சிவனின் மூன்றாவது கண் என்பது உண்மைதானா ? விசித்திர சக்திகளுடன் உலா வரும் யோகமாதா


பழங்கால சிவபுராணங்களில் அடிக்கடி குறிப்பிடப்படும் வார்த்தை சிவனின் நெற்றிக்கண் அல்லது மூன்றாவது கண் தான் . இதை சிவன் உலகில் நடுக்கும் அத்துணை விஷயங்களை அறிவதற்காக பயன்படுத்தும் அற்புத சக்தியாகும். இது ஆங்கிலத்தில் பீனியல் கிளெண்டு என்றும் அழைக்கப்படும் .பொதுவாகவே இந்த மூன்றாவது கண் அனைவருக்கும் இருப்பதாகவும் ஆனால் அதை திறக்க ஆழ்ந்த தியான முறைகளும் , மனதை ஒருநிலை படுத்துபவர்கள் மட்டுமே திறக்க முடியும் என்று சொல்லப்படுகிறது .
இந்த மூன்றாவது கண் இந்தியாவிலுள்ள ஒன்பது வயது  சிறுமியான யோகா மாதாவிற்கு  இருக்கிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா ? எங்களாலும் முதலில் இச்செய்தியை நம்பமுடியவில்லை. இந்த சிறுமி இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான நித்யானந்தாவின் சீடர் என்பதை கேட்டதும் இன்னும் உங்களுக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தும்.

இந்த சிறுமியால் கண்களை கட்டிய பிறகு கூட எதிரில் இருக்கும் அனைத்தையும் கண்களை திறந்திருந்தால் எப்படி பார்க்க முடியுமோ அப்படி இயல்பாக பார்க்க முடிகிறது. நீங்கள் யோகமாதா என்று இணையத்தில் தேடினால் உங்களுக்கு இன்னும் பல தகவல்கள் நீங்கள் அறியலாம்.

இந்த அறிய சக்தியினை தான் சிறப்பான மந்திரங்கள் மூலமும் , சக்தி வாய்ந்த யோகா கலைகளின் மூலம் கற்றதாகவும் கூறுகிறார் . அதோடு இந்த கலையை நித்யானந்தா நடத்திவரும் ஆன்மீக பள்ளியில் தான் இவ்வனைத்தையும் கற்றதாக கூறுகிறார். தனக்கு மட்டும் இந்த சக்தியில்லை, அந்த ஆன்மீக பள்ளியில் பயிலும் அனைவருக்கும் வெவ்வேறு சக்திகள் இருப்பதாக கூறுகிறார் .அவரது திறமையை சோதிக்க பல வெளிநாட்டினராவும் வந்து யோகா மாதாவை கண்ணை காட்டியபடி படிக்கவும் , எழுதவும் , வரையவும் வைத்தனர் . அந்த சிறுமி அனைத்தையும் நூறு சதவீதம் சரியாக செய்து முடிக்க , மே மாதம் 2015 ஆண்டு வாஷிங்டனில் நடைபெற்ற பிசினெஸ் அட்வைஸ்சி சம்மிட் என்ற நிகழ்ச்சியில் தனது விசித்திர சக்தியை செய்து காமிக்க அழைப்பு விடுத்தனர் 

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பதினைந்திற்கும் மேற்பட்ட பெரிய பணக்காரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இவரது திறமையை கண்டு ஆடிப்போனார் . இவரது இந்த திறமையை ஆராய்ச்சி செய்தால், மருத்துவ துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொன்றுவரும் என்று மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நெருப்பில்லாமல் புகையாது என்பதை போல் இந்த கலையை கற்க தான் வெளிநாட்டினர் கோடி கோடியாக நித்யானந்தாவின் ஆரிமத்திற்கு அன்பளிப்பு கொடுக்கின்றனரோ?

அவரது சக்திகளை அறிய கீழே உள்ள காணொளியை காணவும் . இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் , நண்பர்களுக்கு பகிருங்கள் . 

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.