2 லிட்டர் பெப்சி பாட்டில் சைசுல பொண்ணா? என்னப்பா சொல்றிங்க?


படத்தில் குழந்தை போல் காட்சியளிக்கும் இந்தப்பெண் குழந்தையல்ல 23 வயதுடைய இளம்பெண். ஆம் , இவர் பெயர் ஜோதி கிசாஞ்சி அம்ஜெ(JYOTI KISANJI AMGE) மற்றும் இவர் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில்  வசித்து வருகிறார்.இவர் தான் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் மற்றும் இவரது உயரம் 62.8  சென்டிமீட்டர் ஆகும் . இவர் 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி பிறந்தார்.இவரது இந்த வளர்ச்சியின்மைக்கு காரணம் அகொன்றபிளசியா(Achondroplasia) என்ற மரபணு நோயே காரணமாகும்.

இவர் உலகின் மிகவும் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை  பெற்ற பிரிஜேட்டே ஜோர்டான்(Bridgette Jordan)   என்பவரை விடவும் குள்ளமானவர் . பிரிஜேட்டே ஜோர்டானின் உயரம் 69  சென்டிமீட்டர் ஆனால் ஜோதியின் உயரம் 62.8  சென்டிமீட்டர் மட்டுமே ஆகும் .

உலகுக்கே இருந்த இடம் தெரியாமல் இருந்த ஜோதிக்கு எப்படி கின்னஸ் சாதனை கிடைத்தது.  இவரது 18 ஆவது பிறந்தநாளின் போது  ஒக்கர்ட் மல்டிஸ்பெஸால்ட்டி ஹாஸ்பிடலில்(Wockhardt Superspeciality Hospital) இவரது உயரம் அழைக்கப்படும் போது இவரது உயரம் மிகவும் குறைவாக இருந்ததால் மருத்துவர்கள் இவரது புகைப்படத்தை வெளியிட்டனர். பிறகு என்ன புகைப்படம் வெகுவாக இணையத்தில் வைரலானது மற்றும் 2011  ஆம் ஆண்டில்  உலகிலேயே மிகவும் குள்ளமான பெண்மணி என்ற பட்டமும் கிடைத்தது.இது மட்டுமல்ல இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான  அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி என்ற ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  நடித்துள்ளார் அதோடு நல்ல நடிகர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார் . இவருக்காக இ எம் டீ பி(imdb) என்ற திரைப்படங்களுக்கு விமர்ச்சனம் எழுதும் வெளிநாட்டு இணையத்தில் கூட இவருக்கு ஒரு பேஜ் உண்டு.

இவர் ஆகஸ்ட் மாதம்  2014  ஆம் ஆண்டு நடந்த இந்திய பிரபல ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' (big boss)நிகழ்ச்சியிலும் சிறப்பு பங்கேற்பாளராக தோன்றியுள்ளார்.

இதற்கிடையில் , இவருக்கு திருமணமானதாக பொய்க்கதைகளும் இணையத்தில் வெளிவந்தன. ஆனால் ஜோதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை!

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.