உலகின் மிகச்சிறிய செல்போன் எது தெரியுமா?


வித்யாசமான மற்றும் கஸ்டமைஸ்டு செல்போன் தயாரிக்கும்  யூ.கே வைச்சேர்ந்த செங்கோ நிறுவனம் தான் செங்கோ டைனி டி ஒன் என்ற உலகின் மிகச்சிறிய செல்போனைக் 2018  ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த செல்போனில் நீங்கள் பேசலாம் , மெசேஜ் அனுப்பலாம் , ஏன் நீங்கள் இன்டர்நெட் வசதியை கூட உபயோகப்படுத்த முடியும். இந்த செல்போன் உங்கள் கட்ட விரலைக்காட்டிலும் மிகச்சிறியது மற்றும் நாணயத்தை காட்டிலும் எடை மிகக்குறைவு. இதன் நீளம் 2 இன்ச்(46.7mm * 21mm) மற்றும் எடை 13 கிராம் மட்டுமே. இந்த செல்போன் தான் உலகத்திலேயே மிகச்சிறிய செல்போன்.

200mAh பேட்டரியுடன் வருவதால்,இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் உபயோகப்படுத்த முடியும் மேலும் 180 மணிநேரம் தொடர்ந்து பேச முடியும் . இதனை நீங்கள் USB கேபிள் வழியாக மட்டுமே சார்ஜ் செய்ய முடியும். இதில் நீங்கள் 50 குறுஞ்செய்தி மட்டுமே சேமிக்க முடியும். அதோடு 3  வாய்ஸ் மெசேஜ் மட்டுமே சேமிக்க முடியும் . மேலும் முன்னூறு தொலைபேசி எங்களை மட்டுமே கான்டெக்ட் புக்கில் சேமிக்க முடியும். நேனோ SIM ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளதால் நீங்கள் எந்த தொலைபேசி நிறுவனத்தின் நேனோ சிம்மை பொருத்தி உபயோகப்படுத்த முடியும்.

இந்த செல்போனில்  2G  நெட்ஒர்க் மற்றும் ப்ளூடூத் வசதி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 3G மற்றும் 4G வசதி கிடையாது. இந்த செல்போன் 32  MB RAM , 32  MB  ரோம் மற்றும் 0.49 இன்ச் LED திரையையும் 32X64 பிக்சல் ரெசல்யூசனையும் கொண்டுள்ளது. நீங்கள் இந்த போனை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும் . காலையில் ஜாகிங் செல்லும் போது அல்லது அவசர காலங்களில் பயன்படுத்தலாம்.

இந்த செல்போன்  CE RoHS அனுமதி பெற்றுள்ளதால் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றது மற்றும் பாதுகாப்பானது.

இந்த செல்போன் மே 2018 ல் விறபனைக்கு வரும் என்றும் , விலை 2 ,280 ரூபாய்க்கு இந்தியாவில் விற்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.  

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.