அடேங்கப்பா ! வாழை இலையில் இவ்வளவு விஷயம் இருக்கா?


தற்போது விழாக்கள் மற்றும் விசேஷங்களில் மட்டுமே நாம் வாழை இலையில் விருந்த்தளிக்கிறோம் . ஆனால், இன்னும் சில திருமண நிகழ்ச்சிகளில் ரசாயனம் கலந்த காகிதங்களிலேயே உணவு பரிமாறப்படுகிறது. அவ்வாறு நாம் உண்ணும் உணவு மிகவும் ஆபத்தானது ஏனெனில் சூடான உணவு அந்த பிளாஸ்டிக் காகிதத்தில் பரிமாறும் போது அந்த ரசாயனம் உணவினுள் கலக்கிறது. இப்போது நீங்கள் தெரிந்துகொள்ளப்போகும் வாழை இலையின் மகத்துவம் உங்களை விசேஷங்களில் மட்டுமல்ல அன்றாடம் வாழை இலையை உபாயயோகப்படுத்த தூண்டும்.

  • சிறுநீரக கல்லிற்கு வாழை மரத்தின் தண்டின் சாறு ஒரு மிகச்சிறந்த மருந்து என்று அனைவருக்கும் தெரியும். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் சிறுநீரகம் மற்றும் ஆண்களின் விதைப்பைகளின் பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறது.
  • இளம் வயதிலேயே பெரும்பாலான இளைஞர்கள் நரைமுடி பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .வாழை  இலையில் சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருப்பாக மாற ஆரம்பிக்கும்.
  • தோல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அரிப்புகளுக்கு வாழை இலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து பத்து போட்டால் தோல் பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
  • வாழை இலையில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் நம் உடல் செல்களில் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் அதிக நாட்கள் இருக்க முடியும்.
  • வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும். உணவும் எளிதில் ஜீரணம் ஆகும். மனஅழுத்தம் , புற்றுநோய் , மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகிறது.
  • வாழை இலையில் சூடான சாதம் பரிமாறும் போது வலை இலை அந்த இளம் சூட்டில் வெந்து வாழை இலையிலுள்ள வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம் , கால்சியம் ஆகிய சத்துக்களும் உணவுடன் சேர்ந்து கிடைக்கின்றன.
  • அனைத்து இலைகளினுள் வாழை இலை மட்டுமே மரத்திலிருந்து வெட்டியெடுத்த பிறகும் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது.

நம் முன்னோர்கள் அனைத்து விசேஷங்களிலும் வாழை இலை பயன்படுத்தியதற்கான காரணம் இதுவே ஆகும் .

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.