மை தரும் பல வேதிப்பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது . அதோடு இந்த தண்ணீர் பாட்டிலின் மூடியில் 600 வெள்ளைநிற வைரக்கர்களும் 250  கருப்புநிற வைரக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த தண்ணீர் பாட்டிலில் பதினான்கு கேரட் வைரம் உள்ளது . இதுவரை 9  டைமென்ட் எடிசன் வாட்டர் பாட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டயமண்ட் எடிசன் பாட்டிலுடன் நான்கு விலை உயர்ந்த கிரிஸ்டல் டம்ளர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த பாட்டில் வாங்குபவர்க்கு ஒரு வருட லைப்ஸ்டைல் எடிசன்  தண்ணீர் பாட்டில் இலவசமாக கிடைக்கும் . ஒருவருடம் இலவசமாக கிடைக்கும் இந்த லைப்ஸ்டைல் வாட்டர் பாட்டில் ஒன்றின் விலை 500ml 60 ருபாய்.

500 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட  இந்த தண்ணீர் பாட்டில் தங்கம் மற்றும் நீல நிறங்களில் , பைபீனால் - எ ( BPA ) என்ற உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் இல்லாத மற்றும்  100  சதவீதம் திரும்ப பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது.அதோடு சூரியக்கதிர்கள் இந்த பாட்டிலினுள் நுழைய முடியாது . இதனால் தண்ணீரின் சுவை குறையாமல் அப்படியே இருக்கும் .

இந்த தண்ணீர் பாட்டில் தான் உலகின் விலை உயந்த தண்ணீர் பாட்டிலாகும். இதை நீங்க பார்க்கவோ அல்லது வாங்கவோ நினைத்தால் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள் .

http://beverlywater.com/shop/diamondedition/ 

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.