உலகில் விநோதமாக மற்றும் வித்யாசமாக  கொண்டாடப்படும் விழாக்கள்

பிறப்பு முதல் இறப்பு வரை நாம் அனைவரும் கடவுளின் பெயராலோ அல்லது வழக்கத்தின் பேரிலோ பல விழாக்களை கொண்டாடி வருகிறோம்.அனால் உலகின் சில பகுதிகளில் பல வினோதமான விசயங்களை விழாக்களில் செய்கின்றனர்.
அப்படி என்ன தான் பண்றாங்க ? வாங்க பாக்கலாம்.

10அளவு குத்தும் மாரியம்மன் பண்டிகை

இந்த பண்டிகை பெரும்பாலும் இந்தியாவின் தெற்கு பகுதிகளும் மற்றும் தமிழ் நாட்டிலும் நடைபெறுகிறது . இவ்விழாவின் போது உடலின் எந்த பகுதியிலும் கூரான கத்தி போன்ற கம்பிகளை குத்தி தனது இறையாண்மையை கடவுளுக்கு கானிக்கையாகுகின்றனர்.
இவ்ளோ பெரிய கம்பிய குத்திகுரின்களே வலிக்கலயானு கேட்ட எல்லாம் எங்க மாரியாத பாதுக்குவானு சொல்றாங்க.
நம்ம கொண்ட்டாடும் இந்த பண்டிகை வெளிநாடு வர்லும் பேமஸ்!

9தக்காளி சண்டை 

கட்டையில அடிசுகிட்டு சண்ட போடுறத பாத்துருப்போம் , கைல அடிசுகிடு சண்ட போட்டு பாத்துருக்கோம் இதென்னப்பா தக்காளி சண்டைனு பார்கிரிங்கலா ?
ஸ்பெயின்ல இருக்குற வாலேன்சியன் என்கிற நகரத்துல தான் இந்த தக்காளி சண்டை 29 ஆகஸ்ட் மாசம் ஒவ்வொரு வருசமும் கொண்டாடுறாங்க!.
இத கேட்குரப்ப ,இத ஏன் கொண்டாடுறாங்க எதுக்கு கொண்டாடுறாங்கனு தெரிஞ்சிக்க உங்கள மாதிரியே எங்களுக்கும் ஆர்வமா இருந்தது .
29 ஆகஸ்ட் 1945 ஆம் ஆண்டு வாலேசியன் நாட்டுல இருக்குற எல்லா இளைஞர்களும் ஜெயன்ட்ஸ் அண்ட் பிக் பிகர்ஸ் என்கிற கூடத்தில் கலந்துகொள்ளும் போது ,ஒருவர் மக்களின் ஆரவாரத்தின் போது தவறி அருகில் இருந்த மர்த்கட் தக்காளி கூடையில விழுந்திருக்கிறார் . இதை பார்த்த மக்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை ,ஒருவருக்கொருவர் தக்காளி வீசி ஆரவாரம் செய்தனர்.இது காவல்துறை வந்து தடியடி நடத்தும் வரை தொடர்ந்தது.இதை  தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இவ்விழா நடைபெற்று வருகிறது.

8புல்லட் எறும்பு கையுறை

அமேசான் மலைகாடுகளில் வாழும் சாடரே மாவே எனும் காட்டு வாசிகள் ,தனது 12 முதல் 20 வயதுள்ள குழந்தைகளை பத்து நிமிடங்கள் "புல்லட் எறும்பு" எனப்படும் மலை வாழ் எறும்புகள் நிறைந்துள்ள கையுறையை அணிய சொல்லுகின்றனர்.இதை செய்பவர்கள்  ஒரு சிறந்த ஆண் மகன் என அறியப்படுகின்றனர்.இந்த நிகழ்வின் போது யார் எறும்பு கையுறை அணிந்துல்லாரோ அவர் நடனமும் ஆட வேண்டுமாம்.
அட பாவிகளா ! எறும்பையும் கடிக்க விட்டுட்டு ஆட வேற செய்யனுமா! நல்ல வருவீங்களே மக்களே 
இந்த எறும்பு கடிக்கும் வலி ,நெஞ்சிலே புல்லட் பாயும் வலிக்கு நிகரானது.

7எநோமாமி - காட்டுவாசிகள் 

எநோமாமி - காட்டுவாசிகள் :
உறவினரின் மரணமானது எல்லார் மனதையும் காயப்படும் மற்றும் இயற்கையை மனிதன் புரிந்துகொள்ளும் ஒரு தருணமாகும்.உலகம் முழுவதும் எல்லா பிரிவினை சேர்த்தவரும் புதைத்தோ அல்லது எரித்தோ உடலை அகற்றுகின்றனர்.எநோமாமி எனப்படும் காட்டு வாசிகள் உடலை எரித்து பிறகு அதிலிருந்து பெரும் சாம்பலை ஒரு வகையான சூப்புடன் கலந்து பருகுகின்றனர்.இதை செய்வதன் மூலம் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைவதாகவும் ,செய்யாவிட்டால் மீதியிருப்போரை ஆவி வேட்டையாடும் என்றும் நம்புகின்றனர்.

6பற்களை மேன்மைபடுத்தும் விழா

புத்த மதத்தை சேர்ந்த பேலன்ஸ் இன மக்கள் பற்களை மேன்மைபடுத்தும் விழாக்களை கொண்டாடுகின்றனர் . ஆண் மற்றும் பெண் இருபாலினரும் இதை கட்டாயமாக திருமணத்திற்கு முன்பாகவோ அல்லது திருமணத்தின் போது செய்ய வேண்டும்.அவர்கள் பற்களை காமம், பேராசை, கோபம், குழப்பம் மற்றும் பொறாமை போன்ற காரணிகளாக பார்க்கின்றனர்.அதனால், இதை செய்வதன் மூலம் கேட்ட சக்திகளிளிருந்தும் விடுபடலாம் என நம்புகின்றனர்.

5வித்யாசமான திருமணம்

இந்தோனேசியாவில் வாழும் தைடங் இனத்தை சேர்ந்த மக்கள் திருமணத்தை வித்தியாசமாக நிகழ்த்துகின்றனர்.மணமகன் கட்டாயமாக மணமகளின் மனதை கவரும் வண்ணம் காதல் பாடல்களை பாட வேண்டும் . மணமகளிற்கு பாடல்கள் பிடித்திருந்தால் மட்டுமே மணமகன் மணமகளின் முகத்தை பார்க்க இயலும். இது என்ன பெரிய விநோதம்னு கேட்குறிங்களா ? திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் மூன்று நாட்களுக்கு கழிவறைக்கே செல்ல கூடாது.
இதை பின்பற்றா விட்டால் , தம்பதிகள் வாழ்கையில் துன்பங்கள் பல வந்து சேரும் என இம்மக்கள் நம்புகின்றனர்.

4பினதுடன் நடனம்

ஆமா இதென்ன பெரிய விஷயம் ? எங்க தமிழ் நாட்டுல இத விட செமைய வச்சு குதுவோம்னு சொல்றிங்களா?
வித்யாசம் என்னனா , மடகாஸ்கரை சேர்ந்த இம்மக்கள் பினத கைல வச்சுகிட்டே ஆடுவாங்க.

3உன்னுடன் என் விரலையும் என் நினைவாக எடுத்துசெல்

டானி எனும் காட்டு வாசிகள் தனது உறவினர்கள் மரணிக்கும் போது அவரது பினதுடன் உறவினரது விரல்களும் வெட்டி போடப்டுகிறது.இதை அவர்கள் உறவினரின் மரணத்தை தாங்க முடியாமல் இதை செய்வதாக தெரிவிகின்றனர்.
யாரேனும் இறந்துவிட்டால் ஒரு மாதம் அல்லது ஒரு வருடம்  அழுதுவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் இந்த வேகமான உலகில் இப்படியும் சிலர்.

2பிறந்த குழந்தையை தூக்கி எரியும் விழா

இப்போ எந்த சாப்பாட்டுலயும் சத்தே இல்ல ! அப்படியே இருந்தாலும் அத நம்ம சாப்புடுறது இல்ல ! இதான பல தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமையே போகுது. இதுக்கு கடவுளுக்கு வேண்டுதல் வைகுரதுதான் ஒரே வழின்னு நினச்சு போறாங்க.
இந்தியாவுல  இருக்க ஸ்ரீ சாண்டேச்வர் கோவிலில் வேண்டுதல் மூலம் பிறந்த குழந்தைகள 50 அடிக்கு மேல இருந்து ஒருத்தர் எரிய கீழ பெற்றோர்கள் நின்று துணியில் பிடிக்கவேண்டும்.
எது எப்படியே குழந்தைக்கு சேதாரம் ஆகாம இருந்தா சேரி பாஸ்.

1மொகரம்

ஷியா வகையை சேர்ந்த முஸ்லிம் நண்பர்கள்  அஷுரா என்னும் விழாவின் போது முட்கள் நிறைந்த சாட்டை அல்லது கத்தியை கொண்டு தன்னை தானே தக்கிகொள்கின்றனர்.இது வயது பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொள்கின்றனர்.

மௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.