உலகிலேயே ஆபத்து மிகுந்த பத்து வளர்ப்பு நாய்கள்

எதாவது பிராணி வீட்டில் வளர்க்கலாம் என்று யோசித்தால் ,நமது  நினைவுக்கு முதலில் வருபது நாய்கள் மட்டுமே.மனிதனை போல நாய்களும் எதையும் எளிதில் கற்றுகொள்ளும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே!.
ஆனால் ,சிலரின் தவறான வளர்ப்பு முறையால் நாய்கள் மனிதனின் உயிருக்கு ஆபத்தானதாகவும் உருவெடுக்கின்றன.அதே சமயம் சில நாய் இனங்கள் இயற்கையாகவே ஆபத்தானதாக உள்ளது.
அமெரிக்க நாளிதழில் ,மனிதனுக்கு ஆபத்து விளைவிக்கும் பத்து நாய்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அவற்றை தற்போது காண்போம்.
இதை படித்த பிறகு எங்களுக்கு நினைவுக்கு வந்த பாடல் வரிகள்  " எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!" 

10அக்கிடாஸ் 

நமது பட்டியலில் பத்தாம் இடத்தை பிடிக்கும் நாய் "அக்கிடாஸ்" .இந்த நாய் இனம் யாருக்கும் பயப்படாத குணத்தையும் , முதலாளிக்கு மிக விசுவாசமாகவும் இருக்கும்.
நாய் வளர்ப்பவர் ,நாயின் குழந்தை பருவத்திலேய அனைவரிடமும் பழக விடவேண்டும் . இல்லையென்றால் ,யாருக்கும் பயபடாத இந்த நாய் மிகவும் ஆபத்தானதாக மாறும்.

9பாக்செர் 

பாக்செர் என்ற நாயின் பெயரை சொல்லும்போதே நமக்கும் நினைவுக்கு வருவது இது வீட்டு காவலுக்கு மிகவும் சிறந்தது என்பதே.
என்ன தான் இந்த நாய் ஆபத்தான நாய்களின் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் , இயற்கையாகவே சாந்தகுணம் கொண்டதாகவே அறியப்படுகிறது.

8கிரேட் டான்ஸ் 

இந்த கிரேட் டான்ஸ் இனம் மற்ற நாய் இனங்களை வித்யாசமானது . இந்த நாய் ,200 கிலோ எடை வரை வளரும் .
எப்பேர்பட்ட நாய்களை விரும்பும் மனிதரானலும் ,இந்த நாயின் அபரிவிதமான வளர்ச்சி மற்றும் தோற்றம் பீதியடைய செய்கின்றது என்பது உண்மையே.
நீங்க வாக்கிங் போறிங்களோ இல்லையோ , இந்த நாயெ வாக்கிங் கூட்டிட்டு போனும் ,இல்லன கடிச்சு வச்சுருமாம் .

7சவ் சவஸ் 

பேரும் நாய் பாக்குறதுக்கும் புசு புசுனு நல்லாத்தான் இருக்கு ! ஆனா ஏன்  இந்த நாய் ஆபத்தான பட்டியல் வந்துருக்குனு நினைகிருங்கிகளா ?
என்ன பண்றது , நம்மள கடிச்சா லிஸ்ட்ல வரும்ல.
இந்த நாய் இனம் சீனால இருந்து மற்ற நாடுகளுக்கு பரவனதாகவும் , 4000 வருஷத்துக்கு முன்னாடி இருந்தே இருப்பதாவும் சொல்றாங்க.

6டாபெர்மன் 

இந்த நாய் இனம் காவலுக்கு மிகவும் சிறந்த நாய் தான் ! சிம்புளா சொல்லனும்னா இந்த நாய் ஒரு "அலெர்ட் ஆறுமுகம் ".
ஆமாங்க இந்த நாய் எப்பவுமே அலெர்ட் ஆஹ் இருக்கும் , நீங்க நம்பி காசி ரமேஸ்வரம்னு போயிடு வரலாம் வீட்டு பொருள் எல்லாம் பத்ரம இருக்கும் .
இதுவே தப்ப ட்ரைனிங் குடுத்தோம் ,திருடனுக்கோ இல்ல நமக்கோ 1 கிலோ கறி மட்டும் கடிச்சு எடுத்துரும்.

5அலாச்கன் மலமுத்ஸ் 

இந்த நாய் இனம் எதையுமே கொஞ்சம் லேட்டா தான் கத்துக்கும் . சோ , நீங்க பொறுமையா தான் அதுக்கு சொல்லி தரனும் .
இந்த நாயோட பெசாளிடியே அது குலைக்கிறது தான் . ஆமா , சாப்பாடு வேணும் நா போலைடாவும் , சோறு போடலனா வைலெண்டாவும் கத்துமாம் .

4ஜெர்மன்  ஷேபர்ட்ஸ் 

அறிவாளி நாய் நா அது நம்ம ஜெர்மன் செபர்ட் தான் .அதே சமயம் கொலை வேறில கடிக்கவும் செய்யும்.
இது சஎன்டிஸ்ட் மாதிரி எதாவது நொண்டிகிட்டே இருக்கும் . இந்த நாய வளர்தவங்களுக்கு இது தெரியும். 

3ஹஷ்கீஸ் 

என்ன தான் பனிக்கட்டி நாயா இருந்தாலும் , 15 பேர கடிச்சே கொன்றுக்கு இந்த நாய் .
எது எப்படியோ நம்ம ஊரு கிளைமேடுக்கு ,இந்த நாய் வளர்க்க முடியாது, நம்ம தப்பிச்சோம் இந்த நாய்கிட்ட இருந்து.

2ராட்வீளர் 

ராட்வீளர் , உண்மையா சொல்லனும்னா, இந்த நாய் இனம் கொஞ்சம் டேஞ்சர் தான் .
இந்த நாய் ஒரு வயசுலேயே எல்லாத்தையும் கத்துக்கும் ,கடிக்கவும் சேத்து.

1பிட் புல் 

பிட் புல் ,இது தான் அதிக உயிர் செத்த எற்படுதிருக்கு .
நீங்க என்ன வேலை குடுத்தாலும் , 100 பெர்சென்ட் முழு முயற்சியோட செய்யும் .
எது எப்படியோ , இந்த லிஸ்ட பாத்துட்டு உங்க நாயெ அவுத்து விட்டுராதிங்க , நம்ம நல்ல வளத்தா புலி கூட பாசமா பழகும் .

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.