உலகிலேயே மிக அதிக சொத்துக்கள் வைத்துள்ள முதல் பத்து நடிகர்கள்

திரைப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சரி, உலகத்திலேயே அதிக சொத்துக்கள் கொண்ட நடிகர்கள் யாராக இருக்கும் என்கிற கேள்வி  எல்லோருக்கும் இருக்கும். அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் , ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் மற்றும் உலகிலுள்ள அனைத்து திரைப்பட துறைகளிலும் சேர்த்து அதிக சொத்துக்கள் கொண்ட நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளோம்.

நமது இந்தியாவை சேர்ந்த நடிகர்கள் கூட இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். வாருங்கள் பார்க்கலாம்.

10ஜாக்கி சேன் – (Jackie Chan )350 மில்லியன்

அட நம்ம ஜாக்கி சேன்! ஹாங்காங்கில் பிறந்த இவர் நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர் என  திரைத்துறையின் எல்லா பரிமாணங்களிலும் வேலைசெய்திருக்கிறார். 1960 களில் இருந்தே திரைத்துறையில் காலடி வைத்த இவர் 150 க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். இவரது வித்யாசமான சண்டைக்காட்சிகள், காமெடி டைமிங்கில் அசத்தும் ஜாக்கி சேன் நமது பட்டியலில் 10 வது இடத்தை பிடித்துள்ளார்.

9டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks )- 350 மில்லியன்

1956 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்து ஹாலிவுட்டில் சிறந்த  நடிகரான டாம் ஹாங்க்ஸ் தற்போதைய சொத்து மதிப்பு 350 மில்லியன் .

8சில்வெஸ்டர் ஸ்டாலன்  (Sylvester Stallone )- 400 மில்லியன்

நமக்கு தெரிந்த பிரபலமான படங்களான ராக்கி மற்றும் ராம்போ திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 400 மில்லியன் .  அமெரிக்க நடிகரான சில்வெஸ்டர் ஸ்டாலன் ரைட்டர், டைரக்டர், நடிகர் என எல்லா துறைகளிலும் சாதனை படைத்துள்ளார். 1976- 2015 வரை 7 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

7ஜேக் நிக்கல்சன் (Jack Nicholson )- 400 மில்லியன்

அமெரிக்க நடிகரும் , தயாரிப்பாளருமான ஜேக் நிக்கல்சன் பல திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் செய்யும் முக பாவனைகள் , இவர் எல்லா விதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பை அளித்தது.இவர் இதுவரை 12 சிறந்த நடிகருக்கான விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 400 மில்லியன் .

6ஜானி டெப் (Johnny Depp )- 400 மில்லியன்

பைரேட்ஸ் ஆப்  த கரீபியன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான  ஜானி டெப், சிறந்த நடிகருக்கான "கோல்டன் குளோப் அவார்டு" மற்றும் பல அவார்டுகளை இவர் பெற்றுள்ளார்.இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 400 மில்லியன் .

5மெல் கிப்ஸன் (Mel Gibson )- 425 மில்லியன்

தனது 12 வயதிலிருந்தே நடித்துவரும் ஹாலிவுட் நடிகரான மெல் கிப்ஸனின்  தற்போதைய சொத்து மதிப்பு 425 மில்லியன் .

4அமிதாப் பச்சன் (Amitabh Bachchan )- 425 மில்லியன்

நான்கு தலைமுறைகளாக 180 க்கும் மேலான பாலிவுட் திரைப்படிங்களில் நடித்த நமது அமிதாப் பச்சன் தான் உலகிலேயே அதிக சொத்துக்கள் கொண்டுள்ள பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தியாவில் மிகவும் பிரபலமான இவர் 1984 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் ,2015 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் பெற்றுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

3டாம் குரூஸ் (Tom Cruise )- 480 மில்லியன்

சிறந்த நடிகருக்கான கோல்டன் க்ளோப் விருதை மூன்று முறை பெற்ற ஒரே நடிகர் டாம் குரூஸ்.1981 களில் வெளியான எண்ட்லெஸ் லவ் எனும் படத்தில் கதாநாயகனான இவர் , ஹாலிவுட்டில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 480 மில்லியன் .

2ஷாருக்கான்(Shahrukh Khan) - 600 மில்லயன்

கிங் ஆப் கான் மற்றும் பாட்ஷா ஆப் பாலிவுட் என அறியப்படும் ஷாருக்கான் தனது திரைப்பயணத்தில் இதுவரை 80 க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார்.14 பிலிம் பேர் அவார்டு மற்றும் ஏராளமான விருதுகளை பெற்றுள்ள இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 600 மில்லியன் .

1மெர்வ் கிரிஃபின்(Merv Griffin) - 1 பில்லியன்

இவர் திரைத்துறையில் செய்யாத வேலைகளே இல்லை. நடிகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என எல்லா துறைகளிலும் கால்பதித்த அமெரிக்காவை சேர்ந்த நடிகர். இவர் திரைப்படங்களை காட்டிலும் , தொலைக்காட்சி சோக்களில் அதிகம் நடித்துள்ளார். அதோடு இவர் ஒரு நல்ல பிசினெஸ் மேன்.இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 1 பில்லியன், இவரே உலகில் அதிக சொத்துக்கள் கொண்ட ஒரே நடிகர்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.