குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை முறைகள்

தற்காலத்தில் ,உலகின் எந்த ஒரு மூலையிலும்  கொலை, கொள்ளை ,கற்பழிப்பு,வெடிகுண்டு தாக்குதல்கள் என பல குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.இதெல்லாம் இப்போ எல்லார்க்கும் சாதரணமா போச்சு.சில சமயம் பேப்பர் படிக்கும் போது தோணும் ,நான் ஆட்சியில இருந்தா அவன கொடூரமான தண்டனை குடுப்பேன்னு யோசிசுருப்போம்.
ஆனா, சில நாடுகளில் முந்தய காலங்களில் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகள் நமது கற்பனைகளையும் தாண்டி இருக்கு . 
ஆனா ! விக்ரம் ஐ படத்துல சொல்ற மாதிரி ! இது அதுக்கும் மேல .
இந்த பதிவை இதயம் பலவீனமானவர்கள் படிப்பதை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

10எண்ணெய்ச்சட்டியில் வாட்டுதல் 

நம்ம எல்லாரும் தாத்தா பாட்டிகிட்ட நரகத்துக்கு போனா என்ன நடக்கும் , என்ன பண்ணுவாங்கனு எல்லாம் கேற்றுக்கோம்.ஆனா பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து மற்றும் சீனாவில் குற்றம் செய்பவர்களை எண்ணெய்ச்சட்டியில் சாகும் வரை பொறிக்கின்றனர். 

9சிலுவையில் அறைதல்

மரத்தாலான கட்டையில் குற்றவாளியை பெரிய ஆணிகள் கொண்டு அறைந்து பல நாட்களுக்கு தொங்க விடுகின்றனர்.இதை பார்க்கும் மக்களுக்கு குற்றங்கள் செய்யும் எண்ணம் அடியோடு களையெடுக்கப்படும் என நம்பினார்.

8மனித உடலில் இருந்து தோலை உரித்தெடுத்தல்

நம்ம ஞாயிற்று கிழமை பாய் கறிக்கடைக்கு கறி வாங்க போறப்ப பாத்துருப்போம் ,ஆடு தோலுரித்து தொங்கவிடப்பட்டிருக்கும்.அது போலவே ,குற்றவாளிகளை தோலுரித்து மக்களின் பார்வைகெட்டும் வகையில் தொங்கவிடுகின்றனர்.இப்படி தோலுரித்த நபர் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறுவதாலும் , அதிர்ச்சியினாலும், அல்லது நோய் தொற்றினாலும் ஓரிரு நாட்களுக்குள் இறந்துவிடுகின்றனர்.  

7குடலை வெளியே எடுத்தல் 

இங்கிலாந்து ,நெதர்லாந்து,ஜப்பான் போன்ற நாடுகளில் பல வருடங்களுக்கு முன்பு குற்றவாளிகளின் வாயிற்று பகுதியை இரண்டாக வெட்டி உணவுப்பாதையில் உள்ள அனைத்து குடல் மற்றும் அனைத்து உறுப்புகளையும் வெளியே எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கின்றனர்.

6முள் கழுத்து வளையம்

பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வாழ்ந்த ஆப்ரிக்க அடிமைகளை துன்புருதுவதர்க்கு இந்த முள் கழுத்து வளைய முறை பயன்படுதபட்டதாக வரலாறு கூறுகிறது.இது கழுத்தில் நிரந்தரமாக பொருத்தப்பட்டதால் ,குற்றவாளி தூங்கவோ அல்லது குனிந்து எந்த வேலையும் செய்ய முடியாமல் தன வாழ் நாள் முழுவதும் நரக வேதனையை அனுபவித்து இறக்கின்றனர்.

5கூறிய மற்றும் நீளமான கம்பியை உடலில் செலுத்துதல் 

கூரான கம்பியை குற்றவாளிகளின் வாயினுள் செலுத்தி மற்றொரு உடற் பாகத்தின் வழியாக வெளியே எடுத்து துன்புறுத்தி தண்டனை வழங்கியுள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

4யானை மிதி 

நமக்கு அவ்வப்போது கோவிலில் ஆசிர்வாதம் வழங்கும் இந்த யானை முறையாக பயிற்சியளித்தால் உயிரை மிதித்தே கொள்ளும்.தெற்கு ஆசிய நாடுகளில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குற்றவாளிகளை ஒரு பெரிய காலின் மீது படுக்க செய்து யானையை மிதிக்க வைத்து கபாலத்தை சிதைத்துள்ளனர்.

3வெண்கல காளை

தன்னை எதிர்த்தவர்களை எவ்வாறு கொள்ளலாம்னு கிரீஸ் நாட்ட ஆண்ட மன்னன் ஒருவனால் தான் இந்த வெண்கல காளை தண்டனை முறை தோன்றியது.
இந்த வெண்கலத்தால் ஆனா இந்த காளை பார்பதற்கு உண்மையான காளை அளவிலும் , கொல்லணும்னு நினைகுரவங்கள உள்ள போடுறதுக்கு தோதா  ஒரு கதவையும் வச்சு வடிவமசுருகாங்க.
இதுல ஒலிப்பெருக்கி போல தோற்றமுள்ள ஒரு பொருளையும் உள்ள வச்சு செஞ்சுருக்காங்க.இது எதுக்குன்ன இந்த வெண்கல காளையின் அடியில்நெருப்பு போட்டு பத்தவைக்கும் போது உள்ள இருப்பவர்கள் அலறுவதை காளை கத்துவது போல் மாற்றுவதற்கு இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது .இதை வடிவமைத்தவரை உள்ளே இறங்கி சரியாக வேலை செய்கிறதா என்று பார் என்று மன்னர் கூற , அவரும் இறங்கினார்.
மன்னர் ,உண்மையிலேயே நெருப்பு பற்றவைத்து சோதனை செய்தால் என்ன என்று நினைத்து வடிவமைதவரையே உள்ளே தள்ளி பலியாக்கிவிட்டார்.

2உடலை சரிபாதியாக வெட்டுதல் 

குற்றவாளிகளை உயிருடன் இரண்டாக வெட்டும் இப்பழக்கம் பல்வேறு பகுதிகளில் இருந்துள்ளது என பல சான்றுகள் இருந்த போதிலும் ,இல்லை என ஒரே ஒரு சான்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1உயிருடன் ஆயிரம் துண்டுகளாக வெட்டுதல்

இது சீனாவில் மக்கள் முன்னிலையில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு வழங்கப்படும் ஒரு கொடூரமான தண்டனையாகும்.இந்த தண்டனை 1905 வரை சீனாவில் வழக்கத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த நிகழ்வின் போது குற்றவாளி மக்கள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பாகங்களாக வெட்டி எடுக்கின்றனர்.இந்த தண்டனை நிறைவேற்றுபவரின் கடமையே முடிந்த அளவிற்கு பாகங்களை வெட்டி எடுக்கவேண்டும் உயிரை எடுக்காமல்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.