ப்ளூடூத் வசதி மற்றும் 360 கோணம் பார்க்க உதவும் அதிநவீன வேற லெவல் ஹெல்மெட்

க்ராஸ்ஹெல்மெட் என்பது அடுத்த தலைமுறை மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் ஆகும், இது ஒலி கட்டுப்பாடு மற்றும் 360˚ காட்சித்திறன் உங்கள் சவாரி அனுபவத்தையே முற்றிலுமாக மாற்றிவிடும். இதுவே  முதல் ஒலி கட்டுப்பாட்டு செயல்பாடு, 360˚ தொலைநோக்கு பார்வை, ப்ளூடூத் இணைப்பு மற்றும் ஒரு பிரத்யேக ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட் ஆகும். இந்த ஹெல்மெட்டை நீங்கள் எங்கிருந்தாலும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும்.

360 கோணம் பார்க்க உதவும் திரை

நீங்கள் இந்த ஹெல்மெட்டை உபயோகப்படுத்தினால் பின்புறம் திரும்பி பார்க்க வேண்டிய அவசியமே கிடையாது. ஏனென்றால் , உங்களின் பின்புறம் வரும் வாகனங்களின் காட்சி உங்கள் ஹெல்மெட்டின் முன்பகுதியில் உள்ள திரையில் தெரியும் . இதுமட்டுமல்லாமல் , இந்த கிராஸ் ஹெல்மெட் ஜீ பி எஸ் வசதி உள்ளதால் நீங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு சரியான பாதையை காண்பிக்கும். 360 கோணம் பார்க்க முடியும் என்பதால் நீங்கள் சாதாரணமாக பார்க்க முடியாத சாலையின் பகுதியை கூட பார்க்க இயலும் .

எரிச்சலூட்டும் சாலைபகுதியின் சத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும்

இந்த அதிநவீன கிராஸ் ஹெல்மெட்டில் , சத்தத்தை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது .இதன் மூலன் சாலை மற்றும் இயந்திர சத்தத்தை குறைத்தோ அல்லது அதிகரித்தோ வைக்க முடியும் .

சேர்ந்து பயணிக்கும் நண்பர்களுடன் பேசும் வசதி

உங்கள் பைக் நிலையாக உள்ள நேரத்தில் , கிராஸ் ஹெல்மெட் செயலி மூலம் சேர்ந்து பயணிக்கும் நண்பர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

இதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு விளக்கு, பயணித்த தகவல்கள் , மியூசிக் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளது.


மேலும் விபரங்களுக்கு :

http://www.crosshelmet.com/

மௌவலின் சுவாரஸ்ய செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.