இந்தியாவைப்பற்றி நீங்கள் அறிந்திருக்க முடியாத பத்து விஷயங்கள்

நாங்கள் (மௌவல்) பல தேடல்களுக்கு பிறகு இந்தியாவை பற்றி நீங்கள் அறியாத பத்து விசயங்களை வரிசைப்படுதியுள்ளோம்.ஆம் உங்களுக்காகவே.

10உங்களுக்கு தெரியுமா இந்தியாவிற்கு ஏன் "இந்தியா" என்ற பெயர் வந்தது என்று?


இந்தியாவில் காஷ்மீர் எல்லையில் பாயும் "இந்தஸ்" என்ற நதியின் பெயரையே இந்தியாவிற்கு  சூட்டினர்.இந்த நதி ஆசியாவிலேயே மிக நீளமான (3810 கிலோமீட்டர்)நதி ஆகும்.

இந்த நதி பாகிஸ்தானில் தொடங்கி இந்தியாவின் காஷ்மீர் எல்லையை கடந்து திபெத்தில் முடிவடைகிறது. 

மேலும் விவரங்களுக்கு :https://en.wikipedia.org/wiki/Indus_River

9இந்திய ராணுவம் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய ராணுவம் 

இந்திய ரானும்வத்தில் மொத்தமாக 1,129,900 ராணுவ வீரர்கள் பணியாற்றுகிறார்கள்.அவர்கள் அங்கு தூக்கமில்லாமல் பணியிலும் மழையிலும் வேலை செய்வதாலே நாம் இங்கு நிம்மதியாக வீட்டில் உறங்கி கொண்டிருக்கிறோம்.இவர்கள் பெறும் சம்பளம் குறைவாக இருப்பினும் அவர்களது மனம் நிறைவாக உள்ளது காரணம் "தேசிய பற்றே".

மேலும் விவரங்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Indian_Army

8உலகிலேயே அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடும் விழா -கும்பமேளா


பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவில் நடைபெறும் "கும்பமேளா" விழாவிற்கு வருகை தரும் மக்களின் கூட்டத்தை விண்ணிலிருந்து கூட அடையாளம் காண இயலும்.

ஒவ்வொரு முறையும் இந்த விழா புனித நதிகளாக கருதப்படும் கங்கா,யமுனா,கோதாவரி,சரஸ்வதி ஆகிய நதிகளின் கரையோரங்களில் நடைபெறும். 

7உலகிலேயே மிகப்பெரிய ஸ்கூல் இந்தியாவில் தான் உள்ளது

1957 ல் பாரத் காந்தி மற்றும் ஜகதீஷ் காந்தி ஆகியோரால் நிறுவப்பட்ட சி.எம்.எஸ் பள்ளிக்கூடமே உலகிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடம் ஆகும்.இதில் 50,000 கும் மேலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு :

https://en.wikipedia.org/wiki/City_Montessori_Schoolhttps://www.youtube.com/watch?v=qcmINpEN5FY

6வீட்டில் கதவுகளும் இல்லை ,ஊரில் திருடர்களும் இல்லை 

மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு சிறிய கிராமமான சாணி ஷின்ஞபுரில் வசிக்கும் அனைத்து  கிராம மக்களும் தனது வீட்டிற்கு கதவுகள் இல்லாமலேயே கட்டுகின்றனர். ஏனென்றால் அங்கு யாரேனும் திருடினால் சாணி எனும் அக்கிராமத்து கடவுள் தண்டனை வழங்குவார் என்று நம்புகின்றனர். 
அதுமட்டுமல்லாமல், இந்த ஊரில் போலிஸ் ஸ்டேஷன் கிடையாது .2010 வரை, ஒரு திருட்டு வழக்கு கூட பதிவானதில்லை.

யாரவது இப்படியொரு கிராமத்தை பார்த்து பொறாமை படாமல் இருப்பார்களா? அதன் விளைவாகவோ என்னவோ 2010 த்திற்கு பிறகு ஒரு இரு சக்கர வாகனம் திருடு போனதாக கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Shani_Shingnapur

5உலகிலேயே கிரானைட்டால் கட்டப்பட்ட முதல் கோவில் இந்தியாவில் தான் உள்ளது.

தஞ்சாவூரில் இறைவன் சிவனுக்காக ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பெருவுடையார் கோவிலே கிரேனைடினால் உருவாக்கப்பட்ட முதல் கோவிலாகும்.இக்கோவில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் ஆகும்.
 
மேலும் விவரங்களுக்கு:https://en.wikipedia.org/wiki/Brihadeeswarar_Temple

4உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் இந்தியாவில் தான் வாழ்கிறது 

ஜியோன சேன் என்னும் இந்தியர் தான் "உலகிலேயே அதிக குடும்பத்தினர்களை கொண்ட குடும்பம் " என்கின்ற கின்னஸ் ரெகார்ட் வைத்துள்ள நபர்.இவருக்கு 39 மனைவிகள் ,94 குழந்தைகள் ,14 மருமகள்கள் மற்றும் 33 பேரக் குழந்தைகள் உட்பட மொத்தம் 180 பேர் உள்ளனர். இவர் பக்டவ்ங் எனும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.இவர் இந்த மிகப்பெரிய குடும்பத்தின் தலைவனாக இருப்பதை நினைத்து மிகவும் பெருமையாக  உள்ளார். இவரது பெருமை அமெரிக்கா வரை பரவியிருக்கிறது என்பதற்கு சான்றாக அமெரிக்கா மேகசின் ஒன்றில் "பிலீவ் இட் ஆர் நாட்" என்ற தலைப்பில் வெளியான இதழில் இவர் பெயரும் இடம்பெற்றிருந்தது.

மேலும் விவரங்களுக்கு : 
https://en.wikipedia.org/wiki/Ziona

3வாகனங்களையே ஈர்க்கும் காந்தமலை இந்தியாவில் தான் உள்ளது

இந்தியாவில் உள்ள லே-கார்கில்-பால்டிக் தேசிய நெடுஞ்சாலையில் தான் இந்த காந்தமலை அமைந்துள்ளது.இந்த மலைப்பாதை வழியாக வாகனங்களில் செல்லும் போது காந்தசக்தியால் வாகனங்கள் சிறிதளவு ஈர்கப்படுவதாக அந்த வட்டாரத்தை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 14 ஆயிரம் அடி மேலே இருப்பதால் சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் மலையின் மீது அதிக அடர்த்தியில் படுவதினாலேயே இச்சக்தியை பெற்றுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காந்த சக்தியின் அளவானது காலை மற்றும் இரவு வேறுபடுவதாகவும் கூறுகின்றனர். 

மேலும் விவரங்களுக்கு :https://en.wikipedia.org/wiki/Magnetic_Hill_(India)

2விண்கற்கள் பூமியின் மேலே விழுந்ததால் ஏற்பட்ட குளம் - "லூனார் லேக்".

விண்கற்கள் பூமியின் மேலே விழுந்ததால் ஏற்பட்ட குளம் மகாராஷ்டிராவில் உள்ளது.இந்த குளம் மற்ற குளங்களை போல் இல்லாமல் உப்பு தன்மை கொண்டதாக உள்ளது.புவியியலாளர்கள், தொல்பொருலாளர்கள் மற்றும் வானியலாளர்கள் இந்த குளத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த குளம் 1.2 கிலோமீட்டர் சுற்றளவை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் விவரங்களுக்கு:
https://en.wikipedia.org/wiki/Lonar_crater_lake 

1இந்தியா கபடி உலககோப்பை போட்டிகளில் தோற்றதேயில்லை 

கபடி விளையாட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியதும் இந்தியா தான் ,அனைத்து உலககோப்பைகளையும் வெற்றி பெற்றதும்   இந்தியா தான்.
ஆம் 1990, 1994, 1998, 2002, 2006, 2010, 2014 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து உலககோப்பைகளையும் இந்தியாவே வென்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 

 https://en.wikipedia.org/wiki/India_national_kabaddi_team

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.