போதிதர்மன்! உண்மையிலேயே தமிழன்தானா?! தெரியாத உண்மைகள்!


போதிதர்மன் ஆறாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் தென்பகுதியை ஆண்ட பல்லவ சம்பிராஜ்யத்தின் இரண்டாம் தலைமுறையில் தோன்றி வாழ்ந்ததாக கருதப்படும் மஹாஞானி .போதிதர்மனை தமிழன் என்றும் , தற்காப்புக்கலைகளுக்கும் மற்றும் மருத்துவமுறைகளுக்கும் சிறந்து விளங்கியவர் என்று திரைப்படங்களில் காண்பித்தாலும் போதிதர்மனை பற்றிய குறிப்புகள் வெகு சிலவே உள்ளது .வாருங்கள் , இவரைப்பற்றிய முழு விவரங்களை அறிவோம் .

இவர் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் கந்தவர்மன் என்ற பல்லவ மன்னனின் மூன்றாவது மகனாக பிறந்து , அரசனாக வாழ்ந்து பிறகு புத்த மதத்தை தழுவியதாக கூறப்படுகிறது.புத்த மதத்தின் குருவாக மாறிய பின்பு சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட இவர் புத்த சமயத்தை பரப்பியதாகவும் ௧௫௦ ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.ஆனால் வரலாற்றில் அவர் பாரசீகத்தை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களிடம் இருந்து தான் ஆரம்பமாகிறது . அரேபியர்கள் , சீனர்கள், வட இந்தியர்கள் என பல்வேறு இடங்களை சேர்ந்த வணிகர்கள் தமிழகத்திலிருந்து தான் தங்கம் , வெள்ளி, மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற பொருட்களை பண்டமாற்று முறையில் தங்கள் நாட்டிற்கு ஏற்றுமதிசெய்துகொண்டிருந்தார்கள்.இந்த செல்வா செழிப்புகளை குறிவைத்து மூன்றாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் மீது பல படையெடுப்புகள் நிகழ்த்தப்பட்டன . அப்படி வந்து சேர்ந்தவர்கள் தான் இந்த பல்லவ மன்னர்கள் மற்றும் கலப்பினர்கள் .இவர்கள் மூலமாகத்தான் புத்த , சமய , சமண மாதங்கள் தமிழகத்தில் பரவ ஆரம்பித்தன .காஞ்சிபுரத்தை தலைநகரமாகக்கொண்ட பல்லவர்களால் நிர்மாணிக்கப்பட்டதுதான் காஞ்சி கைலாசநாதர் கோவிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்திருக்கும் புத்த மத திருத்தலங்களும் கலப்பினர்களாயே கட்டப்பட்டது . தமிழகத்தில்  கலப்பினர்கள் ஆண்டகாலம் இருண்டகாலமாகவே கருதப்பட்டது.போதிதர்மன் பல்லவ வம்சத்தை சேர்ந்ததாக வரலாறு கூறினாலும் அவர் கலப்பின வம்சத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்ற மற்றோரு கருதும் இருக்கிறது . வரலாற்றில் கலப்பினர்கள் ஆண்ட காலம் எப்படி இருண்டுகிடக்கிறதோ அதே போல் போதிதர்மரின் வரலாறும் இருந்த கிடக்கிறது.

ஆனால் தற்போது   ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி உண்மையில் கலப்பினர்களின் ஆட்சிக்காலத்தில்தான் மக்களை நல்வழிப்படுத்தும் பல நூல்களும் காப்பியங்களும் தோன்றின எனவும் அவர்களின் சிறப்பு திட்டமிடப்பட்டே வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டு இருண்டகாலமாக சித்தரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள் .போதிதர்மரின் வாழ்க்கை மறைக்கப்பட்டதற்கான காரணம் இதுவாக கூட இருக்கலாம் என நம்பப்படுகிறது.

போதிதர்மனைப்பற்றி இப்போது நமக்கு கிடைக்கப்பெற்ற கொஞ்ச நஞ்ச தகவல்களும் சீன மற்றும் ஜப்பானியர்களால் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டவையே என்பது குறிப்பிடத்தக்கது.அவைகளும் முரண்பாடுடன் தெளிவற்றவையாகத்தான் காணப்படுகிறது. போதிதர்மனைப்பற்றி அவரது சமகாலத்தை சேர்ந்த சீனர்கள் இருவரின் குறிப்புகள் கிடைக்கின்றன . கீ பி ஐநூற்று நாற்பது ஏழாவது வருடம் புத்தமதத்தின் கோட்பாடுகளை சீன மொழிக்கு மொழி பெயர்த்தவரான இவாங் சுவாங் கூறுவதாவது அந்த காலத்தில் மேற்குப்பகுதியில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த பாரசீகரரான போதிதர்மா என அறியப்பட்ட துறவி இருந்தார் எனவும் காட்டு எல்லைகள் வழியாக சீனாவை அடைந்தார் எனவும் குறிப்பிடுகிறார் .


இரண்டாவது குறிப்பு கீ பி ஐநூற்று ஆறு முதல் ஐநூற்று எழுபது நான்கு வரை வாழ்ந்தவரான  டங்களின் என்பாரின் குறிப்பு ஆகும் .அதி போதிதர்மர் எழுதியதாக கருதப்படும் 'இரு வாயில்களிலும் நான்கு செயல்களும் ' என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் போதிதர்மர் ஒரு தென்னிந்தியார் எனவே குறிப்பிடுகிறார்.போதிதர்மர் தென்னிந்தியாவின் மேற்குப்பகுதியை  சேர்ந்தவர் எனவும் இவர் பல்லவ மன்னன் மூன்றாவது அரசர் எனவும் மஹாயான வழியிலேயே அவரது குறிக்கோள்கள் அமைந்திருந்தன எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சீனக்கோவிலாக அறியப்படும் சாவளின் டெம்பிளில் உள்ள கல்வெட்டொன்றில் கூட போதிதர்மனைப்பற்றிய குறிப்புள்ளது .தற்போதிருக்கும் காஞ்சிபுரம் கோவிலிலுள்ள தற்காப்புகாலை சிற்பங்களில் , தற்காப்புக்கு எப்படி உருவாகின என்பதுபற்றின வரலாறு செதுக்கப்பட்டிருக்கின்றன. போதிதர்மன் பாரசீகத்தை சேர்ந்தவர் என கூறப்படுவதற்கான காரணம் அந்தக்காலத்தில் பாரசீகத்தை சேர்ந்தவர்கள் பகலவர்கள் என்ற அரசு மரபினரால் ஆளப்பெற்றனர் .பகலவர் என்ற பெயரும் பல்லவர் என்ற பெயரும் கிட்டத்தட்ட ஒன்று போலவே அமைந்திருப்பதால் இந்த குழப்பங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறுகிறார்கள் .போதிதர்மர் நூற்றி ஐம்பது வருடங்கள் வாழ்ந்ததாக கூறப்பட்டாலும் , அவர் உண்மையில் வாழ்ந்த காலம் கீ பீ 475 முதல் 540 வரை மட்டுமே.

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.