6 வயது சிறுவனை ஒரு வருடத்தில் கோடீஸ்வரனாக்கிய யூடுயூப் சேனல்


ஒரு 500 ரூபாய் சம்பாரிக்க பல கடினமான வேலைகளை பார்த்துவரும் மக்களுக்கு இடையே ஆறே வயதான ரியான் என்ற சிறுவன் தனது பொம்மைகளை மதிப்பீடு செய்யும் வீடீயோவை பிரபலமான யூடுயூப்பில் அப்பிளோடு செய்ததின் மூலம் ஒரு   வருடத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை அச்சிறுவன் ஈட்டியுள்ளான். இந்த சிறுவனின் யூடுயூப் சேனல் அதிகமாக பணம் ஈட்டும் யூடுயூப் சேனலின் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. சரி, எப்படி அந்த சிறுவனின் யூடுயூப் சேனல் பிரபலமானது?

பொம்மைகளை அதிகமாக விரும்பும் ரியான் எந்த ஒரு பொம்மை வாங்குவதற்கு முன்பும் அதன் மதிப்பீடு பற்றி ஆராய்ந்த பின்பே அதனை வாங்குவார். தனது நான்கு வயதிலேயே தனது பெற்றோரின் உதவியுடன் தனது 'ரியான் டாய்ஸ் ரெவியூ' (Ryan Toysreview) என்கிற யூடுயூப் சேனலை மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு துவங்கினர். ஆரம்பத்தில், ரியனின்  காணொளி பிரபலமடையவில்லை ஆனாலும் ரியான் மற்றும் அவனது பெற்றோர்கள் விடாமுயற்சியாக தினந்தோறும்  ஒரு காணொளியை பதிவேற்றம் செய்தனர் .

உழைப்பு என்றும் வீணாகாது என்ற பழமொழிக்கிணங்க , ஜூலை 2015 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட   ரியனின் 'ஜியன்ட் எக்க் சர்ப்ரைஸ் '(Giant Egg Surprise) என்ற காணொளி  இணையத்தில்  வைரலானது. அந்த வீடியோவை இதுவரை 800 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

இந்த யூடுயூப் சேனலின் மூலம் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே மாதம் பத்து லட்சமாகும் . இந்த யூடுயூப் சேனல் இதுவரை 1 கோடி ரசிகர்களை கொண்டுள்ளது .

நாம் நான்கு வயதில் என்ன செய்தோம் என்று நினைத்து பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது . பிடித்த விஷத்தை வேலையாக வைத்துக்கொண்டால் அந்த வேலை வாழ்வில் நம்மை மிக உயரமான இடத்துக்கு அழைத்துச்செல்லும் என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும்.

 

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.